எஸ்பிஎச் ஊடகக் குழுமத்தில் தலைமைத்துவ மாற்றங்கள்; அக்டோபர் 26ல் அமல்

எஸ்பிஎச் ஊடகக் குழுமத்தில் தலைமைத்துவ மாற்றங்கள்; அக்டோபர் 26ல் அமல்

3 mins read
caa3205d-e2e9-4643-9cd1-d2e20e54d01e
(மேலே, இடமிருந்து) தற்போதைய இஎம்டிஎம் முதன்மை ஆசிரியர் வாரன் ஃபெர்னாண்டஸ், பிஸ்னஸ் டைம்ஸ் ஆசிரியர் வோங் வெய் கோங், (கீழே, இடமிருந்து) சிஎன்ஏ மின்னிலக்கப் பதிப்பின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஜெய்மி ஹோ, தற்போதைய பிஸ்னஸ் டைம்ஸ் நிர்வாக ஆசிரியர் திருவாட்டி சென் ஹுய்ஃபென். கோப்புப் படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், ஜெய்மி ஹோ/ லிங்க்டுன், பிஸ்னஸ் டைம்ஸ் -

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ், பிஸ்னஸ் டைம்ஸ், பெரித்தா ஹரியான், தமிழ் முரசு உட்­பட பல நாளி­தழ்­க­ளை­ வெளி­யி­டும் எஸ்பிஎச் ஊட­கக் குழு­மம் அதன் செய்­திப் பிரி­வின் முக்­கியத் தலை­மைப் பத­வி­களில் மாற்­றங்­களை அறி­வித்­துள்­ளது.

'இஎம்­டி­எம்' என்று அழைக்­கப்­படும் ஆங்­கி­லம், மலாய், தமிழ் ஊட­கக் குழு­மத்­தின் முதன்மை ஆசி­ரி­ய­ரும் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழின் ஆசி­ரி­ய­ரு­மான வாரன் ஃபெர்னாண்­டஸ், 56, புதிய வாய்ப்பு களுக்­காக தனது பத­வி­யி­லி­ருந்து வில­கு­கி­றார்.

இதை­ய­டுத்து, தற்­போது பிஸ்­னஸ் டைம்ஸ் ஆசி­ரி­ய­ராக உள்ள வோங் வெய் கோங், 54, 'இஎம்­டி­எம்' முதன்மை ஆசி­ரி­ய­ராக நிய­மிக்­கப்­ப­டு­கி­றார் என்று எஸ்­பி­எச் ஊட­கக் குழு­மத்­தின் அறிக்கை தெரி­வித்­தது.

'சிஎன்ஏ' மின்­னி­லக்­கப் பதிப்­பின் தலைமை ஆசி­ரி­ய­ராக இருந்த ஜெய்மி ஹோ, 49, ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆசி­ரி­யர் பொறுப்பை ஏற்­கி­றார்.

தற்­போது பிஸ்­னஸ் டைம்­ஸின் நிர்­வாக ஆசி­ரி­ய­ராக உள்ள திருவாட்டி சென் ஹுய்­ஃபென், 46, பிஸ்­னஸ் டைம்­ஸின் ஆசி­ரி­யர் ஆகி­றார்.

இந்த மாற்­றங்­கள் அனைத்­தும் அக்­டோ­பர் 26ஆம் தேதி நடப்­புக்கு வரு­வுள்ளன.

திரு ஃபெர்னாண்­டஸ், 2012ஆம் ஆண்­டி­லி­ருந்து ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆசி­ரி­ய­ரா­க­வும் 2016ஆம் ஆண்­டி­லி­ருந்து இஎம்­டிஎம் முதன்மை ஆசி­ரி­ய­ரா­க­வும் பதவி வகித்து வரு­கி­றார்.

"நம்­ப­க­மான செய்­தி­க­ளுக்­கும் கண்­ணோட்­டங்­க­ளுக்­கும் பல சிங்­கப்­பூ­ரர்­கள் நம்­பி­யி­ருக்­கும் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் மற்­றும் அதன் துணை நிறு­வ­னங்­க­ளுக்கு முதன்மை ஆசி­ரி­ய­ரா­கப் பணி­யாற்றி­யது எனக்­குக் கிடைத்த பெருமை," என்று திரு ஃபெர்னாண்­டஸ் தெரி­வித்­தார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

"வாச­கர்­க­ளின் மாறி­வ­ரும் தேவைக்கு ஏற்ப நானும் என்­னு­டைய சகாக்­களும் பல்­லூ­டக செய்தி அறையாக மாற்றியுள்ளோம். இதனை முன்­னெ­டுத்­துச் செல்­லும் சவால்­மிக்­க பணியை என்­னு­டைய சகாக்­கள் எதிர்­நோக்­கு­கின்­ற­னர்," என்­றார் அவர்.

எஸ்­பி­எச் மீடியா டிரஸ்ட்டின் தலை­வ­ரான கோ பூன் வான், கடந்த பத்து ஆண்­டு­க­ளாக தனிச்­சி­றப்­பு­மிக்க அர்ப்­ப­ணிப்­பு­டன் செய­லாற்­றிய வாரன் ஃபெர்னாண்­ட­சுக்கு நன்றி தெரி­வித்­துக் கொண்­டார்.

"ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்ந்து பல தளங்­களில் செய்தி வழங்­கும் ஊட­க­மா­க­வும் நிறு­வ­னத்­தின் சின்­ன­மா­க­வும் வளர்ச்­சி­ அடைய வெற்­றி­க­ர­மான வழியை அவர் அமைத்­துக் கொடுத்­துள்­ளார். அவ­ரது எதிர்­கால முயற்­சி­கள் அனைத்­தும் வெற்­றி­பெற வாழ்த்­து­கி­றோம்," என்றும் திரு கோ குறிப்­பிட்­டார்.

செய்­தித் தாளாக இருந்த ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்சை, நாள் முழு­வ­தும் பல தளங்­களில் வலம் வரும் பல்­லூ­ட­க­மாக வாரன் மாற்­றி­னார் என்று எஸ்­பி­எச் மீடியா தெரி­வித்­தது. 2022ல் உலக செய்தி பதிப்­பா­ளர் சங்­கத்­தின் தங்க விருது உட்­பட உள்ளூ­ரி­லும் வெளி­நா­டு­க­ளி­லும் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் ஏரா­ள­மான விரு­து­க­ளைப் பெற்று உள்­ளது. 2021ஆம் ஆண்­டில் நடை­பெற்ற ஆசிய மின்­னி­லக்க ஊடக விருது நிகழ்ச்­சி­யில் சிறந்த செய்தி இணை­யத்தளம் விரு­தை­யும் அது வென்­றுள்­ளது. 2000ஆம் ஆண்­டில் தொடங்­கப்­பட்ட எஸ்டி பள்ளி மாண­வர் கைச்­செ­லவு நிதி­யத்­துக்­கும் வாரன் தலை­வ­ராக இருந்­துள்­ளார்.

இவ­ருக்கு அடுத்­த­தாக முதன்மை ஆசி­ரி­யர் பொறுப்பை ஏற்­க­வி­ருக்­கும் திரு வோங், 2016ஆம் ஆண்­டிலிருந்து பிஸினஸ் டைம்ஸ் ஆசி­ரி­யராக இருந்து வருகிறார்.

"திரு வோங்­ நிர்­வா­கத்­தின்­கீழ் சிங்­கப்­பூ­ரின் ஒரே நிதி நாளி தழான 'பிஸ்­னஸ் டைம்ஸ்' மின்­னி­லக்க உத்தி­யில் கால் பதித்தது. இதன் காரணமாக நாளி­த­ழின் வளர்ச்சி மாதம் இரண்டு மடங்­கா­க­வும் மின்­னி­லக்கச் சந்தா மூன்று மடங்­கா­க­வும் அதி­க­ரித்­தது," என்று எஸ்­பி­எச் மீடி­யா­வின் அறிக்கை சுட்­டிக்­காட்­டி­யது.

"தொடர்ந்து மாறி­வ­ரும் உல­கில் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ், பிஸ்­னஸ் டைம்ஸ், மொழி நாளி­தழ்­க­ளான பெரித்தா ஹரி­யான், தமிழ் முரசு ஆகிய நான்கு நாளிதழ்களும் சிங்கப்­பூ­ரர்­கள் நம்­பும் குர­லாக இருக்க வேண்­டும்," என்று திரு வோங் வலி­யு­றுத்­தி­னார்.

"இதனை அடைய என்­னு­டைய செய்தி அறை­யின் சக ஊழி­யர்­ க­ளு­டன் சேர்ந்து பணி­யாற்ற இருக்­கி­றேன். அவர்­க­ளு­டைய ஆத­ர­வும் இதற்கு அவ­சி­யம்," என்று அவர் மேலும் கூறி­னார்.

ஸ்ட்­ரெய்ஸ் டைம்ஸ் ஆசி­ரி­யர் பொறுப்பை ஏற்­கும் திரு ஹோ, ஏறக்­கு­றைய 300 திற­மை­வாய்ந்த செய்­தி­யா­ளர்­கள், ஆசி­ரி­யர்­கள், தயா­ரிப்­பா­ளர்­களை வழி­ந­டத்­து­வார்.

அவர்­க­ளு­டன் சேர்ந்து தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் மின்­னி­லக்­கப் பதிப்பை முதன்மை செய்­தித் தள­மாக உரு­வாக்­கும் முயற்சி எடுக்­கப்­படும் என்­றார் அவர்.

1997 முதல் 2013 வரை வெளி­யு­றவு அமைச்­சின் அர­சாங்­கப் பணி­யில் இருந்த ஹோ, ஐரோப்பா, அமெ­ரிக்கா, மலே­சியா மற்­றும் இந்­தோ­னீ­சியா ஆகிய நாடு­க­ளின் இரு­த­ரப்பு உறவு விவ­கா­ரங்­க­ளைக் கவ­னித்­துக்­கொண்­டார்.

2013ல் மீடி­யா­கார்ப்­பில் இணை ஆசி­ரி­ய­ராக சேர்ந்த அவர், வானொலி, சிஎன்ஏ இண்­டர்­நே­ஷ­னல் நியூஸ், சிஎன்ஏ டிஜிட்­டல் போன்­ற­வற்­றில் பல்­வேறு பொறுப்­பு­ களை வகித்­தார். பிஸ்­னஸ் டைம்ஸ் ஆசி­ரி­யர் பொறுப்பை ஏற்­கும் திரு­வாட்டி சென், இரு­பது ஆண்­டு­கள் எஸ்­பி­எச் ஊடகத்தில் பணி­யாற்­றிய அனு­ப­வம் கொண்­ட­வர். இவர், திரு­வாட்டி டான் சாய் சியோங்­குக்­குப் பிறகு 2வது பெண் ஆசிரி­யர் ஆகிறார்.