ஆண்டிறுதிக்குள் சாங்கியில் விமானச் சேவைகள் அதிகரிக்கும்

ஆண்டிறுதிக்குள் சாங்கியில் விமானச் சேவைகள் அதிகரிக்கும்

2 mins read

கொவிட்-19க்கு முன்பிருந்த பயணங்களில் 80 விழுக்காட்டை எட்டக்கூடும்

இந்த ஆண்டு இறுதிக்குள் சாங்கி விமான நிலையத்தில் செயல்பட விமான நிறுவனங்கள் தாக்கல் செய்துள்ள விமானச் சேவைகளின் எண்ணிக்கை ஏற்கெனவே கொவிட்-19க்கு முந்தைய நிலையில் 80 விழுக்காட்டைவிட அதிகமாக உள்ளது. எனி­னும், எல்­லைக் கட்டுப்­பாடு­களைத் தளர்த்­து­வ­தில் சீனா கையாளும் உத்­தி­கள், சிங்­கப்­பூருக்கு நிச்ச­ய­மற்ற நிலையை ஏற்­ப­டுத்­தி­ உள்­ளது என்று போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

விமான நிறு­வ­னங்­கள், சாங்கி விமான நிலை­யத்­து­டன் முன்­கூட்­டியே செய்­து­கொள்­ளும் ஏற்­பாட்­டின் அடிப்­ப­டை­யி­லும் முக்­கி­யச் சந்­தை­கள், குறிப்­பாக ஆசிய பசி­பிக்­கில் உள்­ளவை தங்­கள் எல்­லை­களை மீண்­டும் திறப்­ப­தன் அடிப்­ப­டை­யிலும் அமைச்சு முன்­னு­ரைப்­பு­களை வழங்கு­வ­தாக அவர் கூறி­னார்.

ஹாங்­காங், தைவான், ஜப்­பான் ஆகிய நாடு­கள் எல்­லைக் கட்­டுப்­பா­டு­களை அண்­மை­யில் தளர்த்­தி­யுள்­ள­தால் ஆண்­டி­று­தி­யில் விமா­னச் சேவை­கள் மேலும் அதி­க­ரிக்­கக்­கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொவிட்-19க்கு முன்பு, சிங்­கப்­பூ­ருக்கு வந்­து­சென்ற சுற்­றுப்­ப­ய­ணி­களில் ஏறத்­தாழ 20 விழுக்­காட்­டி­னர் சீன நாட்­ட­வர்­க­ளாக இருந்­த­னர்.

"எல்­லைக் கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­து­வ­தில் சீனா­வின் உத்­தியை நாம் கவ­னிக்க வேண்­டும். சீனா நமக்கு ஒரு முக்­கி­ய­மான சந்­தை­யாக உள்­ளது.

"ஆற்­ற­லைக் கருத்தில்­கொண்டு நாங்­கள் திட்­ட­மி­டு­கிறோம். ஆனால், நாம் விழிப்­பு­டன் இருக்க வேண்டும்," என்­றார் திரு ஈஸ்­வரன்.

ஆண்­டி­று­தி­யில் அதிக விமா­னச் சேவை­க­ளைக் கையாள சாங்கி விமான நிலை­யத்­தின் ஆற்­றல் குறித்து பாசிர் ரிஸ் குழுத்­தொ­குதி எம்.பி. ஷாரேல் தாஹா­வும் பீஷான்-தோ பாயோ குழுத்­தொ­குதி எம்.பி. சக்­தி­யாண்டி சுபாட்­டும் கேட்ட கேள்­வி­க­ளுக்கு திரு ஈஸ்வரன் பதி­ல­ளித்­தார்.

இந்­நி­லை­யில், விமா­னப் போக்கு­வரத்­துத் துறை­யில் ஊழி­யர்­க­ளைப் பணி­ய­மர்த்த நிறு­வ­னங்­கள் அனைத்துவித­மான முயற்­சி­களையும் எடுத்து வரு­வ­தாக திரு ஈஸ்வரன் கூறி­னார்.

ஆண்­டி­று­திக்­குள் மேலும் 4,000 பேரை இத்­து­றை­யில் பணி­ய­மர்த்த திட்­டங்­கள் வகுக்­கப்­பட்டு வந்­த­தாக அவர் முன்­ன­தா­கக் கூறி­யி­ருந்­தார். இதன்­மூ­லம், கொவிட்-19க்கு முன்­பி­ருந்த ஆள்­ப­லத்தில் 90 விழுக்­காட்டை எட்­டும்.

"விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறைக்கு ஆளெ­டுக்­கும் நிறு­வ­னங்­களின் முயற்­சி­கள் தற்­போது திட்­ட­மிட்­ட­படி இடம்­பெற்று வரு­கின்­றன. விமா­னப் பயண மீட்­சியை சாங்கி இது­வரை சிறப்­பாக கையாண்டு வரு­கிறது," என்று திரு ஈஸ்­வ­ரன் கூறி­னார்.