டோவர் ஃபாரஸ்டில் 3,000 பிடிஓ வீடுகள் கட்டப்படும் மூன்று திட்டங்களில் முதல் திட்ட வீடுகள் நவம்பரில் விற்பனைக்கு வரும்

டோவர் ஃபாரஸ்டில் 3,000 பிடிஓ வீடுகள் கட்டப்படும் மூன்று திட்டங்களில் முதல் திட்ட வீடுகள் நவம்பரில் விற்பனைக்கு வரும்

3 mins read
f6ea2aa8-dcbb-4fe9-8121-1e547ab9071b
டோவர் ஃபாரஸ்டின் கிழக்குப் பாதியில் ஏறக்குறைய 11 ஹெக்டர் பரப்பளவில் பொது வீடமைப்புத் திட்டங்கள் இடம்பெறும். படம்: சாவ் பாவ் -

உலு பாண்­டா­னில் உள்ள டோவர் ஃபாரஸ்டின் கிழக்­குப் பாதி­யில் ஏறக்­கு­றைய 3,000 பிடிஓ வீடு­கள் கட்­டப்­படும். மூன்று வீட­மைப்­புத் திட்­டங்­க­ளின் அங்­க­மாக அவை இருக்­கும். முதல் திட்ட வீடு­கள் அடுத்த மாதம் விற்­ப­னைக்­குக் கொடுக்­கப்­படும்.

முதல் திட்­டத்­தில் 1,330 மூவறை, நாலறை வீடு­க­ளைக் கொண்ட அடுக்குமாடி­கள் எழும்.

அந்த அடுக்குமாடிகள், பக்­கத்­தில் இருக்­கும் உலு பாண்­டான் கால்­வாய், அப்­பால் இருக்­கும் தரை வீடு­க­ளு­டன் கூடிய ஹாலண்ட் குரூவ் குடி­யி­ருப்­புப் பேட்டை ஆகி­ய­வற்­றைக் கூடுமா­ன­வரை நன்கு பார்க்க ஏது­வாக பல­வித உய­ரங்­களில் கட்­டப்­படும்.

உலு பாண்­ட­னைப் பார்த்­த­படி இருக்­கும் அடுக்குமாடி­கள் உயரம் குறை­வா­க­வும் காமன்­வெல்த் அவென்யூ வெஸ்ட் அருகே அமை­யும் அடுக்குமாடிகள் உய­ர­மா­ன­வை­யா­க­வும் இருக்­கும் என்று வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் நேற்று தெரி­வித்­தது.

தேசிய வளர்ச்­சித் துணை அமைச்­சர் டான் கியட் ஹாவ் நேற்று தோ பாயோ வீவக மையத்­தில் நடந்த வீவக நிகழ்ச்­சி­யில் இந்த வீட்­டுத் திட்ட விவ­ரங்­களை வெளி­யிட்­டார்.

சமூ­கத் தோட்­டங்­க­ளுக்கு இடம் அளிக்­கும் வகை­யில் அடுக்குமாடி­கள் மொட்டை மாடி­க­ளைக் கொண்டு இருக்­கும். கூரை தோட்­டங்­களும் இருக்­கும்.

அடுத்த மாதம் விற்­ப­னைக்­குக் கொடுக்­கப்­படும் வீடு­கள், டோவர் எம்­ஆர்டி நிலை­யத்­தில் இருந்து நடந்து செல்­லும் தொலை­வில் அமைந்­தி­ருக்­கும்.

அது கார் புழக்­கம் குறை­வான வீவ­க­வின் முத­லா­வது வட்­டா­ர­மா­க­வும் திக­ழும். குடி­யி­ருப்­புப் பேட்­டை­யில் சரி­வான மழைத் தோட்­டம் இருக்­கும். இதன் தரை மட்­டம் காமன்­வெல்த் அவென்யூ வெஸ்ட்­டை­விட தாழ்­வாக இருக்­கும் என்று கழ­கம் கூறி­யது.

வீட்­டின் விலை, கட்டி முடிக்­கப்­படும் தேதி போன்ற விவ­ரங்­கள், வீடு­கள் விற்­ப­னைக்­குக் வரும்­போ­து­தான் தெரிய­வ­ரும்.

உலு பாண்­டான் குடி­யி­ருப்பு பேட்­டை­யில் சுமார் 5 ஹெக்­டர் பசுமை வளம் இருக்­கும். அதில் 1.2 ஹெக்­டர் பரப்­புள்ள ஒரு பூங்­கா­வும் உள்­ள­டங்­கும்.

அந்­தப் பூங்கா இப்­போ­தைய இயற்கை நீரோ­டை­யு­டன் தனக்கே உரிய உயி­ரி­னங்­களில் பெரும்­பா­லா­ன­வற்றை கட்­டிக்­காக்­கும்.

உலு பாண்­டான் கால்­வாய் நெடு­கி­லும் சென்று பல்­வேறு பகு­தி­களை இணைக்­கும் 1.6 கி.மீ. நீள­முள்ள ஒரு பாதை­யும் அதில் உள்­ள­டங்­கும்.

600 மீட்­டர் நீளத்­திற்கு மெது­வோட்­டப் பாதை ஒன்று, 34வது மாடி ஆகாய பாலங்­கள் வழி­யாக மூன்று புளோக்­கு­களை இணைக்­கும் வகை­யில் அமைந்­தி­ருக்­கும்.

சில்­லறைக் கடை­கள், உண­வ­கங்­கள், பேரங்­கா­டி­கள், விளை­யாட்­டுத் திடல்­கள், தோட்ட நடை­பா­தை­கள், சமூக அரங்­கம் எல்­லாம் இதர வச­தி­களில் உள்­ள­டங்­கும்.

உலு பாண்­டா­னில் சில இடங்­களில் 40 மீட்­டர் அக­லத்­து­டன் கூடிய பசு­மைப்­பாதை ஒன்றை உரு­வாக்­கும் நோக்­கத்­து­டன் பொதுப் பய­னீட்­டுக் கழ­கம், தேசிய பூங்கா வாரி­யம் ஆகி­ய­வற்­று­டன் சேர்ந்து வீவக செயல்­பட்டு வரு­கிறது. உலு பாண்­டான் கால்­வாயும் வெள்­ளம் வராத வகை­யில் மேம்­ப­டுத்­தப்­படும்.

குவீன்ஸ்­ட­வுன் முதிர்ச்சி அடைந்த பேட்­டை­யில் அமைந்து இருக்­கும் உலு பாண்­டான், கார் புழக்­கம் குறைந்த வட்­டா­ர­மாக வகைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நான்கு வீவக பேட்­டை­களில் ஒன்­றா­கும்.

அங்கு பொதுப் போக்­கு­வ­ரத்து, நடை­பா­தை­கள், சைக்­கி­ளோட்­டப் பாதை­கள் பல­வற்­றுக்­கும் திட்­ட­மி­டப்­ப­டு­கின்­றன.

இத்­த­கைய பேட்­டை­களில் கார் பேட்­டை­க­ளின் எண்­ணிக்­கையை வீவக குறைக்­கும். இத­னால் பொது வச­தி­க­ளுக்­கும் பசுமை வளத்­திற்­கும் அதிக நிலப் பகுதி­கள் கிடைக்­கும். வாக­னங்­களை நிறுத்தி வைப்­ப­தற்­கான இடங்­களைப் பொறுத்­த­வரை குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்­குத்­தான் முன்னு­ரிமை இருக்­கும்.