கல்வியில் இந்திய சமூகம் அளப்பரிய முன்னேற்றம்

கல்வியில் இந்திய சமூகம் அளப்பரிய முன்னேற்றம்

3 mins read
0d7f994a-22a5-4ce2-81fa-d8d09bf26e4b
விருது பெற்றவர்களுடன் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன் (இடக்கோடி). மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னத்திடம் விருது பெறும் வள்ளியம்மை லட்சுமணன், 22. (கீழ்ப்படம்). படங்கள்: சிண்டா -
multi-img1 of 2

சிங்­கப்­பூர் இந்­திய மாண­வர்­களில் 95 விழுக்­காட்­டி­னர் இவ்வாண்டு உயர்­கல்­விக்­குப் பிந்­திய படிப்­புக்­குத் தேர்ச்சி பெற்­றுள்­ள­தாக சிண்டா உன்­னத விருது வழங்கும் விழா­வில் உரை­யாற்­றிய துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் பாராட்­டி­யுள்­ளார்.

இரு­ப­தாண்­டு­க­ளுக்கு முன்­னர் இவ்­வி­கி­தம் 80 விழுக்­காட்­டுக்­கும் கீழ் இருந்­தது என்று குறிப்­பிட்ட திரு வோங், இந்த ஆண்டு விருது பெறு­வோ­ரின் எண்­ணிக்கை ஒவ்­வொரு பிரி­வி­லும் குறிப்­பி­டத்­தக்க அள­வுக்கு உயர்ந்­துள்­ளதை சுட்­டி­னார்.

நன்­யாங் பல­து­றைத் தொழிற்­கல்­லூரியில் நேற்று நடை­பெற்ற 31வது விருது வழங்கும் விழா வில், சாதனை அளவாக 782 மாண­வர்­கள் உன்­னத விருது பெற்­றனர். 1992ஆம் ஆண்டு விருது வழங்கத் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவே ஆக அதிக எண்ணிக்கை.

தொடக்­கப் பள்ளி இறு­தி­யாண்­டுத் தேர்­வில் தேர்ச்சி பெற்­ற­வர்­கள் முதல் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் இள­நி­லைப் பட்­டம் பெற்­ற­வர்­கள் வரை 16 பிரி­வு­களில் விரு­து­கள் வழங்­கப்­பட்­டன.

அனைத்­து­லக பெக்­க­ல­ரேட் பிரி­வில் விரு­து­பெற்­ற­வர்­க­ளின் எண்­ணிக்கை இந்த ஆண்டு, 2021ஆம் ஆண்­டை­விட 75 விழுக்­காடு அதி­கம்.

கொவிட்-19 காலம் மாண­வர்­

க­ளுக்கு சவா­லா­ன­தாக இருந்­த­போ­தும் இந்­தத் தேர்ச்­சியை இந்­திய சமூ­கம் எட்­டி­யி­ருக்­கிறது என்று நிதி­ய­மைச்­ச­ரு­மான திரு வோங் குறிப்­பிட்­டார்.

­இணை­யம் வழி கற்­றல், சமூக தனி­மைப்­ப­டுத்­து­த­லின் அழுத்­தத்தைச் சமா­ளித்­தல் ஆகியவற்றுக் கிடையே வகுப்பு மாண­வர்­க­ளு­டன் தொடர்­பி­லி­ருக்க புதிய வழி­

க­ளை மாணவர்கள் கண்டறிந்தனர் என்­றார் அவர்.

கல்வி, விளை­யாட்டு, கலை, தொழில்­நுட்­பத்­தி­றன் போன்ற பல்­வேறு தளங்­களில் உன்­ன­தத் தேர்ச்சி பெற்ற மாண­வர்­க­ளுக்கு சிண்டா ஆண்­டு­தோ­றும் விருது வழங்கி சிறப்­பித்து வரு­கிறது. விருது பெற்­ற­வர்­க­ளுக்கு $150 முதல் $500 வரை பரி­சுத்­தொகை வழங்­கப்­பட்­டது.

"இளை­யர்­கள் தங்­க­ளுக்கு கிடைக்­கும் வாய்ப்­பு­களை முழு­மை­யாக பயன்­ப­டுத்தி முன்­னேற வேண்­டும். சுய­மாக சிந்­திக்­க­வும் தத்­தம் துறை­களில் ஆளு­மை

­க­ளாக உரு­வெ­டுக்­க­வும் தொடர்ந்து உழைக்க வேண்­டும்," என்­றும் வலி­யு­றுத்­தி­னார் விழா­வில் சிறப்பு விருந்­தி­ன­ராக கலந்­து­கொண்ட திரு வோங்.

"அர­சாங்­க­மும் சிண்டா போன்ற சுய உத­விக் குழுக்­க­ளும் வளர்ந்து வரும் இளைய சமூ­கத்­திற்கு தொடர்ந்து பல்­வேறு வழி­களில் ஆத­ரவு அளித்து வரு­வது வர­வேற்­கத்­தக்க ஒன்று. ஒன்­று­பட்ட சமூ­க­மாக தொடர்ந்து உழைத்­ தால் அனைவருக்­கும் சம­மான வாய்ப்­பு­கள் கொண்ட சிங்­கப்­பூரை வடி­வ­மைக்க முடி­யும்," என்­றும் அவர் நம்­பிக்கை தெரி­வித்­தார்.

சிண்­டா­வின் தலை­வ­ரும் பிர­

த­மர் அலு­வ­லக அமைச்­ச­ரு­மான இந்­தி­ராணி ராஜா கடந்த நான்­காண்­டு­களில் விரு­து­பெ­று­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை கணி­ச­மாக உயர்ந்­துள்­ள­தா­கக் கூறி­னார்.

"இந்­திய மாண­வர்­கள் சிறந்து விளங்­கு­வதை இது உணர்த்­து­கிறது. ஆண்­டுக்கு ஆண்டு அவர்­கள் சிறப்­பாக முன்­னே­று­கி­றார்­கள். ஒவ்­வொரு பிரி­வி­லும் விருது­ பெ­று­வோர் எண்­ணிக்கை அதி­

க­ரித்­துள்­ளது," என்­றார் அவர்.

இளை­யர்­க­ளின் சாத­னை­களே சமூ­கத்­தின் ஒட்­டு­மொத்த செயல்­தி­ற­னின் முக்­கிய அள­வீடு என்ற சிண்டா தலைமை நிர்­வாக அதி­காரி அன்­ப­ரசு ராஜேந்­தி­ரன், மாண­ வர்­க­ளுக்கு வழி­காட்ட அதி­க­மா­னோர் முன்­வர வேண்­டும் என்று அழைப்பு விடுத்­தார்.

2019ஆம் ஆண்­டுக்­குப் பிறகு நேர­டி­யாக நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் சிண்டா அறங்­கா­வ­லர் குழு­வின் தலை­வ­ரும் மூத்த அமைச்­ச­ரு­மான தர்­மன் சண்­மு­க­ரத்­னம், உறுப்­பி­னர்­கள், பெற்­றோர்­கள் உள்­ளிட்ட பல­ரும் கலந்­து­கொண்­ட­னர்.

விருது பெற்­ற­வர்­களில் ஒரு­வ­ரான வள்­ளி­யம்மை லட்­சு­ம­ணன், 22, வழக்­க­நிலை தேர்ச்­சிக்­குப் பிறகு பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் தான் விரும்­பிய துறை­யில் சேரு­வ­தற்­கான தகு­தி­யைப் பெற­வில்லை.

ஆயி­னும், அதை தற்­கா­லிக பின்­ன­டை­வா­கக் கருதி முயற்­சி­களை இரட்­டிப்­பாக்கி கணக்­கியல், நிதித்­து­றை­யில் பல­து­றைத் தொழிற்­ கல்­லூ­ரி­யின் உயர் நைட்டெக் சான்­றி­த­ழைப் பெற்­றார் இவர்.

கல்­விப் பய­ணத்­தில் சாதித்த இந்த மாண­வியை துணைப் பிர

­த­மர் வோங் பாராட்­டி­னார்.