லஞ்ச ஊழல் வழக்கிலிருந்து அம்னோ தலைவர் விடுதலை: தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான சாத்தியம் அதிகரிப்பு

லஞ்ச ஊழல் வழக்கிலிருந்து அம்னோ தலைவர் விடுதலை: தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான சாத்தியம் அதிகரிப்பு

2 mins read
abf23bb1-85ba-4e42-af2a-d351315a99cb
ஷா அலாம் நீதிமன்ற வளாகத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அகமது ஸாஹித் ஹமிடி. படம்: இபிஏ -

மலே­சி­யா­வின் முன்­னாள் துணைப் பிர­த­ம­ரும் அம்னோ கட்­சி­யின் தலை­வ­ரு­மான அக­மது ஸாஹித் ஹமிடி விசா தொடர்பான லஞ்ச ஊழல் வழக்­கு­களில் இருந்து நேற்று விடு­விக்­கப்­பட்­டார். இது அவ­ருக்­கும் அவ­ரது கட்­சிக்­கும் ஊக்­க­மாக அமைந்­துள்­ள­தா­கக் குறிப்­பி­டப்­ப­டு­கிறது. குறிப்­பாக, பொதுத் தேர்­தலை இவ்­வாண்­டி­லேயே நடத்திமுடிக்­கும் சாத்­தி­யத்தை நேற்­றைய நீதி­மன்­றத் தீர்ப்பு அதி­க­ரித்துள்­ளதாகக் கருதப்படு கிறது.

வெளி­நாட்டு விசா முறைக்­கான அர­சாங்­கக் குத்­த­கை­யைப் பெற்ற அல்ட்ரா கிரானா நிறு­வ­னத்­தி­டம் இருந்து 42 மில்­லி­யன் ரிங்­கிட் (US$9.2 மில்­லி­யன்) லஞ்­சம் பெற்­ற­தாக ஸாஹித்மீது 33 குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்டு இருந்­தன.

69 வய­தான ஸாஹித், உள்­துறை அமைச்­ச­ராக இருந்­த­போது அந்த அமைச்­சுக்­காக வெளி­நாட்டு விசா வழங்­கும் முறை­யை­யும் சீனா­வில் வழங்கிவரும் சேவைகளுக்கான குத்­த­கை­யை­யும் அல்ட்ரா கிரானா நிறுவனத்துக்கு நீட்­டிக்க அவர் லஞ்­சம் பெற்­ற­தா­கக் குற்­றச்­சாட்­டு­களில் குறிப்­பி­டப்­பட்டு இருந்­தது.

இதே நிறு­வ­னத்­தி­டமிருந்து 1.15 மில்­லி­யன் சிங்­கப்­பூர் வெள்ளி, 3 மில்­லி­யன் ரிங்­கிட், 15,000 சுவிஸ் பணம், 15,000 அமெ­ரிக்க டாலர் ஆகி­ய­வற்­றைப் பெற்­ற­தாக இதர ஏழு குற்­றச்­சாட்­டு­கள் ஸாஹித் மீது சுமத்­தப்­பட்டு இருந்­தன. இந்தத் தொகையின் மொத்த மதிப்பு US$1.5 மில்லியன்.

இந்­தக் குற்­றச்­சாட்­டு­களை நிரூ­பிக்க அர­சுத்­த­ரப்பு வழக்­க­றி­ஞர்­கள் உறு­தி­யான ஆதா­ரங்­களை முன்­வைக்­கத் தவ­றி­விட்­ட­தாக ஷா அலாம் உயர் நீதி­மன்ற நீதி­பதி முகம்­மது யாஸித் முஸ்­தஃபா தெரி­வித்­த­தாக மலே­சிய ஊட­கங்­கள் குறிப்­பிட்­டன.

குறிப்­பாக, முக்­கி­ய­மான மூன்று அர­சுத் தரப்பு சாட்­சி­யங்­கள் நம்­ப­கத்­த­குந்­த­ன­வாக இல்லை என்று நீதி­பதி தமது தீர்ப்­பில் குறிப்­பிட்­ட­தா­க­வும் அந்த ஊட­கங்­கள் தெரி­வித்­தன. அந்த மூவ­ரும், ஸாஹித் லஞ்­சம் பெற்­ற­தா­கக் கூறப்­பட்ட அல்ட்ரா கிரானா நிறு­வ­னத்­தின் முன்­னாள் நிர்­வா­கி­கள்.

இந்த வழக்­கு­க­ளுக்­கான விசா­ரணை கடந்த ஆண்டு மே 24ஆம் தேதி தொடங்­கி­யது. அர­சுத்­த­ரப்­பில் 18 பேர் சாட்­சி­ய­ம­ளித்­த­னர்.

தீர்ப்­பிற்­குப் பின்­னர் நீதி­மன்­றத்­தின் வெளியே செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய ஸாஹித், நீதி­பதி தமது தீர்ப்பை வெளி­யி­டும் முன் சட்­டத்­தின் எல்லா அம்­சங்­களை ஆராய்­வார் என்ற நம்­பிக்கை வழக்­கின் ஆரம்­பம் முதலே தமக்கு இருந்­த தாகக் குறிப்பிட்டார்.­

இருப்­பி­னும் இவர் மீது இதர 47 குற்­றச்­சாட்­டு­களை இவர் இன்­னும் எதிர்­நோக்­கு­கி­றார். யாப் என்­னும் அறப்­பணி நிறு­வ­னத்­தின் அறங்­கா­வ­ல­ரா­க­வும் காசோ­லை­களில் கையெ­ழுத்­தி­டும் அதி­கா­ரம் பெற்ற ஒரே நப­ரு­மான ஸாஹித், நம்­பிக்கை மோசடி செய்­த­தாக 12 குற்­றச்­சாட்­டு­கள் அவர்­மீது சுமத்­தப்­பட்டு உள்­ளன.

மேலும், 8 லஞ்ச ஊழல் குற்­றச்­சாட்­டு­களும் கள்­ளப்­ப­ணத்தை நல்ல பண­மாக மாற்­று­வது தொடர்­பான 27 குற்­றச்­சாட்­டு­களும் இன்­னும் விசா­ர­ணை­யில் உள்­ளன.