இந்தியாவில் நல்ல பொருளியல் சூழல் என கணிப்பு

இந்தியப் பொருளியல் நல்லமுறை யில் இருப்பதாக அனைத்துலகப் பண நிதியம் தெரிவித்துள்ளது. இருப்பினும் நாணயக் கொள்கை யில் கூடுதலான இறுக்கம் இந்தி யாவுக்குத் தேவைப்படுவதாக நிதியத்தின் தலைமைப் பொருளி யல் நிபுணர் பியர்-ஆலிவியர் கோரிஞ்சாஸ் கூறி உள்ளார்.

அத்துடன், 2022க்கான இந்தியப் பொருளியல் வளர்ச்சி 6.8% என நிதியம் கீழ்நோக்கித் திருத்தி உள்ளது. இவ்வாண்டில் இந்தியப் பொருளியல் 7.2% வள ரும் என ஏற்கெனவே ஜூலை மாதம் தான் முன்னுரைத்ததில் இருந்து 0.6 விழுக்காட்டை நிதி யம் குறைத்துள்ளது. நிதியத்தின் வருடாந்திர உலகப் பொருளியல் நிலவர அறிக்கையில் இந்த விவ ரங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.

எதிர்பார்த்ததைக் காட்டிலும் இரண்டாம் காலாண்டில் குறை வான வளர்ச்சி ஏற்பட்டதால் முன்னுரைப்பு திருத்தப்பட்டுள்ள தாக அறிக்கை கூறியது.

2021 ஏப்ரல்முதல் 2022 மார்ச் வரையிலான நிதி ஆண்டில் இந்தியா 8.7% வளர்ச்சியடைந் தது. இதைக் குறிப்பிட்டு செய்தி யாளர்களிடம் பேசிய திரு கோரிஞ்சாஸ், "இவ்வாண்டு இந்தியாவில் நிலவும் நல்ல பொருளியல் சூழல் அடுத்த ஆண்டிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அடுத்த ஆண்டு இவ்வாண்டைக் காட்டிலும் சற்று குறைவாக 6.1% வளர்ச்சி இருக் கலாம்," என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உலகப் பொரு ளியல் அடுத்த ஆண்டு மோச மடையலாம் என நிதியம் கணித்து உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!