விஸ்தாரா-ஏர் இந்தியா இணைப்பு: டாடாவுடன் எஸ்ஐஏ பேச்சுவார்த்தை

இந்­தி­யா­வின் ஏர் இந்­தியா விமான நிறு­வ­னத்­தை­யும் விஸ்­தாரா விமான நிறு­வ­னத்­தை­யும் இணைக்­கும் சாத்­தி­யம் தொடர்­பில் இந்­தி­யா­வின் டாடா குழு­மத்­து­டன் தான் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­வ­தாக சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் (எஸ்ஐஏ) நேற்று உறு­திப்­ப­டுத்­தி­யது.

ஏர் இந்­தியா நிறு­வ­னத்­தின் 100 விழுக்­காட்டுப் பாத்­தி­ய­தையை டாடா நிறு­வ­னம் வாங்­கி­விட்­ட­தாக இந்­திய ஊட­கங்­களில் தக­வல்­கள் வெளி­யாகி இருக்­கின்­றன.

இந்­தச் சூழ­லில் எஸ்­ஐஏ நிறு­வனம், பேச்சு வார்த்­தையை உறு­திப்­ப­டுத்தி இருக்­கிறது.

விஸ்­தாரா நிறு­வ­னத்­தில் டாடா நிறு­வ­னத்­திற்கு 51 விழுக்­காட்டு பங்கு இருக்­கிறது. எஞ்­சிய 49% பங்கு எஸ்­ஐஏ வசம் உள்ளது.

எஸ்­ஐ­ஏ­வுக்­கும் டாடா­வுக்­கும் இடை­யில் இப்­போ­தைய பங்­காளித்துவ உறவை ஆழ­மாக்­கும் நோக்­கத்­தில் பேச்­சு­வார்த்­தை­கள் நடந்து வரு­கின்­றன.

அதில் விஸ்­தா­ரா­வை­யும் ஏர் இந்­தி­யா­வை­யும் ஒருங்­கி­ணைக்­கும் வாய்ப்பு குறித்­தும் பேசப்­ப­ட­லாம் என்று சிங்­கப்­பூர் பங்­குச் சந்­தை­யி­டம் தாக்­கல் செய்த அறிக்கை ஒன்­றில் எஸ்­ஐஏ நிறு­வ­னம் தெரி­வித்து உள்­ளது.

பேச்சுவார்த்­தை­கள் நடந்து வரு­கின்­றன. இது­வ­ரை­யில் சம்­பந்­தப்­பட்ட தரப்­பு­க­ளுக்கு இடை­யில் திட்­ட­வட்­ட­மான நிபந்­த­னை­கள் எது­வும் ஒப்­புக்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

விஸ்­தாரா, ஏர் இந்­தி­யா­வு­டன் ஐக்­கி­ய­மா­கும் பட்­சத்­தில் அதில் எஸ்­ஐ­ஏ­வுக்கு எவ்­வ­ளவு பங்கு இருக்­கும் என்­பதோ, பல சிர­மங்­களை எதிர்­நோக்­கும் ஏர் இந்­தியா குழு­மத்­திற்கு புதி­தாக பணம் எதுவும் தேவைப்­ப­டுமா என்­ப­தும் தெரி­ய­வில்லை.

எந்­த­வோர் உடன்­பா­டும் சிங்­கப்­பூ­ரின் போட்­டித்­தி­றன் கண்­காணிப்பு அமைப்­பி­டம் இருந்­தும் இந்­திய அதி­கா­ரி­க­ளி­டம் இருந்­தும் அனு­ம­தி­யைப் பெற வேண்டி இருக்கும் என்­பதை அறிக்­கை­யில் எஸ்­ஐஏ நிறு­வ­னம் சுட்­டியது.

விஸ்­தாரா நிறு­வ­னம் 2013ல் தோற்­று­விக்­கப்­பட்­டது. அதி­வே­க­மாக வளர்ந்து வரும் இந்­திய விமானப் போக்­கு­வ­ரத்து தொழில்­து­றை­யில் எஸ்­ஐஏ குழு­மம் ஈடு­பட அது வழி­வ­குக்­கிறது.

இந்­தி­யா­வில் உள்­நாட்டு விமானப் போக்­கு­வ­ரத்து மிக வலு­வாக இருக்­கிறது. இந்­தி­யர்­கள் அனைத்­து­லக அள­வி­லும் அதி­க­மா­கப் பய­ணம் மேற்­கொள்­கி­றார்­கள். இந்­தப் பய­ணங்­கள் அடுத்த 10 ஆண்­டு­களில் இரண்டு மடங்­கிற்­கும் அதி­க­மாகக் கூடும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இந்­தியா 2024ஆம் ஆண்டு வாக்­கில் உல­கின் ஆகப் பெரிய விமா­னப் போக்­கு­வ­ரத்­துச் சந்­தை­யாக ஆகும் என்று அனைத்­து­லக விமா­னப் போக்­கு­வ­ரத்­துச் சங்­கம் கணித்து இருக்­கிறது.

இந்­தியா, ஏற்­கெ­னவே உல­கின் ஆகப் பெரிய உள்­நாட்டு விமா­னப் பய­ணச் சந்­தை­யாக ஆகி­விட்­டது என்று 2021ஆம் ஆண்டு இந்­திய விமா­னப் போக்­கு­வ­ரத்து துறை அமைச்­சர் தெரி­வித்து இருந்­தார்.

எஸ்­ஐஏ நிறு­வ­னம் விஸ்­தாரா தொழில் பாத்­தி­ய­தையைத் தனது பல பயண மைய உத்­தி­யின் முக்கி­ய­மான ஓர் அங்­க­மாக கரு­து­கிறது.

எஸ்­ஐஏ நிறு­வ­னம் சிங்­கப்­பூரை வலு­வான மைய­மா­கக் கொண்டு செயல்­ப­டு­கிறது. அதற்கு உறு­துணை­யாகத் திகழும் முக்­கி­ய­மான தரப்­பு­களை எட்­டு­வதற்கு அந்­தப் பல மைய உத்தி எஸ்ஐஏவுக்கு உத­வு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!