இந்தியாவில் 5ஜி சேவை தொடக்கம்; கிராமங்களுக்கும் கிடைக்க வசதி

இந்­தி­யா­வில் 5ஜி சேவையை பிர­தமர் நரேந்­திர மோடி தொடங்­கி­வைத்­துள்­ளார்.

புது­டெல்­லி­யில் நான்கு நாள் நடை­பெ­றும் இந்­திய கைப்­பேசி மாநாட்­டின் தொடக்க விழா­வில் நேற்று பங்­கேற்று உரை­யாற்­றிய அவர், இந்­தி­யாவை வளர்ச்­சி­யின் அடுத்­த­ கட்­டத்­துக்­குக் கொண்­டு­செல்ல 5ஜி சேவை வழி­வ­குக்­கும் என்று கூறி­னார்.

"5ஜி சேவை கிராம மக்­கள் முதல் அனைத்­துத் தரப்பு மக்­க­ளுக்­கும் பய­ன­ளிக்­கும். இதை அனை­வ­ரி­டத்­தி­லும் கொண்­டு­செல்ல வேண்­டி­யது எங்­க­ளது பொறுப்பு. மேலும், 5ஜி தொழில்­நுட்­பம் தொலைத்­தொ­டர்­புத் துறை­யில் புரட்­சியை ஏற்­ப­டுத்­தும். இதன் அறி­மு­கம் 130 கோடி இந்­தி­யர்­களுக்கு தொலைத்­தொ­டர்பு துறை­யின் பரிசு," என்­றார் திரு மோடி.

இந்­தி­யா­வின் மூன்று பெரிய தொலைத்­தொ­டர்பு நிறு­வ­னங்­களான ஜியோ, ஏர்­டெல், வோடோ­ஃபோன்-ஐடியா ஆகி­யவை இந்த மாநாட்­டில் 5ஜி இணை­யத்­தின் முன்­மா­தி­ரி­யைக் காட்­சிப்­ப­டுத்­தின.

முதற்­கட்­ட­மாக டெல்லி, சென்னை, கோல்­கத்தா, மும்பை, பெங்­க­ளூரு, ஹைத­ரா­பாத் உள்­பட 13 நகர்­களில் 5ஜி சேவை­கள் தொடங்­கப்­பட்­டுள்­ளன.

பல்­வேறு புத்­தாக்க முயற்­சி­கள் மூலம் தரவுத்தொகுப்பு கட்­டுப்­ப­டி­யான விலையில் விற்­கப்­ப­டு­வதை நினை­வு­ப­டுத்­திய திரு மோடி, "1 ஜிபி தரவுத்தொகுப்பு ரூ.300 என இருந்த விலை இப்­போது ரூ.10ஆகக் குறைந்­துள்­ளது," என்­றார்.

நிகழ்­வில் பேசிய ரிலை­யன்ஸ் குழு­மத்­தின் தலை­வர் முகேஷ் அம்­பானி, 2023 இறு­திக்­குள் இந்­தி­யா­வின் அனைத்து கிரா­மங்­க­ளுக்­கும் 5ஜி சேவை கொண்­டு­சேர்க்­கப்­படும் என உறுதி தெரி­வித்­துள்­ளார்.

தற்­போது இந்­தி­யா­வில் வழங்­கப்­படும் 4ஜி சேவையைக் காட்­டி­லும் 5ஜி சேவை­யின் வேகம் 10 மடங்கு கூடு­த­லாக இருக்­கும் என சொல்­லப்­ப­டு­கிறது.

இந்­தி­யா­வின் தொழில்­நுட்­பக் கட்­ட­மைப்­பில் மிகப்­பெ­ரும் பாய்ச்­சலை இது நிகழ்த்­தும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மின்­வ­ணி­கம், கல்வி, மருத்­து­வம், போக்­கு­வ­ரத்து என பல்­வேறு துறை­களில் மிகப்­பெ­ரிய மாற்­றத்தை 5ஜி கொண்­டு­வ­ரும் என்­றும் 'மெட்­டா­வர்ஸ்' எனும் மெய்நிகர் உலகத் தொழில்நுட்ப உரு­வாக்­கத்­தில் இதன் பங்­க­ளிப்பு முக்­கி­யமா­ன­தாக இருக்­கும் என்கின்­ற­னர் நிபு­ணர்கள்.

பய­னா­ளர்­க­ளி­டையே 5ஜி பயன்­பாட்டை ஊக்­கு­விக்­கும் வித­மாக, US$100-$150 விலை­யில் 5ஜி திறன்­பே­சியை வெளி­யிட ரிலை­யன்ஸ் ஜியோ நிறு­வ­னம் திட்­ட­மிட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!