'டோவர் ஃபாரஸ்ட்'டில் 3,000 பிடிஓ வீடுகள் கட்டப்படும்

'டோவர் ஃபாரஸ்ட்'டில் 3,000 பிடிஓ வீடுகள் கட்டப்படும்

1 mins read
5702bbb2-1d19-43b8-b588-8ab948c4ad63
ஓவியரின் கைவண்ணத்தில் 'டோவர் ஃபாரஸ்ட்' வீடமைப்புப் பேட்டை. படம்: வீவக -

'டோவர் ஃபாரஸ்ட்'டில் உள்ள கிழக்குப் பகுதியில், தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் (பிடிஓ) ஏறத்தாழ 3,000 வீடுகள் கட்டப்பட்ட இருக்கின்றன. முதல் வீட்டு விற்பனைத் திட்டம் நவம்பரில் தொடங்கப்படும்.

முதல் திட்டத்தின்கீழ் 1,330 மூவறை, நாலறை வீடுகள் கட்டப்படும். அருகிலுள்ள உலு பாண்டான் கால்வாய் மற்றும் ஹாலந்து குரோவ் தரைவீடு பேட்டை தெரியும்படி புதிய புளோக்குகள் வெவ்வேறு உயரத்தில் கட்டப்படும். டோவர் எம்ஆர்டி நிலையத்திற்கு நடந்துசெல்லும் தூரத்தில் அவை இருக்கும்.

வீட்டு விலைகள், அவை கட்டி முடிக்கப்படும் காலகட்டம் போன்ற கூடுதல் விவரங்கள் வீட்டுத் திட்டம் தொடங்கப்பட்ட பிறகே வழங்கப்படும்.

புதிய வீடமைப்புப் பேட்டைகள், சுற்றுச்சூழலுக்கு குறைந்தபட்ச பாதிப்பை ஏற்படுத்தும் வண்ணம் வடிவமைக்கப்படும் என்று தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்