கோதுமை தடையால் தடுமாறும் உள்ளூர் இந்திய உணவகங்கள்

கோதுமை தடையால் தடுமாறும் உள்ளூர் இந்திய உணவகங்கள்

3 mins read

இந்­தியா, கோதுமை ஏற்­று­ம­திக்கு தடை விதித்­துள்­ள­தால் அது சிங்­கப்­பூ­ரின் உள்­ளூர் உண­வ­கங்­களைப் பாதிக்­கக் கூடிய சூழல் ஏற்­பட்­டுள்­ளது.

ஓர் இந்­திய உண­வ­கம், அதன் பிர­பல சப்­பாத்தி உணவை இவ்­வார இறுதி யோடு நிறுத்த முடிவு செய்­துள்­ளது. சில இந்­திய உண­வு­க­ளின் விலை அதி­க­ரிக்­க­வும் சாத்­தி­ய­முள்­ளது.

கடந்த மே மாதத்­தி­லி­ருந்து இந்­தி­யா­வின் கோதுமை தடை­யால் பெரும் சிர­மத்தை சந்­தித்து வரு­வ­தாக இந்­திய உண­வங்­கள் பல, ஸ்ட்­ரெ­ய்ட்ஸ் டைம்­சுக்கு அளித்­துள்ள பேட்­டி­யில் தெரி­வித்­துள்­ளன.

கடந்த மே மாதத்­தி­லி­ருந்து மூன்று மடங்கு விலை அதி­கமுள்ள மற்ற நாடு களி­லி­ருந்து கோது­மையை இறக்­கு­மதி செய்­யும் கட்­டா­யத்­துக்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்­ள­தாக அவை கூறின. இந்­தி­யா­வின் கோதுமை மாவும் அதற்கு ஏற்ப விலை அதி­க­ரித்­துள்­ளது.

இன்று வரை கோதுமை விலை உயர்வை சமா­ளித்து வரு­கிறோம் என்றும் விரை­வில் வாடிக்­கை­யா­ளர்­கள் அதிக விலை கொடுக்க வேண்­டி­யி­ருக்­கும் என்­றும் மூன்று உண­வ­கங்­கள் தெரி­வித்­துள்­ளன.

உல­கின் இரண்­டா­வது ஆகப்­பெ­ரிய கோதுமை உற்­பத்தி நாடான இந்­தியா, கடந்த மே மாதம் கோதுமை ஏற்­று­ மதிக்கு தடை விதித்­தது. உள்­ளூர் விநி­யோ­கம் பாதிக்­கப்­ப­டக்­கூ­டாது என் பதற்­காக அந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது.

உக்­ரேன்-ரஷ்யா போர் கார­ண­மாக உக்­ரே­னின் கோதுமை ஏற்­று­மதி பாதிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில் இந்­தி­யா­வின் தடை அறி­விக்­கப்­பட்­டது.

உல­கின் நான்­கா­வது ஆகப்­பெ­ரிய கோதுமை ஏற்­று­மதி நாடாக விளங்கும் உக்­ரேன், உல­கின் மொத்த கோதுமை வர்த்­த­கத்­தில் ஒன்­பது விழுக்­காடு பங்கை வகிக்கிறது.

சிங்­கப்­பூ­ரில் ஐந்து உண­வங்­களை நடத்­தும் சகு­ந்­த­லாஸ், இந்­திய உணவு வகை­க­ளுக்கு, குறிப்­பாக சப்­பாத்தி உண­வுக்­குப் பெயர்­போ­னது.

இந்­தி­யா­வின் கோதுமை தடை­யால் வேறு நாடு­க­ளி­லி­ருந்து கோதுமை மாவை இறக்­கு­மதி செய்வது குறித்து ஆராய்ந்து வரு­வ­தாக அந்த உண­வ க­த்­தின் நிர்­வாக இயக்­கு­ந­ரான மாத­வன் ஆதி பால­கி­ருஷ்­ணன் தெரி­வித்­தார்.

தற்­போது இருப்­பில் உள்ள இந்­திய கோதுமை மாவை சகுந்­த­லாஸ் பயன் ­ப­டுத்தி வந்தாலும் இவ்­வார இறு­தி­யில் தீர்ந்து விடும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

"துபா­யி­லி­ருந்து கோது­மையை இறக்குமதி செய்­ய­லாம். ஆனால் விலை மும்­ம­டங்கு அதி­க­மாக உள்­ளது. ஒரு கிலோ இந்­திய கோது­மை மாவின் விலை $5. ஆனால் துபாய் கோது­மை மாவின் விலை ஒரு கிலோ 15 வெள்ளி," என்றார் திரு மாத­வன், 52.

'மஸ்­டர்ட் சிங்­கப்­பூர்' உண­வ­கத்­தின் திரு­மதி ராதிகா, 51, இருப்­பில் உள்ள கோதுமை மாவு தீர்ந்­த­தும் அதிக விலை கார­ண­மாக பல இந்­திய உண­வகங்­கள் சிர­மப்­பட வேண்­டி­யி­ருக்­கும் என்­றார்.

லிட்­டில் இந்­தி­யா­வில் பிர­ப­ல­மாக விளங்­கும் மற்­றொரு உண­வ­க­மான காயத்­ரி­ உணவகத்துக்கும் இதே நிலைமை. வேறு ரக கோதுமை மாவுக்கு மாறும்­போது தரம் பாதிக்­கப்­ப­ட­லாம் என்று அந்த உண­வ­கத்­தின் இயக்­கு ­ந­ரான எஸ். மகேந்­தி­ரன் சொன்­னார்.

"இது­வொரு பெரிய மாற்­ற­மாக இருக்­கும். ஒவ்­வொருநாளும் ஒரு வேளை உண­வுக்கு ஆறு சப்­பாத்தி வரை சாப்­பி­டும் பஞ்­சாப் ஊழி­யர்­களை வெகு­வா­கப் பாதிக்கும்," என்­று அவர் கூறி­னார்.

சிங்­கப்­பூர், ஆண்­டுக்கு 200,000 டன் முதல் 250,000 டன் வரை கோது­மை­யை­யும் 100,000 டன் முதல் 120,000 டன் வரை கோதுமை மாவை­யும் இறக்கு­ மதி செய்­வ­தாக ஐநா புள்ளி விவ­ரங்­கள் தெரி­விக்­கின்­றன. 2020ல் சிங்­கப்­பூர் இறக்­கு­மதி செய்த மொத்த கோதுமை மாவில் 5.8 விழுக்­காடு இந்­தி­யா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்­டது.