ஊழியர் தங்குவிடுதியில் செயற்கை கூரை விழுந்ததில் இருவருக்குக் காயம்

உட்லண்ட்சில் உள்ள வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் செயற்கை கூரை விழுந்ததில் அங்கு தங்கும் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் பதிவான காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

கூரையின் பாகங்கள் தரையில் சிதறிக் கிடப்பது காணொளியில் தெரிந்தது.

அங்கிருந்த ஊழியர்கள் அறையிலிருந்து வெளியேறுவதும் பதிவானது.

இச்சம்பவம் நார்த் கோஸ்ட் லாட்ஜ் தங்குவிடுதியில் நிகழ்ந்தது.

கனமழையாலும் பலத்த காற்றாலும் கூரை விழுந்தது என்றும் அது குறித்து தான் விசாரணை நடத்தி வருவதாகவும் மனிதவள அமைச்சு தெரிவித்தது.

தன்னிடம் வந்த கேள்விகளுக்கு அமைச்சு பதிலளித்தது.

தண்ணீர் சற்று ஒழுகியதால் வேறு இரு அறைகளிலும் சேதம் ஏற்பட்டதாக அமைச்சு கூறியது.

நிலைமையைச் சமாளிக்க மனிதவள அமைச்சின் அதிகாரிகள், காவல்துறையினர், சிங்கப்பூர் ஆயுதப் படையினர் ஆகியோர் நார்த் கோஸ் லாட்ஜ் தங்குவிடுதிக்கு அனுப்பப்பட்டனர்.

காயமடைந்த இருவருக்கு லேசான வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன.

அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட அறைகளில் வசித்த சுமார் 100 பேர் தற்காலிகமாக வேறு அறைகளுக்கு இடம் மாற்றப்பட்டனர். 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!