‘மலேசியா சியாக்!’ உணவு நிலையம் அக்டோபர் 4 வரை மூடப்பட்டது

ஈசூ­னில் உள்ள நார்த்­பாயிண்ட் சிட்டி கடைத்­தொ­கு­தி­யில் இருக்­கும் 'மலே­சியா சியாக்!' உண­வு நிலையம் இரண்டு வாரங்­களுக்கு மூடப்­பட்­டுள்­ளது. அங்கு பூச்சிகள் மொய்த்­த­தா­கக் கூறப்­பட்­டது.

நிலையத்தைக் கடந்த புதன்­கி­ழமை 22ஆம் தேதி முதல் அக்­டோ­பர் 4ஆம் தேதி வரை மூடும்­படி சிங்­கப்­பூர் உணவு அமைப்பு உத்­த­ர­விட்­டது.

தனது வளா­கத்­தில் கடந்த 12 மாதங்­களில் பூச்­சி­கள் மொய்ப்­பதைத் தடுக்­கத் தவ­றி­ய­தற்­காக 'மலே­சியா சியாக்!' நிலை யத்திற்கு இரண்டு குற்­றங்­க­ளின் பேரில் மொத்­தம் $800 அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டது. ஒவ்­வொரு குற்­றத்­திற்­கும் ஆறு குற்­றப்­புள்­ளி­களும் கொடுக்­கப்­பட்­டன. ஆனால் அவை எந்த வகை பூச்­சி­கள் என்று சிங்­கப்­பூர் உணவு அமைப்பு குறிப்­பி­ட­வில்லை.

அந்த 'மலே­சியா சியாக்!' உண­வு நிலையக் கிளையைத் தற்­கா­லி­க­மாக மூட­வேண்­டும் என்ற உத்­த­ரவு செப்­டம்­பர் 1ஆம் தேதி கிடைத்­த­தா­க­வும் அதைப் பயன்­ப­டுத்தி கிளை­யின் வடி­வ­மைப்பை மாற்றி சுத்­த­மான சூழ­லுக்கு ஏற்­றாற்­போல் மாறிக்­கொள்ள முயற்­சி­கள் இடம்­பெ­று­வ­தாகவும் மலே­சியா சியாக்!' பேச்­சா­ளர் தன்னிடம் கூறினார் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

உண­வைக் கையா­ளும் தனது அனைத்து ஊழி­யர்­க­ளை­யும் மீண்­டும் உண­வுப் பாது­காப்பு, சுத்­தம் ஆகி­யவை குறித்த மறு­ப­யிற்­சிக்கு அனுப்­பப்போவ­தாக 'மலே­சியா சியாக்!' தெரி­வித்­தது.

நார்த்­பாயிண்ட் சிட்­டி­யில் உள்ள மலே­சியா சியாக் உண­வு நிலையம் 12 மாதத்­தில் 12 குற்­றப்­புள்­ளி­க­ளைப் பெற்­றி­ருப்­ப­தாக உணவு அமைப்பு தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!