ரஷ்யாவுக்குத் தண்டனை: உக்ரேன் வலியுறுத்தியது

உக்­ரேன் மீது போர் தொடுத்த ரஷ்­யாவைக் கண்­டிக்க வேண்­டும் என்று உக்­ரே­னிய அதி­பர் ஸெலென்ஸ்கி கோரிக்கை விடுத்து இருக்­கி­றார். நியூ­யார்க்­கில் நடக்­கும் ஐநா பொதுச் சபை கூட்­டத்­தில் காணொளி மூலம் அவர் உரை­யாற்­றி­னார்.

போர் நடு­வர் மன்­றம் எனும் ஒன்றை சிறப்பு அதி­கா­ரங்­க­ளு­டன் அமைக்க வேண்டும். உக்­ரே­னில் அரங்­கேற்றி வரும் போர் குற்­றங்­க­ளைப் பற்றி அந்த மன்­றம் விரி­வாக விசா­ரணை நடத்த வேண்­டும் என்று அவர் கோரிக்கை விடுத்­தார்.

உக்­ரே­னுக்கு மேலும் ஆயு­தங்­களை வழங்க வேண்­டும். உல­க­ள­வில் ரஷ்­யாவை கண்­டிக்க வேண்­டும் என்­பவை உள்­ளிட்ட அமைதி வழி­முறை ஒன்­றை­யும் உக்­ரே­னிய அதி­பர் அந்­தப் பேரவை கூட்­டத்­தில் முன்­வைத்­தார். கூட்­டத்­தில் அவ­ரின் உரைக்கு பலத்த ஆத­ரவு இருந்­தது.

ரஷ்ய அதி­பர் புட்­டின் 300,000 ராணுவ சேமப் படை­யி­னரை பணிக்­குத் திரும்­பும்­படி அழைப்பு விடுத்த அதே­நா­ளன்று, ஐநா­வில் ஸெலென்ஸ்கி பேசி­னார்.

இத­னி­டையே, ஐநா கூட்­டத்­தில் உரை­யாற்­றிய பிரிட்­டிஷ் பிர­த­மர் லிஸ் டிரஸ், ரஷ்­யாவை வீழ்த்தி உக்­ரேன் வெற்றி பெறும்வரை உக்­ரே­னுக்கு ராணுவ உதவி தொடர்ந்து வழங்­கப்­படும் என்று சூளு­ரைத்­தார். ஐநா கூட்­டத்­தில் பல தலை­வர்­களும் ரஷ்ய அதி­ப­ரைக் கண்­டித்­த­னர்.

“உக்­ரேன் மீது போர் தொடுத்து அதில் ரஷ்யா தோல்வி அடைந்­து­விட்­டது. ரஷ்யா­வின் அந்த நட­வ­டிக்­கைக்கு எதி­ராக மேற்­கத்­திய நாடு­கள் உக்­ரே­னுக்கு வலுவான ஆத­ரவு அளிக்­கின்­றன.

“‘இதைத்­தான் அதி­பர் புட்­டி­னின் செயல்­கள் காட்டி இருக்­கின்­றன,” என்று பிரிட்டிஷ் பிர­த­மர் கூறினார்.

இவ்­வே­ளை­யில், உக்­ரே­னில் போராட சேமப் படை வீரர்­க­ளைத் திரட்­டப் போவ­தாக ரஷ்ய அதி­பர் புட்­டின் அறி­வித்­ததை அடுத்து ரஷ்­யா­வின் பல நகர்­க­ளி­லும் ஆர்ப்­பாட்­டங்­கள் கிளம்­பி­ய­தாக ­ரஷ்ய சுயேச்­சை மனித உரிமை அமைப்­பான ஓவிடி-இன்ஃபோ தெரி­வித்­தது.

நாடு முழு­வ­தும் 39 நகர்­களில் கிட்­டத்­தட்ட 1,307 பேர் கைதா­ன­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. மாஸ்­கோ­வில்­தான் ஆக அதி­க­மாக 527 பேரை அதி­கா­ரி­கள் கைது செய்­த­னர். அதி­பர் புட்­டின் உக்­ரேன் மீது படை­யெ­டுத்து இருப்­பதை ஆட்­சே­பித்து அந்த ஆர்ப்­பாட்­டங்­கள் நடந்­தன.

இத­னி­டையே, ஆர்ப்­பாட்­டங்­க­ளுக்கு யாரா­வது ஏற்­பாடு செய்­தால் அல்­லது அவற்­றில் கலந்­து­கொண்­டால் 15 ஆண்டு வரையிலான சிறைத்­தண்­டனை விதிக்க முடி­யும் என்று மாஸ்கோ அதி­கா­ரி­கள் எச்­ச­ரித்­த­னர்.

ஆனாலும் அதை­யும் மீறி ஆர்ப்­பாட்­டம் நடந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. புட்­டி­னின் அறி­விப்­பைத் தொடர்ந்து ரஷ்­யா­வை­விட்டு வெளி­யே­று­வ­தற்­கான ஒரு வழி விமா­னப் பய­ணச் சீட்டு விலை உயர்ந்து­விட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!