ஷின்சோ அபேக்கு இறுதி மரியாதை

2 mins read
6f78b6ed-8c4f-467e-9801-61b3c0d02648
தோக்கியோவில் நேற்று இடம்பெற்ற முன்னாள் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் (இடப்படம்) கலந்துகொண்டு, அஞ்சலி செலுத்தினார். படங்கள்: ராய்ட்டர்ஸ், ஏஎஃப்பி -
multi-img1 of 2

பிரதமர் லீ சியன் லூங், இந்தியப் பிரதமர் மோடி உட்பட 4,300 பேர் பங்கேற்பு

மறைந்த முன்­னாள் ஜப்­பா­னி­யப் பிர­த­மர் ஷின்சோ அபே­யின் அதி­கா­ர­பூர்வ இறுதிச் சடங்கு தோக்­கி­யோ­வில் நேற்று இடம்­பெற்­றது.

சிங்­கப்­பூர் பிர­த­மர் லீ சியன் லூங், அமெ­ரிக்­கத் துணை அதி­பர் கமலா ஹாரிஸ், இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி என 700 வெளி­நாட்­டி­னர் உட்­பட மொத்­தம் 4,300 பேர் இந்­நி­கழ்­வில் கலந்து­கொண்டு, திரு அபேக்கு அஞ்­சலி செலுத்­தி­னர்.

கடந்த ஆண்டு ஒலிம்­பிக் போட்­டி­கள் இடம்­பெற்ற நிப்­பான் புடோக்­கான் அரங்­கில் ஜப்­பான் நேரப்­படி பிற்­ப­கல் 2 மணிக்கு (சிங்­கப்­பூ­ரில் பிற்­ப­கல் 1 மணி) இந்­நி­கழ்வு தொடங்­கி­யது.

திரு அபே­யின் அஸ்­தியை அலங்­கரிக்­கப்­பட்ட துணி­யில் வைத்து புடோக்­கான் கூடத்­திற்­குக் கொண்­டு­வந்­தார் அவ­ரின் துணை­வி­யா­ரான திரு­வாட்டி அபே அகீ.

ராணுவ இசைக்­குழு இசைத்­த­பின், திரு அபேக்கு 19 குண்­டு­கள் முழங்க மரி­யாதை அளிக்­கப்­பட்­டது.

கொல்­லப்­பட்ட திரு அபே­யின் அர­சி­யல் வாழ்­வில் இடம்­பெற்ற சில முக்­கி­யத் தரு­ணங்­கள் இடம்­பெற்ற காணொளி காட்­டப்­பட்­டது. அதன்­பின் இப்­போ­தைய ஜப்­பா­னி­யப் பிர­த­மர் ஃபுமியோ கிஷிடா, முன்­னாள் பிர­த­மர் யோஷி­ஹிடே சுகா உள்­ளிட்ட ஆளுங்­கட்­சி­யின் முக்­கி­யத் தலை­வர்­கள் திரு அபேக்­குப் புக­ழஞ்­சலி செலுத்­தி­னர்.

நிகழ்­வில் கலந்­து­கொண்டு, திரு அபேக்கு இறுதி அஞ்­சலி செலுத்­தி­யது குறித்­துப் பிர­த­மர் லீ தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் குறிப்­பிட்­டுள்­ளார்.

"திரு­வாட்டி அபே அகீ, ஜப்­பா­னி­யப் பிர­த­மர் ஃபுமியோ கிஷிடா ஆகி­யோ­ரி­டம் சிங்­கப்­பூர் சார்­பி­லும் சிங்­கப்­பூ­ரர்­களின் சார்­பி­லும் ஆழ்ந்த இரங்­கல் தெரி­வித்­தேன். சிங்­கப்­பூ­ரின் நெருங்­கிய நண்­ப­ரா­கத் திகழ்ந்த திரு அபே, இரு நாடு­க­ளுக்­கும் இடையே அணுக்க உறவு­கள் நீடிக்க கடு­மை­யாக உழைத்­தார்," என்று திரு லீ தமது பதி­வில் தெரி­வித்­துள்­ளார்.

இத­னி­டையே, கூடன்­ஸாக்கா பூங்­கா­வில் நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டு இருந்த பொது­மக்­கள் அஞ்­சலி செலுத்­தும் நிகழ்­வில் கலந்­து­கொண்டு பல்­லா­யி­ரக்­க­ணக்­கா­னோர் திரு அபேக்கு மல­ரஞ்­சலி செலுத்­தி­னர்.

முன்­ன­தாக, திரு அபேக்கு அரசு மரி­யாதை வழங்­கக்­கூ­டாது என எதிர்ப்­புத் தெரி­வித்து, நேற்றும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன. ஜப்­பா­னி­யர்­களில் பத்­தில் ஆறு பேர் அதி­கா­ர­பூர்வ இறு­திச் சடங்­கிற்கு எதிர்ப்பு தெரி­வித்­த­தைக் கருத்­தாய்வு முடி­வு­கள் காட்­டின.

அதிகாரபூர்வ இறுதிச் சடங்கு குறித்து பொதுமக்களிடத்தில் கருத்து வேறுபாடு நிலவியதை அடுத்து, திரு அபேக்கு அஞ்சலி செலுத்த வேண்டுமென எவரும் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்று பிரதமர் கிஷிடா தெரிவித்திருந்தார். அத்துடன், நேற்று பொது விடுமுறை அறிவிக்கப்படவில்லை; தேசிய கொடியும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படவில்லை.

கடந்த ஜூலை 8ஆம் தேதியன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது திரு அபே சுட்டுக்கொல்லப்பட்டார்.