துர்கா பூஜைக்குச் சென்றபோது விபத்து; படகு மூழ்கி 10 குழந்தைகள் உட்பட 32 பேர் பலி

பங்­ளா­தே­ஷில் நிகழ்ந்த படகு விபத்­தில் குறைந்­தது 32 பேர் உயி­ரி­ழந்­ த­னர் என்றும் பலர் காணா­மல் போயி­னர் என்றும் அந்­நாட்­டின் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

ஞாயிறு அன்று பஞ்­ச­கர் மாவட்­டத்­தைச் சுற்­றி­யுள்ள பக்­தர்­கள் துர்கா பூஜை­யில் பங்­கேற்­ப­தற்­காக போதேஷ்­வரி கோயி­லுக்குப் பட­கில் சென்­ற­னர். கர­டோயா ஆற்­றில் சென்று கொண்­டி­ருந்­த­போது பாரம் தாளா­மல் படகு கவிழ்ந்­தது.

இது­வரை 16 பெண்­கள், பத்து குழந்­தை­க­ளின் உடல்­கள் மீட்­கப்­பட்­டுள்­ள­தாக பஞ்­ச­கர் மாவட்ட நிர்­வா­கி­யான ஜஹு­ருல் தெரி­வித்­தார்.

மாவட்டக் காவல்­துறை தலை­வர் சிரா­ஜுல் ஹுடா, கர­டோயா ஆற்­றில் ஏழு உடல்­கள் மிதந்­து கொண்­டி­ருந்­த­தா­கக் கூறி­னார்.

பட­கில் ஏறக்­கு­றைய 90 பேர் பய­ணம் செய்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது. அவர்­களில் 50க்கும் மேற்­பட்­டோர் துர்கா பூஜைக்­குச் சென்ற பக்­தர்­கள் என காவல்­துறை தெரி­வித்­தது.

"இன்­ன­மும் 60 பேரைக் காண­வில்லை," என்று நேற்று காலை ஏஎ­ஃப்பி செய்தி நிறு­வ­னத்­தி­டம் பேசிய ஹுடா தெரி­வித்­தார்.

"பட­கில் அள­வுக்கு அதி­க­மாக மும்­ம­டங்­குக்கு ஆள்­கள் ஏற்­றப்­பட்­டி­ருந்­த­னர். காலை­யில் பலத்த மழை பெய்து கொண்­டி­ருந்­தது.

"அத­னால் அனை­வ­ரும் கோயி­லுக்கு விரைந்து செல்வதற்காக முட்டிமோதி பட­கில் ஏறி­விட்­ட­னர். பட­கோட்டி சிலரை இறங்­கும்­படி கேட்­டுக்­கொண்­டார். ஆனால் யாரும் அதை காதில் வாங்­கிக்­கொள்­ள­வில்லை," என்­றார் அவர்.

சில பய­ணி­கள் நீந்­தியே கரை சேர்ந்­த­னர். குறைந்­தது 10 பேர் மீட்­கப்­பட்டு மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­ட­னர்.

தொலைக்­காட்சி 'ஒளி­வழி 24' ஒளி­ப­ரப்­பிய கைத்­தொ­லை­பேசி காணொ­ளி­களில் எடை தாள முடி­யா­மல் படகு திடீ­ரென கவிழ்­வதை­யும் பட­கில் இருந்த பலர் சேறும் சக­தி­யு­மாக இருந்த ஆற்­றில் விழு ­வ­தை­யும் காண முடிந்­தது. இத­னைக் கரை­யில் இருந்து பார்த்­த­வர்­கள் அதிர்ச்­சி­ய­டைந்து அல­றி­ய­டித்து கூச்­ச­லிட்­ட­னர்.

பங்­ளா­தே­ஷில் அடிக்­கடி படகு விபத்து நிகழ்­கிறது. ஒவ்­வோர் ஆண்­டும் நூற்­றுக்­கும் மேற்­பட்­டோர் இத்­த­கைய விபத்­து­களில் உயி­ரிழக்­ கின்­ற­னர்.

கடந்த டிசம்­பர் மாதம் தெற்கு பங்­ளா­தே­ஷில் மூன்று அடுக்கு படகு ஒன்று தீப்­பி­டித்து எரிந்­ததில் 40 பேர் கொல்­லப்­பட்­ட­னர்.

கடந்த ஆண்டு ஏப்­ர­லில் டாக்­கா­வுக்கு அருகே ஷிடா­லாக்­‌ஷயா ஆற்­றில் அள­வுக்கு அதி­க­மாக பய­ணி­கள் ஏற்­றப்­பட்ட படகு, சரக்­குப் பட­கு­டன் மோதி கவிழ்ந்­தது.

இதில் குறைந்­தது 34 பேர் கொல்லப்பட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!