சிங்கப்பூரில் மீண்டும் மலேசிய பிராய்லர் கோழி

சிங்கப்பூரில் மீண்டும் மலேசிய பிராய்லர் கோழி

1 mins read
d4b829cd-f558-4543-8ce2-32126b3520bd
வீவோ சிட்டி ஃபேர்பிரைஸ் கடையில் நேற்று விற்பனைக்கு இருந்த மலேசியக் கோழி இறைச்சி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மலே­சி­யா­வில் இருந்து பிராய்­லர் கோழி­கள் நேற்று பிற்­ப­க­லில் சிங்கப்­பூர் சில்­லறை விற்­ப­னைக் கடை­க­ளுக்­குத் திரும்­பின.

உள்­நாட்­டுப் பற்­றாக்­குறை கார­ண­மாக மலே­சியா கோழி ஏற்று மதிக்கு நாலரை மாதங்­க­ளுக்கு முன் தடை விதித்­தது.

சிங்­கப்­பூ­ருக்­குத் தேவை­யான கோழி­களில் ஏறக்­கு­றைய மூன்­றில் ஒரு பங்கு கோழி­கள் அப்­போது மலே­சி­யா­வில் இருந்து இங்கு இறக்­கு­ம­தி­யா­யின.

பிராய்­லர் கோழி­கள் என்­பவை, இறைச்­சிக்­கா­கவே வளர்க்­கப்­ப­டு­பவை. சிங்­கப்­பூ­ரில் பேரங்­கா­டி­களில் காணப்­படும் மிகப் பிர­ப­ல­மான கோழி­கள் பிராய்­லர் கோழி­கள்­தான்.

மலே­சி­யா­வில் இருந்து இறக்கு மதி­யா­கும் கோழி­களில் இந்த வகை கோழி­களே மிக அதி­கம்.

மலே­சி­யா­வில் இருந்து மாதம் ஒன்­றுக்கு சுமார் 1.8 மில்­லி­யன் கோழி­கள் சிங்­கப்­பூ­ருக்கு வரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மலே­சியா தடை விதித்­த­தற்கு முன்பு கோழி இறக்­கு­மதி மாதம் 3.6 மில்­லி­ய­னாக இருந்­தது.

இயூ டீ கடை­யில் இருப்பு வைக்­கப்­பட்ட சகூரா உரித்­த­கோ­ழி­கள் நேற்று ஒன்று $14.80க்கு விற்­கப்­பட்­டது. அதன் எடை 1.3 கிலோ­வில் இருந்து 1.5 கிலோ வரை இருந்­தது.

மலே­சி­யா­வில் இருந்து நேற்று வரம்­புக்­குட்­பட்ட அள­வி­லேயே கோழி­கள் இறக்­கு­ம­தி­யா­ன­தா­கத் தெரி­கிறது. ஃபேர்பி­ரைஸ் செய­லி­யைப் பார்க்­கை­யில், அத­னு­டைய 10 கடை­க­ளி­லும் இருப்பு குறை­வாக இருந்­தது தெரிந்­தது.

மலே­சியாவில் இருந்து இறக்குமதியாகும் பிராய்­லர் கோழி­கள் இன்று வெள்­ளிக்­கி­ழமை முதல் சிங்­கப்­பூ­ரின் ஈரச்­சந்­தை­களில் கிடைக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­படு­கிறது.