'வழக்கநிலை திரும்பியிருப்பதை எஃப்1 பந்தயம் பிரதிபலிக்கிறது'

'வழக்கநிலை திரும்பியிருப்பதை எஃப்1 பந்தயம் பிரதிபலிக்கிறது'

2 mins read
0ab57b48-042e-46aa-bd29-9a8c53612844
-

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை கார­ண­மாக கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக சிங்­கப்­பூ­ரில் எஃப்1 பந்­த­யம் நடை­பெ­ற­வில்லை.

ஈராண்­டு­க­ளுக்­குப் பிறகு இப்­பந்­த­யம் சிங்­கப்­பூ­ருக்­குத் தற்­போது திரும்பி­ உள்­ளது. எஃப்1 ஓட்­டு­நர்­க­ளுக்­கான பயிற்சிச் சுற்று நேற்று நடை­பெற்­றது.

யார் யார் எந்­தெந்த நிலை­யி­லி­ருந்து பந்­த­யத்­தைத் தொடங்­கு­வர் என்­பதை நிர்­ண­யிப்­ப­தற்­கான சுற்று இன்று நடை­பெ­று­கிறது. வெற்­றி­யா­ளர் யார் என்­பது நாளை நடை­பெ­றும் பந்­த­யத்­திற்­குப் பிறகு தெரிந்­து­வி­டும். கொவிட்-19

கட்­டுப்­பா­டு­களை சிங்­கப்­பூர் தளர்த்­தி­யி­ருப்­ப­தால் பந்­த­யத்தை நேரில் காண உள்­ளூர் மக்­கள் மட்­டு­மின்றி வெளி­நாட்­டி­ன­ரும் பெரும் அள­வில் திரள்­வர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யின்­போது பல சவால்­களை எதிர்­கொண்ட சிங்­கப்­பூர், தற்­போது வழக்­க­நி­லைக்­குத் திரும்­பி­யி­ருப்­ப­தா­க­வும் எஃப்1 பந்­த­யம் இங்கு மீண்­டும் நடை­பெ­று­வது அதை உணர்த்­து­வ­தா­க­வும் ரசி­கர்­கள் மகிழ்ச்சி தெரி­வித்­த­னர்.

ஆஸ்­டன் மார்ட்­டின் அணி­யைச் சேர்ந்த செபாஸ்­டி­யன் வெட்­டல்

சிங்­கப்­பூர் எஃப்1 பந்­த­யத்­தில் போட்­டி­யி­டு­வதைக் காணும் வாய்ப்பு இதற்­குப் பிறகு கிடைக்­காது. நான்கு முறை மாபெ­ரும் வெற்­றி­யா­ளர் பட்­டத்தை வென்ற அவர், இப்­ப­ரு­வத்­தின் இறு­தி­யில் போட்­டி­யி­லி­ருந்து ஓய்­வு­பெ­றப்­போ­வ­தாக அறி­வித்­துள்­ளார்.

நேற்று முன்­தி­னம் இரவு மரினா பே வட்­டா­ரத்­தில் ஆயி­ரக்­க­ணக்­கான ரசி­கர்­கள் திரண்­ட­னர். அங்­குள்ள பந்­த­யத் தடத்தில் எஃப்1 கார்­க­ளின் தனித் தனிப் பாகங்­களை அந்­தந்த அணி­

யி­னர் ஒன்­றா­கப் பொருத்­து­வதை அவர்­கள் நேரில் கண்டு களித்­த­னர்.

மரினா பேயில் உள்ள பந்தயத் தடத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நேற்று முன்தினம் கூடினர். மெர்சடிஸ் அணியினர் தங்கள் கார் சக்கரங்களை ஒரே சமயத்தில் விரைவாகப் பொருத்தும் காட்சியை மிக அருகில் நின்று கண்டு மகிழ்ந்தனர்.

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்