ஜூரோங்கில் புதிய ரயில் சந்திப்பு நிலையம்

ஜூரோங்கில் புதிய ரயில் சந்திப்பு நிலையம்

2 mins read
c1cc0675-3a1f-4db2-acab-15e82a896d48
ஆயர் ராஜா உணவு நிலையம் மற்றும் ஈரச்சந்தைக்கான மின்னிலக்க உதவிக் குழுவை போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தொடங்கி வைத்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஜூரோங் லேக் வட்­டா­ரம், ஜூரோங் டவுன் ஹால் ஆகிய இரு எம்­ஆர்டி நிலை­யங்­க­ளை­யும் ஒன்­றி­ணைத்து புதிய ரயில் சந்­திப்பு நிலை­யத்தை உரு­வாக்­கு­வது பற்றி அதி­கா­ரி­கள் ஆராய்ந்து வரு­வ­தாக போக்­கு

­வ­ரத்து அமைச்­சர் எஸ் ஈஸ்­வ­ரன் தெரி­வித்­துள்­ளார்.

ஜூரோங் லேக் வட்­டார நிலை­யம் குறுக்­குத் தீவு எம்­ஆர்டி பாதை­யி­லும் ஜூரோங் டவுன் ஹால் நிலை­யம் ஜூரோங் வட்­டார எம்­ஆர்டி பாதை­யி­லும் அமை­கின்­றன.

"இது­கு­றித்த ஆய்­வில் பொறி­யா­ளர்­களும் நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யக் குழு­வினரும் தொடர்ந்து ஈடு­பட்டு வரு­கி­றார்­கள்.

"வச­திக்­கா­க­வும் மீள்­தி­ற­னுக்­கா­க­வும் நமது எம்­ஆர்டி ரயில் போக்­கு­வ­ரத்து முறை­யில் அர்த்­த­முள்ள தொடர்­பு­களை உரு­வாக்க வேண்­டிய அவ­சி­யம் உள்­ளது," என்­றார் திரு ஈஸ்­வ­ரன்.

வெஸ்ட் கோஸ்ட் டிரைவில் மேம்­ப­டுத்­தப்­பட்ட ஆயர் ராஜா உணவு நிலை­யம் மற்­றும் ஈரச்­சந்­தை­யின் அதி­கா­ரத்­துவ திறப்பு விழா நேற்று நடை­பெற்­றது. இதில் கலந்­து­கொண்ட திரு ஈஸ்­வ­ரன் பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

இணை­யான வழித்­த­டத்­தில் ரயில் பாதை­கள் அமைந்­த­போ­தி­லும் அவை வெவ்­வேறு பயண நோக்­கங்­க­ளுக்­குச் சேவை­யாற்­றக்­கூ­டும் என்று அப்­போது அவர் தெரி­வித்­தார்.

குறுக்­குத் தீவு எம்­ஆர்டி பாதை­யின் இரண்­டாம் கட்­டம் குறித்து கடந்த செவ்­வாய்க்­கி­ழமை திரு ஈஸ்­வ­ரன் அறி­விப்பு வெளி­யிட்­ட­போது அந்த வழித்­த­டத்­தில் ஆறு நிலை­யங்­கள் அமை­யும் என்று தெரி­வித்து இருந்­தார். அந்த நிலை­யங்­

க­ளுள் ஜூரோங் லேக் வட்­டார நிலை­ய­மும் ஒன்று.

வெஸ்ட் கோஸ்ட், கிங் ஆல்­பர்ட் பார்க், மாஜு, கிள­மெண்டி, டர்ஃப் கிளப் ஆகி­யன இதர ஐந்து எம்ஆர்டி நிலை­யங்­கள்.

இரண்­டாம் கட்­டக் கட்­டு­மா­னப் பணி­கள் அடுத்த ஆண்டு தொடங்­கும் என்­றும் 2032ஆம் ஆண்டு முதல் புதிய நிலை­யங்­கள் கட்­டம் கட்­ட­மா­கத் திறக்­கப்­ப­ட­லாம் என்­றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஆறு புதிய நிலை­யங்­களும் சேவை­யாற்­றத் தொடங்­கும்­போது 40,000 குடும்­பங்­கள் அதன்­மூ­லம் பயன்­பெ­றும்.

குறிப்­பாக, சன்­செட் வே மற்­றும் வெஸ்ட் கோஸ்ட் ரோட்­டில் வசிப்­

ப­வர்­கள் பய­ன­டை­வர்.

இவ்­விரு பகு­தி­க­ளுக்­கும் இப்­போது எம்­ஆர்டி வசதி இல்லை.

வட்­டப்­பாதை வழித்­த­டத்­தில் ஹாவ் பார் வில்லா வட்­டா­ரத்­து­டன் ஜூரோங் வட்­டா­ரப் பாதை எம்­ஆர்­டியை இணைக்­கும் வகை­யில் வெஸ்ட் கோஸ்ட் விரி­வாக்­கம் குறித்­தும் ஆரா­யப்­பட்டு வரு­வ­தாக திரு ஈஸ்­வ­ரன் கூறி­னார்.

பரிசீலிக்கப்படுவதாக ஈஸ்வரன் தகவல்