14 ஆண்டு உச்சத்தின் அருகே சிங்கப்பூர் மூலாதார பணவீக்கம்

உண­வு விலை­களும் சேவை­

க­ளுக்­கா­னக் கட்­ட­ணங்­களும் கடு­மை­யாக உயர்ந்­த­தன் கார­ண­மாக சிங்­கப்­பூ­ரில் ஆகஸ்ட் மாத பண­வீக்க விகி­தம் 14 ஆண்டு காணாத ஏற்­றத்தை நெருங்­கி­யது.

புவி­சார் அர­சி­யல் பதற்­றங்­கள், உல­க­ளா­விய பொருள் விலை­யேற்­றம், விநி­யோ­கத் தொடர் இடை­யூ­று­கள், கணிக்­க­மு­டி­யாக பரு­வ­நிலை போன்­றவை உல­கத்தை இன்­னும் நிச்­ச­ய­மற்ற நிலைக்­குத் தள்­ளும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பண­வீக்க உயர்­வைச் சமா­ளிக்க சிங்­கப்­பூர் முயற்­சி­களை மேற்­கொண்­ட­போ­தி­லும் சவால்­கள் நெருங்­கி­வ­ரு­வதை ஆகஸ்ட் மாதத் தர­வு­கள் உணர்த்­தின.

சிங்­கப்­பூர் குடும்­பங்­க­ளின் செல­வு­க­ளைத் துல்­லி­ய­மா­கப் பிரதி­ப­லிக்­கும் மூலா­தா­ரப் பண­வீக்­கம் ஆண்­டுக்­காண்டு அடிப்­

ப­டை­யில் 5.1 விழுக்­காட்­டைத் தொட்­டது.

தனி­யார் போக்­கு­வ­ரத்து மற்­றும் தங்­கு­மி­டச் செல­வு­கள் இந்த மூலா­தா­ரப் பண­வீக்­கக் கணக்­கீட்டில் சேராது.

ஜூலை மாதம் 4.8 விழுக்­காடே அதி­கமாக இருந்த நிலை­யில் ஆகஸ்ட் மாத நில­வ­ரம் அத­னை­யும் தாண்­டி­விட்டது.

மேலும் 2008 நவம்­ப­ருக்­குப் பின்­னர் இது ஆக அதி­க­மான மூலா­தா­ரப் பண­வீக்­கம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. அந்த மாதத்­தில் இதன் விகி­தம் 5.5 விழுக்­கா­டாக இருந்­ததே ஆக உச்­சம்.

ஆகஸ்ட் மாதத்­தில், பய­னீட்­டா­ளர் விலைக் குறி­யீடு எனப்­படும் ஒட்­டு­மொத்த பண­வீக்­கம் 14 ஆண்டுகளுக்கு முன், அதாவது 2008 ஜூன் மாதம் பதிவான அதே 7.5 விழுக்­காட்டுக்கு அதிகரித்தது. ஜூலை மாதம் இது 7 விழுக்காடாக இருந்தது.

ஆகஸ்ட் மாத பண­வீக்­கம் அத­னை­யும் தாண்டி 14 ஆண்டு உச்­சத்­தைச் சமப்படுத்தியது.

உயர்ந்­து­விட்ட போக்­கு­வ­ரத்து பண­வீக்­கம், அதி­க­ரித்த விடு­

மு­றைக்­கா­லச் செல­வு­கள், வீட­மைப்பு வாட­கை­யில் கடும் ஏற்­றம், உணவு விலை மற்­றும் சேவைக் கட்­ட­ணங்­க­ளின் உயர்வு ஆகி­யன ஒட்­டு­மொத்­தப் பண­வீக்­கத்தை அதி­க­ரித்­து­விட்­டன.

இவ்­வாண்­டின் ஆகஸ்ட் மாத உணவு விலை­கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் 6.4 விழுக்­காடு அதி­க­ரித்­துள்­ளன.

இதன் தாக்­கம் பய­னீட்­டா­ளர்­க­ளைப் பாதித்­த­தாக சிஐ­எம்பி பொரு­ளி­யல் நிபு­ணர் சோங் செங் உன் தெரி­வித்­துள்­ளார்.

மேலும், பொது­மக்­களில் குறிப்­பிட்ட சில பகு­தி­யி­னர் இன்னும் வாடகை வீடு­களில் தங்­கும் நிலை­யில் வாட­கை­கள் உயர்த்­தப்­பட்­டது 'வேடிக்கை'யாக உள்ளதென 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்­தித்­தா­ளி­டம் அவர் கூறி­னார்.

குறிப்­பாக, கொண்­டோ­மி­னிய வீடு­க­ளுக்­கான வாடகை கடந்த ஆண்­டைக் காட்­டி­லும் இந்த ஆண்­டின் ஆகஸ்ட் மாதம் 27.5 விழுக்­காடு அதி­க­ரித்­தது. அதே­போல வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு­க­ளுக்­கான வாட­கை­யும் 21.6 விழுக்­காடு ஏற்­றம் கண்­டது.

இந்த ஆண்­டின் எஞ்­சிய காலப் பகு­தி­யை­யும் சேர்த்து ஆண்டு முழு­மைக்­கு­மான ஒட்­டு­மொத்த பண­வீக்­கம் 5 விழுக்­காட்­டுக்­கும் 6 விழுக்­காட்­டுக்­கும் இடை­யில் தொடர்ந்து நீடிக்­கும் என முன்­னு­ரைக்­கப்­பட்டு உள்­ள­தாக சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் தெரி­வித்துள்­ளது.

அதே­போல மூலா­தா­ரப் பண­வீக்­கம் 3 விழுக்­காட்­டுக்­கும் 4 விழுக்­காட்­டுக்­கும் இடைப்­பட்டு இருக்­கும் என்­றும் கணிக்­கப்­பட்­டுள்­ள­தாக ஆணை­யம் நேற்று கூறி­யது. அத்துடன், இந்த மூலா தார பணவீக்க அதிகரிப்பு அடுத்து வரும் சில மாதங்களுக்கு நீடிக்கக் கூடும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களுக்கான ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 5.7 விழுக் காடாக இருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!