இந்தியா முழுவதும் வரலாறு காணா பயங்கரவாத எதிர்ப்பு சோதனை: 106 பேர் கைதாயினர்; தமிழகத்தில் 10 பேர்

இந்­தி­யா­வில் பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ராக நேற்று இடம்பெற்ற நாடு­தழு­விய சோத­னை­களில் மொத்­தம் 106 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாட்­டில் பயங்­க­ர­வாத செயல்­களை அரங்­கேற்ற ஆத­ரவு அளித்­த­தா­கக் கூறப்­பட்­ட­தை­யொட்டி 'பாப்­பு­லர் ஃபிரண்ட் ஆஃப் இந்­தியா' என்ற அமைப்­பைச் சேர்ந்­த­வர்­கள் கைதா­ன­தாக தேசிய புல­னாய்வு முகவை அமைப்­­பைச் சேர்ந்த அதி காரி­கள் தெரி­வித்­த­னர்.

கேர­ளா­வில்­தான் ஆக அதி­க­மாக 22 பேர் பிடிபட்­ட­னர். மகா­ராஷ்­டிரா (20), கர்­நா­டகா (20), தமிழ்­நாடு (10), அசாம் (9), உத்திரப் பிர­தே­சம் (8), ஆந்­திரா (5), மகா­ராஷ்­டிரா (4), புதுச்­சேரி (3), புது டெல்லி (3), ராஜஸ்­தான் (2) ஆகிய மாநி­லங்­க­ளி­லும் பல­ர் சிக்­கி­னர்.

இன்­றைய தேதி­யில் இது­வரை இது­போன்ற ஆகப்­பெ­ரிய அள­வில் சோதனை இப்­போ­துதான் நடக்­கிறது என்று அதி­கா­ரி­கள் கூறினர். மேல் விவ­ரங்­கள் உட­ன­டி­யாகத் தெரி­ய­வில்லை.

தேசிய புல­னாய்வு முகவை, அம­லாக்­கத்­துறை, மாநில காவல்­துறை ஆகி­ய­வற்­றின் அதி­கா­ரி­கள் சோதனை நடத்­தி­னர்.

பயங்­க­ர­வா­தத்­திற்கு நிதி உதவி செய்­வது, பயிற்சி முகாம்­களை நடத்­து­வது, குறிப்­பிட்ட அமைப்­பு­களில் சேரும்­படி மக்­களை தீவி­ர­மாக மனம் மாற்­று­வது ஆகி­ய­வற்றில் சம்­பந்­தப்­பட்டு இருப்­ப­தாக நம்­பப்­படும் பேர்­வ­ழி­க­ளின் வீடு­களில் சோத­னை­கள் நடந்­த­தாக அதி­கா­ரி­கள் குறிப்­பிட்டனர்.

பாப்­பு­லர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு 2006ஆம் ஆண்­டில் கேர­ளா­வில் அமைக்­கப்­பட்­டது.அதற்குப் புது­டெல்­லி­யில் தலைமை­யகம் உள்­ளது.

மனித உரி­மை­க­ளுக்­கும் சிறு­பான்­மை­யி­னர், பிற்­ப­டுத்­தப்­பட்­டோர், தலித் ஆகி­யோ­ரின் சுதந்­தி­ரத்­திற்­கும் பாடு­படும் தேசிய இயக்­கம் என்று அந்த அமைப்பு தன்னைக் குறிப்­பிட்டு வரு­கிறது.

அந்த அமைப்பு, நேற்­றைய சோதனை­களை கடு­மை­யா­கக் குறை­கூ­றி­யது. சோதனைகளை எதிர்த்து பல மாநி­லங்­களில் போராட்­டங்­கள் நடந்­தன.

அவற்­றில் கலந்­து­கொண்டவர்­களும் கைதா­யி­னர் என்று ஊடகத் தக­வல்­கள் கூறின. சோத­னை­கள் புதன்­கி­ழமை பின்­னி­ரவு 1 மணிக்­குத் தொடங்­கி­யது. நேற்று அதி­காலை 5 மணிக்கு அது முடி­வ­டைய இருந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

அவற்றில் 1,500க்கும் மேற்­பட்ட அதிகா­ரி­கள் ஈடு­பட்­ட­னர்.

பல ஆவ­ணங்­கள், 100க்கும் மேற்­பட்ட கோப்­பு­கள், கைப்­பே­சி­கள், மடிக்­க­ணி­னி­கள் ஆகி­ய­வற்­றை­யும் இதர பல­வற்­றை­யும் அத­கா­ரி­கள் கைப்­பற்றி உள்­ள­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

அந்­தச் சோத­னை­கள் தொடர்­பில் நேற்று உட­ன­டி­யாக உள்­துறை அமைச்­சர் அமித் ஷா தலை­மை­யில் தலை­ந­க­ரில் உயர்­நி­லைக் கூட்­டம் நடந்­தது.

தேசிய பாது­காப்பு ஆலோ­ச­கர் அஜித் தோவல், மத்­திய உள்­துறை செய­லா­ளர் அஜய் பல்லா, புல­னாய்வு முகவை பொது இயக்­கு­நர் தின்­கர் குப்தா ஆகி­யோ­ரு­டன்­ திரு அமித் ஷா ஆலோ­ச­னை நடத்தினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!