அருட்கொடை மையமாக திகழ சிங்கப்பூர் இலக்கு

இந்த வட்டாரத்தின் அருட்கொடை மைய­மா­கத் திகழ சிங்­கப்­பூர் இலக்கு கொண்­டி­ருப்­ப­தாக துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் நேற்று தெரி­வித்­தார்.

பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு காணப் பங்­க­ளிக்­கும் வகை­யில் சிங்­கப்­பூ­ரில் தளம் அமைக்­கும்­படி குடும்ப அலு­வ­ல­கங்­கள், வர்த்­த­கங்­கள் ஆகி­ய­வற்­று­டன் தனி

­ந­பர்­க­ளுக்கும் அவர் அழைப்பு விடுத்­துள்­ளார்.

சிங்­கப்­பூர் அர­சாங்­கம் அதன் வரிச் சலு­கைத் திட்­டங்­களை மறு­ஆய்வு செய்­வ­தாக அவர் கூறி­னார். அருட்­கொடை வழங்­கு­

வ­தால் ஏற்­படும் தாக்­கங்­க­ளைக் கண்­கா­ணிக்க தேவை­யான அணுகுமு­றை­களை அமைக்­க­வும் ஏற்­பு­டைய கார­ணங்­களை அடை­யா­ளம் காண­வும் அருட் கொ­டை­யா­ளர்­கள் அர­சாங்க அமைப்­பு­க­ளு­டன் இணைந்து செயல்­ப­ட­லாம் என்­றார் அவர்.

ஆர்ச்­சர்ட் வட்­டா­ரத்­தில் உள்ள ஷங்­ரிலா சிங்­கப்­பூர் ஹோட்­ட­லில் நடை­பெற்ற ஆசிய அருட்­கொடை உச்­ச­நிலை மாநாட்­டில் திரு வோங் கலந்­து­கொண்டு டிபி­எஸ் குழு­மத்­தின் தலைமை நிர்­வாகி பியுஷ் குப்­தா­வு­டன் பேசி­னார்.

உச்­ச­நிலை மாநாட்­டுக்கு தெமா­செக் டிரஸ்ட்­டும் தெமா­செக் அற­நி­று­வ­ன­மும் ஏற்­பாடு செய்­

தி­ருந்­தது.

மற்ற நாடு­களில் மிக வலி­மை­மிக்க அருட்­கொ­டைப் பாரம்­ப­ரி­யங்­கள் இருப்­பதை நிதி அமைச்­

ச­ரு­மான திரு வோங் சுட்­டி­னார்.

அமெ­ரிக்­கா­வில் சில செல்­வந்­தர்­கள் தங்­கள் சொத்­தின் ஒரு பகு­தியை சமூ­கத்­துக்கு வழங்­கி­யி­ருப்­ப­தை­யும் பில் கேட்ஸ் போன்ற சிலர் அற­நி­று­வ­னங்­கள் அமைத்­தி­ருப்­ப­தை­யும் அவர் உதா­ர­ணம் காட்­டி­னார்.

"அருட்கொடை தொடர்­பாக சிங்­கப்­பூ­ரில் ஆக்­க­பூர்­வப் போக்கு நில­வு­வ­தைக் காண்­கி­றோம். இருப்­பி­னும் சில நாடு­களில் இருக்­கும் நீண்­ட­கால, வலி­மை­மிக்க அருட்­கொ­டைப் பாரம்­ப­ரி­யம் சிங்­கப்­பூர் இன்­னும் மல­ர­வில்லை. அத்­த­கைய பாரம்­ப­ரி­யத்­தைக் உரு­வாக்க இன்­னும் பல நட­வ­டிக்­கைகளை மேற்­கொள்ள வேண்டி உள்­ளது," என்று திரு வோங் தெரி­வித்­தார்.

$1 பில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான மதிப்பு கொண்ட புதிய நிறு­

வ­னங்­கள், குடும்ப அலு­வ­ல­கங்­கள் ஆகி­யவை சிங்­கப்­பூ­ரில் தளம் அமைப்­பது அதி­க­ரித்­துள்­ள­தா­க­வும் இது ஊக்­க­ம­ளிக்­கும் வகை­யில் இருப்­ப­தாகவும் துணைப் பிர­த­மர் வோங் கூறி­னார். வெற்றி­ க­ர­மா­கச் செயல்­படும் தொழில்­மு­னை­வர்­கள் பலர் சிங்­கப்­பூ­ரில் தளம் அமைப்­ப­தா­க­வும் அவர் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரில் தளம் அமைக்­கும் வர்த்­த­கர்­க­ளு­டன் பேசும்­போது சொத்­து­க­ளைக் குவிப்­ப­தை­யும் தாண்டி தங்­கள் பெயர் சொல்­லும் மர­பை­யும் விட்­டுச் செல்ல அவர்­கள் விரும்­பு­வ­தா­கத் தெரி­ய­வந்­துள்­ளது என்­றார் திரு வோங்.

தங்­கள் பண்­பு­நெ­றி­க­ளு­டன் ஒத்­துப்­போ­கும், சமு­தா­யத்­துக்கு நல்­ல­தொரு தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் முத­லீட்டு வாய்ப்­பு­களை அவர்­கள் தேடு­வ­தாக திரு வோங் குறிப்­பிட்­டார்.

இவர்­கள் அனை­வ­ரும் ஒன்று சேர்ந்து, சமு­தா­யத்­துக்­குப் பலன் தரும் திட்­டங்­களை அமைக்க வேண்­டும் என்று அவர் கேட்­டுக்­கொண்­டார். கிடைத்த லாபத்­தின் ஒரு பகு­தியை சமு­தா­யத்­துக்­குத் திருப்­பித் தரும் அமெ­ரிக்க அணுகுமுறை, அரசு சமூக நல அணு­கு­முறை ஆகிய இரண்­டில் எந்த அணு­கு­மு­றையை சிங்­கப்­பூர் தேர்ந்­தெ­டுக்க வேண்­டும் என்று துணைப் பிர­த­ம­ரி­டம் திரு குப்தா கேள்வி எழுப்­பி­னார். இதற்­குப் பதி­ல­ளித்த திரு வோங், இரண்­டும் கலந்த அணுகு­ முறை சிங்­கப்­பூர் தேவை என்று கூறி­னார்.

"அனைத்­தை­யும் தனி­ந­பர்­

க­ளின் பொறுப்­பில் விட்­டு­விட்­டால் சமு­தா­யக் கட்­ட­மைப்பை வலுப்­

ப­டுத்­த­வும் நாட்டை மேம்­ப­டுத்­த­வும் முடி­யாது.

"அதே சம­யம், எல்­லாப் பொறுப்பு­க­ளை­யும் அர­சாங்­கமே ஏற்­றுக்­கொண்­டால் சமு­தா­யத்­தின் பங்­க­ளிப்பு இல்­லா­மல் போய்­

வி­டும்," என்­றார் திரு வோங்.

"வர்த்­த­கத்­தில் வெற்றி பெற்று லாபம் ஈட்­டிய ஒரு­வர், அவ­ரா­கவே முன்­வந்து சமு­தா­யத்­துக்­குத் தேவை­யான உத­வி­க­ளைச் செய்­தால் சமூக உணர்வு வலு­வ­டை­யும். நாட்­டில் பணப் புழக்­கம் இருக்­கும். கிடைத்த லாபத்­தின் ஒரு பகுதி மீண்­டும் முத­லீடு செய்­யப்­படும். இவ்­வாறு வலு­வான சமூ­கக் கட்­ட­மைப்பை உரு­வாக்கி, மக்­க­ளி­டையே நம்­பிக்கை உணர்வை நிலை­நாட்­ட­லாம்," என்றார் திரு வோங்.

நன்­கொடை வழங்க சிங்­கப்­பூ­ரர்­களை ஊக்­கு­விப்­பது தொடர்­பா­கக் கேள்வி எழுப்­பப்­பட்­ட­போது, சிங்­கப்­பூ­ரர்­கள் தாராள குணம் உடை­ய­வர்­கள் என்­றும் நன்­கொடை வழங்க அவர்­க­ளை ஊக்குவிக்கத் தேவை­யில்லை என்­றும் திரு வோங் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!