ஓராண்டு ஏறுமுகத்துக்குப் பிறகு முதன்முறையாக இறக்கம் காணும் மின்சாரக் கட்டணம்

ஓராண்டு ஏறுமுகத்துக்குப் பிறகு முதன்முறையாக இறக்கம் காணும் மின்சாரக் கட்டணம்

1 mins read

இவ்­வாண்­டின் இறு­திக் காலாண்­டில் மின்­சா­ரக் கட்­ட­ணம் 1.4 விழுக்­காடு குறையவுள்ளது. மின்­சா­ரக் கட்­ட­ணம் இறக்­கம் காண்­பது கடந்த ஓராண்­டில் இதுவே முதல்­முறை. கடந்த ஓராண்­டுக்கு மேலாக அது ஏறு­மு­க­மா­கவே இருந்­தது. இன்று முதல் டிசம்­பர் 30ஆம் தேதி வரை மின்­சா­ரக் கட்­ட­ணத்­தின் விலை பொருள், சேவை வரி சேர்ப்­ப­தற்கு முன்பு ஒரு கிலோ­வாட்­டுக்கு 30.17 காசி­லி­ருந்து 29.74 காசா­கக் குறை­யும் என்று எஸ்பி குழு­மம் நேற்று கூறி­யது.

கடந்த ஆண்டு ஏப்­ரல் மாதத்­தி­லி­ருந்து மின்­சா­ரக் கட்­ட­ணம் தொடர்ந்து அதி­க­ரித்து வந்­துள்­ளது.

உக்­ரேன் மீது ரஷ்யா படை­

யெ­டுத்­ததை அடுத்து உல­க­ளா­விய நிலை­யில் எரி­வாயு, எரி­பொ­ருள் விலை மள­ம­ள­வென அதி­க­ரித்­ததை அடுத்து, சிங்­கப்­பூ­ரின் மின்­சா­ரக் கட்­ட­ணம் உயர்ந்­தது.

இறு­திக் காலாண்­டில் எஸ்பி குழு­மத்­தின் மின்­சா­ரக் கட்­ட­ணம் குறை­வ­தால் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக நான்­கறை வீட்­டிற்­கான சரா­சரி மாதாந்­திர மின்­சா­ரக் கட்­ட­ணம் $1.55 குறை­யும்.

இதற்­கி­டையே, இன்று முதல் டிசம்­பர் 30ஆம் தேதி வரை வீடு­

க­ளுக்­கான எரி­வாயு விலை கிலோ­வாட்­டுக்கு 0.36 காசு குறை­யும் என்று சமை­ய­லுக்­காக குழாய்வழி எரி­வா­யுவை வீடு­க­ளுக்கு வழங்­கும் சிட்டி எனர்ஜி நிறு­வ­னம் தெரி­வித்­தது. இதன்­மூ­லம் எரி­வாயு விலை கிலோ­வாட்­டுக்கு 23.09 காசி­லி­ருந்து 22.73 காசா­கக் குறை­யும்.

எரி­பொ­ருள் விலை குறைந்­தி­ருப்­ப­தால் மின்­சா­ரம், எரி­வாயு ஆகி­ய­வற்­றின் விலை குறைந்­

தி­ருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.