நோரு சூறாவளியால் கூரைகள் பறந்தன, மரங்கள் சாய்ந்தன

நோரு சூறாவளியால் கூரைகள் பறந்தன, மரங்கள் சாய்ந்தன

1 mins read
5ecef4c0-b84d-4834-adf5-1794203e960f
-
Google News Preferred Icon

வீடுகளின் கூரைகளை நாசமாக்கியதுடன் மத்திய வியட்னாம் பகுதியில் 500,000 வீடுகளில் மின்சாரத்தைத் துண்டித்துப் பெருஞ்சேதத்தை விளைவித்துவிட்டது நோரு சூறாவளி. பிலிப்பீன்சில் குறைந்தது 10 உயிர்களை பலிகொண்ட நோரு சூறாவளி, வியட்னாமை அடைந்ததை அடுத்து தற்காலிகத் தங்குமிடங்களில் 300,000க்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சம் புகுந்தனர். இப்பேரிடர் காலத்தில் சுமார் 40,000 ராணுவ அதிகாரிகளும் 200,000 போர்வீரர்களும் உதவி வருகின்றனர்.

படம்: ஏஎஃப்பி