புத்தாக்கம்: 7வது இடத்தில் சிங்கப்பூர்

புத்தாக்கம்: 7வது இடத்தில் சிங்கப்பூர்

2 mins read

உலக அளவில் 2021ல் 8வது இடத்தில் இருந்து ஓரிடம் முன்னேறியது; வட்டாரத்தில் இரண்டாவது இடம்

உல­கில் புத்­தாக்­கத்­தைப் பொறுத்­த­வரை சிங்­கப்­பூர் இப்­போது ஏழாவது ஆகப்பெரிய பொரு­ளியலாக இருக்­கிறது. சென்ற ஆண்டில் சிங்­கப்­பூர் எட்டாவது இடத்­தில் இருந்­தது.

உலக அறி­வு­சார் சொத்து நிறு­வ­னம் என்ற அமைப்­பும் 'போர்டுலாண்ஸ் இன்ஸ்ட்­டி­யூட்' என்ற லாப­நோக்­கற்ற ஆய்வு அமைப்­பும் உலக புத்­தாக்க அட்­ட­வணை 2022 என்ற ஆய்­வ­றிக்­கையை வெளி­யிட்­டன.

அந்த அறிக்கை, சிங்­கப்­பூரை ஏழா­வது ஆக அதிக புத்­தாக்­கப் பொரு­ளி­யல் என்று வரி­சைப்­படுத்தி இருக்­கிறது.

புத்­தாக்­கத்­தில் வெற்றி பெறக்­கூ­டிய ஆற்­றல் ஒரு நாட்­டி­டம் எந்த அள­வுக்கு இருக்­கிறது என்­பதற்கு ஏற்ப, 132 நாடு­களை அந்த அறிக்கை ஆராய்ந்து வரிசைப்­படுத்­தி­யது.

சுவிட்­சர்­லாந்­து­தான் உலகி லேயே புத்­தாக்­கத்­தில் முத­லி­டத்­தில் இருக்­கிறது. அமெ­ரிக்கா, சுவீ­டன், பிரிட்­டன், நெதர்­லாந்து ஆகி­யவை அடுத்­த­டுத்த இடங்­களில் உள்­ளன.

தென்­கொ­ரியா ஆறா­வது இடத்தைப் பெற்­றுள்­ளது. இந்த நாடு சென்ற ஆண்டு ஐந்­தா­வது இடத்­தில் இருந்­தது.

தென்­கி­ழக்கு ஆசியா, கிழக்கு ஆசியா, பசி­பிக் பெருங்­க­டல் வட்­டா­ரங்களில் முத­லி­டத்­தை தென்­கொ­ரியா பெற்று இருக்­கிறது. இரண்­டா­வது இடத்­தில் சிங்­கப்­பூர் உள்­ளது. சீனா, ஜப்­பான், ஹாங்­காங் ஆகி­யவை அடுத்­த­டுத்த இடங்­களில் உள்­ளன.

உல­க­ள­வில் பார்க்­கும்போது சீனா ஓரி­டம் முன்­னேறி 11வது இடத்­தில் உள்­ளது. புத்­தாக்க நட­வ­டிக்­கை­க­ளுக்குச் சாத­க­மான பொரு­ளி­யல் சூழல், அந்த நட­வ­டிக்­கை­க­ளின் விளை­வு­கள் ஆகிய இரண்டு அம்­சங்­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு நாடு­கள் வகைப்­படுத்­தப்­பட்டு உள்­ளன.

புத்­தாக்க நட­வ­டிக்­கை­க­ளைப் பொறுத்­த­வரை மொத்­தத்­தில் உல­க­ள­வில் சிங்­கப்­பூர் முத­ல் இடத்தைத் தக்­க­வைத்து கொண்டு உள்­ளது.

அர­சி­யல், செயல்­முறை நிலைப்­பாடு, வலு­வான விதி­மு­றை­களை உரு­வாக்கி அமல்­ப­டுத்­தும் ஆற்­றல் ஆகி­யவை உள்­ளிட்ட பெரும்­பா­லா­ன­வற்­றில் சிங்­கப்­பூர் முதல்­இடத்­தில் உள்­ளது.

அதிக தொழில்­நுட்ப இறக்­கு­மதி­கள், அறி­வி­யல், பொறி­யி­யல் துறை­களில் பட்டதா­ரி­க­ளின் விகி­தாச்­சா­ரம் போன்­ற­வற்றி­லும் உய­ரிய இடத்­தில் சிங்­கப்­பூர் உள்­ளது.

இருந்­தா­லும் புத்­தாக்க நட­வ­டிக்­கை­களால் உரு­வா­கும் பலா­பலன்­க­ளைப் பார்க்­கை­யில் சிங்­கப்­பூர் ஓரி­டம் இறங்கி 14வது இடத்­தில் உள்­ளது.

இதனிடையே, புதிதாக இரண்டு புத்­தாக்க அலை­கள் தலை­யெ­டுக்­கக்­கூ­டிய வாய்ப்பு உள்­ள­தா­க­வும் அறிக்கை தெரி­வித்­து உள்­ளது.

உச்ச ஆற்­றல் கணினி, இயந்­திர மனி­தத் தொழில்நுட்பம்,, தானி­யக்­கம் ஆகி­ய­வற்­றில் இடம்­பெறக்­கூ­டிய புதுப்­புது கண்­டு­பி­டிப்­பு­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு ஓர் அலை உரு­வா­கக்­கூ­டும்.

உயி­ரி­யல் தொழில்­நுட்­பம், நானோ தொழில்­நுட்­பம், புதிய சாதனங்­கள், இதர அறி­வி­யல்­கள் ஆகி­ய­வற்­றில் இடம்­பெ­றக்­கூ­டிய நவீ­னங்­க­ளின் அடிப்­ப­டை­யில் மற்­றோர் அலை உரு­வா­கக்­கூ­டும் என்று அறிக்கை தெரி­வித்­து உள்­ளது.

என்­றா­லும் அத்­த­கைய புத்­தாக்க அலை­கள் கார­ண­மாக ஏற்­ப­டக்­கூ­டிய ஆக்­க­க­ர­மான பலன்கள் கைகூ­டி­வர காலம் பிடிக்கும் என்­றும் அந்த ஆய்வு அறிக்கையில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.