கோத்தபாய மனைவியிடம் பணம் கேட்டு மிரட்டியதாக ஆடவர் கைது

கோத்தபாய மனைவியிடம் பணம் கேட்டு மிரட்டியதாக ஆடவர் கைது

1 mins read

இலங்கை முன்­னாள் அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்­சே­யின் மனைவி அயோ­மா­வி­டம் தொலை­பேசி வழி­யா­கப் பணம் கேட்டு மிரட்­டல் விடுத்ததாக ஆட­வர் ஒருவரை அந்­நாட்­டின் குற்­ற­வி­யல் புல­னாய்­வுத் துறை கைது­செய்­தது.

முடி­தி­ருத்­து­ந­ரான அந்த ஆட­வர், ஒரு மில்­லி­யன் இலங்கை ரூபாய் (S$3,955) கேட்டு திரு­வாட்டி அயோ­மாவை மிரட்­டி­ய­தா­கக் கூறப்­பட்­டது.

இத­னைத் தொடர்ந்து, திரு­வாட்டி அயோமா அளித்த புகாரை அடுத்து, அந்த ஆட­வர் கைது­செய்­யப்­பட்­டார்.

கொலன்­னாவ நக­ரைச் சேர்ந்த அந்த 37 வயது சந்­தே­கப் பேர்­வழி, இம்­மா­தம் 22ஆம் தேதி 19 முறை, மறு­நாள் 23ஆம் தேதி எட்டு முறை என மொத்­தம் 27 முறை திரு­வாட்டி அயோ­மா­வின் கைப்­பே­சிக்கு அழைப்பு விடுத்­தது கண்­டு­பிடிக்­கப்­பட்­டது.

தான் கேட்­கும் பணத்­தைத் தர­வில்லை எனில், மிரி­ஹா­ன­வில் உள்ள திரு­வாட்டி அயோ­மா­வின் வீட்­டிற்­கு­முன் ஆழிப்­பேரலை போன்ற சூழல் உரு­வா­கும் என்­றும் கொழும்பு காலி முகத்­தி­டல் பகுதி­யில் இடம்­பெற்ற போராட்­டங்­க­ளைக் காட்­டி­லும் அதிக அள­வில் மக்­கள் திரள்­வர் என்­றும் அந்த ஆட­வர் மிரட்­டல் விடுத்­த­தா­கக் கூறப்­பட்­டது.

தான் மிரட்டியது முன்­னாள் அதி­பரின் மனை­வியை என்­பது தெரிந்­த­பி­ற­கும் அந்த ஆட­வர் மேலும் 12 முறை தொலை­பே­சி­யில் திருவாட்டி அயோமாவை அழைத்­த­தா­கச் சொல்­லப்­பட்­டது.

காலி முகத்­தி­ட­லில் இடம்­பெற்ற அர­சாங்­கத்­திற்கு எதி­ரான போராட்­டங்­க­ளி­லும் அவர் பங்­கெ­டுத்­தது விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது.

இத­னி­டையே, கொழும்பு நீதி­மன்­றம் நேற்று முன்­தி­னம் அந்த ஆட­வ­ருக்­குப் பிணை வழங்­கி­யது.

அடுத்த மாதம் 6ஆம் தேதி நீதிமன்றம் இவ்வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இருக்கிறது.