தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லிட்டில் இந்தியாவில் இன்று முதல் இட்லி விழா

1 mins read
04f49158-9584-4be7-9e94-1597ffcab6ea
படம்: இணையம் -

லிட்டில் இந்தியாவில் இயங்கும் அஞ்சப்பர் உணவகத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாள்களுக்கு இட்லி விழா நடைபெறுகிறது. வாடிக்கையாளர்களுக்குப் பத்து வகையான இட்லி வகைகளை உணவகம் வழங்குகிறது.

சையது ஆல்வி சாலையில் உள்ள கிளையில் மட்டுமே முதன் முறையாக அஞ்சப்பர் இந்தக் கொண்டாட்டத்தை நடத்துகிறது. நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும், மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையும் இட்லி விழா நடைபெறும்.

உண்டுகளிக்க ஒருவருக்கு $18.

புதினா இட்லி, கொத்தமல்லி இட்லி, கார இட்லி, தட்டு இட்லி, சம்பா ரவா இட்லி, பன்னீர் இட்லி, காளான் இட்லி, கேரட் இட்லி, காரமான மசாலா இட்லி, பீட்ரூட் இட்லி ஆகிய பத்து வகை இட்லி கிடைக்கும்.

மூன்று வகை சாம்பார், ஆறு வகை சட்னி, ஐந்து வகை பொடிகள், அதோடு குடிப்பதற்கான காபி, தேநீரும் உண்டு.

செய்தி: காயத்திரி காந்தி