அமெரிக்க வட்டி உயர்வு; ஆசிய சந்தைகள் சரிவு

உலகப் பொருளியல் அச்சம்; பங்குச் சந்தைகளில் எதிரொலி

அமெ­ரிக்க மத்­திய வங்கி நேற்று தனது முக்­கிய வட்டி விகி­தத்தை 0.75 விழுக்­காடு உயர்த்­தி­யது.

வட்­டியை உயர்த்­தி­ய­தோடு மட்­டு­மின்றி, முத­லீட்­டா­ளர்­கள் எதிர்­பார்த்­த­தை­விட மேலும் வட்டி உயர்வு இடம்­பெ­றும் வாய்ப்பு இருப்­ப­தா­க­வும் அந்த வங்கி தெரி­வித்­தது.

இத­னை­ய­டுத்து உல­கப் பொரு­ளி­யல் வளர்ச்சி வேகம் குறை­யும் என்ற அச்­சம் அதி­க­மா­னது. அந்த அச்­சம் ஆசி­யப் பங்­குச் சந்­தை­களில் எதி­ரொ­லித்­த­தால் சந்­தை­கள் நேற்று வீழ்ச்சி கண்­டன.

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் குறியீடு நேற்று தொடக்­கத்­தி­லேயே 0.28% சரிந்­தது. அந்­தச் சரிவு நேற்­றுப் பிற்­ப­கல் 3.31 மணி­ய­ள­வில் 0.17% ஆக இருந்­தது.

அமெ­ரிக்­கா­வுக்­கும் சீனா­வுக்­கும் இடை­யில் பதற்­றம் அதி­க­ரித்து வரும் வேளை­யில், வட்­டார அள­வில் பார்த்­தால் ஹாங்­காங் பங்­குச் சந்­தை­தான் நேற்று மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­டது.

சீனா­வின் பொரு­ளி­யல் வேகம் குறை­வ­தும் அமெ­ரிக்க மத்­திய வங்­கி­யின் வட்டி உயர்­வும் சேர்ந்து நேற்று ஹாங்­காங்­கின் ஹாங் செங் பங்­குச் சந்­தையை 2.6% இறக்­கி­விட்­டன. ஜப்­பான், தென் கொரியச் சந்­தை­கள் 0.6% இறங்­கின.

ஷாங்­காய் பங்குச் சந்தை 0.27%க்கு குறைந்­தது. இந்த ஆண்­டில் ஐந்­தா­வது முறை­யாக அமெரிக்க மத்­திய வங்கி வட்டி உயர்வை நடை­மு­றைப்­படுத்தி இருக்­கிறது.

அதன் கார­ண­மா­க­வும் ரஷ்ய-உக்­ரேன் போர் மேலும் சூடு­பி­டிப்­ப­தன் விளை­வா­க­வும் அமெ­ரிக்க டாலர் 20 ஆண்டு­களில் இல்­லாத அள­வுக்கு மதிப்பு கூடி­யது.

இதன் விளை­வாக ஆசியப் பங்­கு­களில் முத­லீடு செய்­திருப்­போர், தங்கள் முத­லீ­டு­களை மீட்­டுக்கொண்டு அமெ­ரிக்க டாலர் சொத்­து­களில் முத­லீடு செய்­யும் வாய்ப்பு இருக்­கிறது என்று பல­ரும் கவலை தெரி­வித்­த­னர்.

சிங்­கப்­பூர் நாண­யத்­தின் மதிப்பு நேற்று பிற்­ப­கல் 4.08 மணிக்கு 0.2% குறைந்து ஒரு டால­ருக்கு 1.4200 வெள்­ளி­யாக இருந்­தது.

அமெ­ரிக்க டாலர் தொடர்ந்து வலு­வ­டைந்­தால் சீனா விரை­வில் தன் பொருளி­ய­லைத் திறந்­து­வி­டா­மல் இருந்­தால், ஆசி­யப் பொரு­ளி­யல் வளர்ச்சி மேலும் மெது­ வ­டை­யும் ஆபத்துள்ளது.

இப்­படி ஒரு நிலைமை ஏற்­பட்­டால், ஆசி­யா­வின் புதிய சந்­தை­களில் இருந்து பெரும் பணம் வெளி­யா­கி­வி­டும் என்று ஆர்­ஹெச்பி சிங்­கப்­பூர் நிறு­வ­னத்­தின் பங்கு ஆய்­வுத் துறைத் தலை­வர் சேகர் ஜாய்ஸ்­வால் கூறி­னார்.

இருந்­தா­லும் இதர ஆசிய நாண­யங்­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில், சிங்­கப்­பூர் வெள்ளி வலு­வாக இருப்­ப­தால் சிங்­கப்­பூர் கொஞ்­சம் சிறப்­பா­கவே செயல்­படும் என்­றா­ர­வர்.

சிங்­கப்­பூர் நாண­யத்­தைத் தொடர்ந்து வலு­வாக வைத்­தி­ருந்து அதன் மூலம் சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் பண­வீக்­கத்­தைச் சமா­ளித்து வரு­கிறது.

சிங்­கப்­பூர் நாண­யம் வலு­வாக இருப்­ப­தால் அதனை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட முத­லீ­டு­கள் கவர்ச்­சி­க­ர­மா­ன­வை­யாக இருக்­கின்­றன என்று அவர் குறிப்­பிட்­டார்.

அமெ­ரிக்க மத்­திய வங்கி கிட்­டத்­தட்ட 14 ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்கு தனது வட்டி விகி­தத்தை 0.75% உயர்த்­து­வ­தாக நேற்று அறி­வித்­தது. 3% முதல் 3.25% வரை வட்டி விகி­தம் உயர்­வ­தற்கு இலக்கு உள்­ள­தா­க­வும் அது தெரி­வித்­தது.

இதன் விளை­வாக கடன் வாங்­கு­வ­தற்­கான செலவு மேலும் அதி­க­ரிக்­கும். அது தொடர்ந்து அப்­ப­டியே இருந்து வரும் என்று அந்த வங்கி குறிப்­பிட்­டுள்­ளது.

சந்­தை­யில் தேவை­களை மட்டுப்ப­டுத்த வட்டி விகித அதி­க­ரிப்பு அவ­சி­ய­மா­ன­தாக இருக்­கிறது என்று மத்­திய வங்கி தலை­வர் ஜெரோம் பவல் தெரி­வித்­தார்.

அமெ­ரிக்க வட்டி விகித உயர்­வைத் தொட­ர்ந்து உல­கின் பல நாடு­க­ளி­லும் வட்டி விகி­தம் மேலும் கூடும் என்று தெரிவிக்­கப்­பட்­டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!