வர்த்தக தலைவர்களின் மாநாட்டில் சூடான விவாதம்

வர்த்தக தலைவர்களின் மாநாட்டில் சூடான விவாதம்

2 mins read
a7d822d6-217e-4553-afce-7f9603587e12
வர்த்தக தலைவர்களுக்கான மாநாட்டில் கலந்துரையாடலில் பங்கேற்ற துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங். அவருடன் கலந்துரையாடலை வழி நடத்திய ஃபோர்ப்ஸ் மீடியாவின் பொது ஆசிரியர் ரிச் கார்ல்கார்ட். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பணவீக்கம், உலகமயமாக்கலுக்கு எதிரான போக்கு

சிங்­கப்­பூ­ரில் நடை­பெற்ற வர்த்­தக தலை­வர்­கள் மாநாட்­டில் இரு விவ­கா­ரங்­கள் குறித்து முக்­கி­ய­மாக விவா­திக்­கப்­பட்­டது.

பண­வீக்­க­மும் உல­க­ம­ய­மாக்­க­லுக்கு எதி­ரான போக்­கும் உல­கப் பொரு­ளி­யலை ஆட்­டிப் படைத்து வரு­கின்­றன.

இந்த இரு விவ­கா­ரங்­கள் முக்­கிய விவா­தப்பொரு­ளாயின.

'ஃபோர்ப்ஸ் குளோ­பல் சிஇஓ' எனும் இரண்டு நாள் மாநாட்­டில் உல­கம் முழு­வதும் இருந்து 400க்கும் மேற்­பட்ட வர்த்­தகத் தலை­வர்­கள் கலந்­து­கொண்­ட­னர்.

ரிட்ஸ்-கார்ல்ட்­டன் ஹோட்­ட­லில் நடை­பெற்ற மாநாட்­டில் துணைப் பிர­த­மரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங்­கும் கலந்துரையாடலில் பங்­கேற்று வர்த்தகத் தலைவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித் தார்.

தொழில்­நுட்­பம், புத்­தாக்­கம், நீடித்த நிலைத்­தன்மை, முத­லீட்டு வாய்ப்­பு­கள், தற்­போ­தைய ஏற்ற இறக்­க­மான பொரு­ளி­யல் உள்­ளிட்ட விவ­கா­ரங்­க­ளை­யும் தலை­வர்­கள் அலசி ஆராய்ந்தனர்.

ஆனால் இவற்­றில் பண­வீக்­கமே முக்­கியப் பிரச்­சி­னை­யாக தலை­வர்­கள் எழுப்­பி­யி­ருந்­த­னர். பய­னீட்­டா­ளர் விலை உயர்வு புதிய இயல்­பா­ன­தாக அமை­யும் என்று அப்­போது அவர்­கள் ஒப்­புக்கொண்­ட­னர்.

'கேட்வே பார்ட்­னர்ஸ்' முத­லீட்டு நிறு­ வ­னத்­தின் தலைமை நிர்­வா­கி­யும் இணை நிறு­வ­ன­ரு­மான வி. ஷங்­கர், "பண­வீக்­கம் இன்­ன­மும் நீடித்­தி­ருக்­கும். சில கட்­ட­மைப்­பு­கள், தீர்க்க முடி­யாத பிரச்­சி­னை­கள் அதிக விலைக்கு வழி வகுக்­கும்," என்­றார்.

"கரிம வெளி­யே­றத்­தைக் குறைக்­கும் அதி­வி­ரை­வான நட­வ­டிக்­கை­களால் புதுப்­பிக்கத்தக்க எரி­பொ­ருள் போன்ற புதிய தொழில்­நுட்­பங்­க­ளின் தேவை அதி­க­ரிக்­கும்," என்று அவர் குறிப்­பிட்­டார்.

குறு­கிய காலத்­துக்கு புதிய தொழில்­நுட்­பங்­க­ளுக்­கான செலவு அதிகரிக்கும். இதனால் பசு­மைப் பொருள்­களுக்கான விலையும் கூடும் என்று அவர் தெரி­வித்­தார்.

உலகமயமாக்கலுக்கு எதிரான போக்கும் வர்த்தகங்களுக்கான செலவுகளும் உற் பத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

உதாரணமாக, தங்கள் பொருள்களை உற்பத்தி செய்ய ஆற்றல்மிக்க, மலிவான இடங்களைத் தேடும்போது புவிசார் அர சியல் பதற்றத்தையும் வர்த்தக நிறுவனங்கள் கருத்தில் கொள்ளும்.

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடை யிலான பூசல் காரணமாக அவ்விரு நாடுகள் மீது முதலீட்டாளர்கள் எச்சரிக்கை யாக இருப்பதோடு நம்பிக்கையையும் குறைத்துள்ளது.

"ஆசியாவில் உள்ளவர்களும் மற்ற நாடுகளில் உள்ளவர்களும் நடுநிலையை கடைப்பிடிக்க விரும்புகின்றனர். ஆனால் எந்த இடத்திலிருந்து நெருக்குதல் வரும் என்பதைக் கண்டுபிடிப்பது சிரமம்," என்று பேன்யான் ட்ரீ ஹோல்டிங்சின் நிர்வாகத் தலைவர் ஹோ குவோன் பிங் கூறினார்.

இன்று தொழில்முனைப்பு, நிலைத்தன்மை போன்ற பிரச்சினைகளை வர்த்தக தலை வர்கள் விவாதிப்பார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.

உலகப் பணக்காரர்களில் ஒருவரும் இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு குழுமத்தின் தலைவருமான கௌதம் அதானியும் இன்று முக்கிய உரை நிகழ்த்தவிருக்கிறார்.