மருத்துவமனைகளிலும் பராமரிப்பு இல்லங்களிலும் தங்கி சிகிச்சை பெறுவோரை நேரில் சென்று பார்ப்பவர்களுக்கு கட்டுப்பாடுகள் மீண்டும் முடுக்கிவிடப்படும்
நோயாளிகளைச் சந்திக்க வருவோருக்கான அந்தக் கட்டுப்பாடுகள் அக்டோபர் 14லிருந்து நவம்பர் 10 வரை நடப்பில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 கிருமித் தொற்று சம்பவங்கள் அதிகரிப்பதால் கட்டுப்பாடுகள் மீண்டும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. கட்டுப்பாடுகளின்கீழ் ஒரு நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மொத்த காலத்திலும் அவரைக் குறிப்பிட்ட இருவர் மட்டுமே நேரில் சென்று சந்திக்கலாம். ஒரு நேரத்தில் நோயாளிக்கு அருகே ஒருவர் மட்டுமே இருக்கமுடியும்.
மோசமாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளை அதிகபட்சம் ஐவர் பார்க்கமுடியும். அத்தகைய நோயாளிக்கு அருகே ஒரு நேரத்தில் இருவர் மட்டுமே இருக்கலாம். அரை மணிநேரத்திற்கு மேல் நோயாளியைச் சந்திக்க அனுமதி கிடையாது.
சிங்கப்பூரில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 11) நிலவரப்படி 11,732 தொற்று சம்பவங்கள் பதிவாகின.


