சிங்கப்பூரில் சமூக அளவிலான கொவிட்-19 தொற்று எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து மருத்துவமனைகளிலும் பராமரிப்பு இல்லங்களிலும் கட்டுப்பாடுகள் நாளைமுதல் கடுமையாக்கப்படுகின்றன. நவம்பர் 10ஆம் தேதிவரை கிட்டத்தட்ட நான்கு வாரங்களுக்கு இந்தக் கடுமை நீடிக்கும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்து உள்ளது.
புதிய கட்டுப்பாடுகளின்படி, முன்கூட்டி அனுமதிபெற்ற இரு வருகையாளர்கள் மட்டும் நோயாளி களைப் பார்க்க அனுமதிக்கப்படுவர். ஒரு நேரத்தில் அவர்களில் ஒருவர் மட்டுமே நோயாளியின் படுக்கையின் அருகே இருக்கலாம். கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைப் பார்க்க, முன்அனுமதிபெற்ற ஐவர் அனுமதிக்கப்படுவர்.
என்றாலும், ஒரு நேரத்தில் அவர்களில் இருவர் மட்டும் நோயாளியின் படுக்கை அருகே இருக்கலாம். ஒவ்வொரு வருகையும் 30 நிமிடங்களுக்குக் கட்டுப்
படுத்தப்படும்.
சில சூழ்நிலைகளில் இதில் விதிவிலக்கு இருக்கும்.
கடுமையான நோயால் பாதிக்கப்பட்டோர், குழந்தை நோயாளிகள், குழந்தை பெற்ற, பெறப்
போகும் தாய்மார், கூடுதல் பராமரிப்பு தேவைப்படுவோர் போன்றோரைக் காண வருவோர், 30 நிமிடங்களுக்கும் மேல் இருக்க அனு
மதிக்கப்படுவர்.
இருப்பினும், இந்த விதிவிலக்கு குறித்து சூழ்நிலையின் அடிப்
படையில் மருத்துவமனையே முடிவு செய்யும்.
மருத்துவமனை சிகிச்சைப் பிரி வில் சாப்பிடவோ அருந்தவோ அனுமதி இல்லை. அதேபோல நோயாளிகளுக்கான கழிவறைகளை வருகையாளர்கள் பயன்படுத்தக்கூடாது. நோயாளியின் படுக்கையில் அமர வருகையாளர்களுக்கு அனுமதி இல்லை.
பராமரிப்பு இல்லங்களில், முன் அனுமதிபெற்ற நால்வர் வரை அனுமதிக்கப்படலாம். அவர்களில் ஒரு வருகையாளர் மட்டும் ஒரு நேரத்தில் 30 நிமிடம் வரை இருக்க அனுமதிக்கப்படுவார்.
வருகையாளர்கள் அனைவரும் நடப்பில் உள்ள பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியம். அதேநேரம், கொவிட்-19 தொற்றுச் சம்பவங்
களைக் கையாளும் பராமரிப்பு இல்லங்கள், வருகையாளர்களுக்கு தற்காலிகத் தடை விதிக்கலாம்.
மருத்துவமனைகளுக்கும் பரா
மரிப்பு இல்லங்களுக்கும் செல்வோர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதை உறுதிசெய்துகொள்
வதோடு நோயாளியைச் சென்று பார்க்கும் நாளில் ஏஆர்டி கொவிட்-19 பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
எளிதில் பாதிப்படையக்கூடிய, தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நோயாளிகளைப் பார்க்க வருவோருக்கான கட்டுப்பாடுகளைக் கடுமையாக்குவது பற்றி மருத்துவ
மனைகளும் பராமரிப்பு இல்லங்களும் முடிவு செய்துகொள்ளலாம்.
நேற்று முன்தினம் புதிதாக 11,732 பேருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டது. இந்த எண்ணிக்கை அதற்கு முந்திய நாளில் ஏற்பட்ட 4,719ஐ காட்டிலும் இரு
மடங்கிற்கு மேல். இந்தச் சூழலில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படு வதாக அமைச்சு கூறியது.

