ரூ.900 கோடி மோசடி: லட்சக்கணக்கான மக்கள் ஏமாற்றம்; சீனர், தைவானியர் உள்ளிட்ட 10 பேர் இந்தியாவில் கைது

ரூ.900 கோடி மோசடி: லட்சக்கணக்கான மக்கள் ஏமாற்றம்; சீனர், தைவானியர் உள்ளிட்ட 10 பேர் இந்தியாவில் கைது

2 mins read
d4f375c9-2a28-4410-87ac-dea878e9734b
ஆந்திராவின் காவல்துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் செய்தியாளர் கூட்டத்தில் ரூ.903 கோடி மோசடி பற்றிய பல்வேறு விவரங்களைத் தெரிவித்தனர். தாங்கள் கைப்பற்றிய பல ஆதாரங்களையும் சந்தேகத்திற்குரியவர்களையும் செய்தி யாளர்களிடம் அவர்கள் காட்டினர். படம்: இந்திய ஊடகம் -

ஆந்­தி­ரா­வின் ஹைத­ரா­பாத் காவல்­துறை ரூ. 900 கோடி (S$170 மில்­லி­யன்) முத­லீட்டு தில்­லு­முல்லு மோசடிக் கும்­பலை முடக்கி இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்டது.

அந்த மோச­டி­யில் சம்­பந்­தப்­பட்­ட­தாக நம்­பப்­படும் தைவா­னி­யர், சீனர் உள்­ளிட்ட 10 பேர் கைது செய்­யப்­பட்டு இருப்­ப­தா­க­ஆந்திரக் காவல்­துறை தெரி­வித்­தது.

ஏரா­ள­மாக லாபம் கிடைக்­கும் என்று நம்பி லட்­சக்­க­ணக்­கான மக்­கள் அந்த மோசடி வலை­யில் சிக்­கி பணத்­தைப் பறி­கொ­டுத்துள்ளதாக நம்­பப்­ப­டு­கிறது.

ஹைத­ரா­பாத்­தில் நடந்த செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் பேசிய அந்த நகர காவல்­துறை ஆணை­யர் சி.வி ஆனந்த், இந்த மோச­டி­யில் ரஞ்­சன் மணி கார்ப்­ப­ரே­ஷன், கேடி­எஸ் ஃபோரெக்ஸ் பிரை­வேட் லிமிடெட் என்ற இரண்டு நிறு­வ­னங்­கள் மிக முக்­கிய பங்­காற்றி இருப்­ப­தா­கக் கூறினார்.

அந்த இரண்டு நிறு­வ­னங்­களும் பொது மக்­க­ளி­டம் இருந்து வசூ­லிக்­கப்­பட்ட தொகையை அந்­நியச் செலா­வ­ணி­யாக மாற்றி பிறகு அதை சட்­ட­வி­ரோ­த­மான முறை­யில் வெளி­நாட்­டிற்கு அனுப்ப உதவி இருக்­கின்­றன என்று நம்­பப்­ப­டு­கிறது.

இந்த மாபெ­ரும் மோச­டி­யின் கார­ண­கர்த்தா என்று நம்­பப்­ப­டு­ப­வர் சீனா­வைத் தள­மா­கக்கொண்டு செயல்­பட்டுள்ளார்.

பல நாட்­டி­ன­ரின் உத­வி­யு­டன் அவர் இந்­தி­யா­வில் கைவ­ரிசை காட்டி இருக்­கிறார் என்­பது புலன்­விசாரணை மூலம் தெரி­ய­வந்து இருப்­ப­தாக காவல்­துறை அதி­கா­ரி­கள் குறிப்­பிட்­ட­னர்.

இந்­தப் பெரும் மோசடி விவ­கா­ரத்தை அம­லாக்க இயக்­கு­ந­ர­கம், மத்­திய புலன்­வி­சா­ர­ணைப் பிரிவு ஆகி­ய­வற்­றி­டம் தெரி­வித்து அவற்­றின் உத­வி­யு­டன் பல கோணங்­க­ளி­லும் புலன்­வி­சா­ரணை நடத்­தப்போவ­தாக ஆந்­திர காவல்­துறை ஆணை­யர் தெரி­வித்­தார்.

ஆந்­தி­ரா­வின் தர்­னாகா என்ற வட்­டா­ரத்­தைச் சேர்ந்த ஒரு­வர், LOXAM என்ற செய­லி­யில் தான் ரூ. 1.60 லட்­சம் முத­லீடு செய்­த­தா­க­வும் ஆனால் அந்­தப் பணம் பறி­போய்­விட்­ட­தா­க­வும் சில மாதங்­க­ளுக்கு முன் இணை­யக் குற்­றச்­செ­யல் காவல்­துறை­யி­டம் புகார் செய்­தார். அதை­ய­டுத்து அதி­கா­ரி­கள் பெரி­ய­ள­வில் புலன்­வி­சா­ணை­கள் தொடங்­கி­னர்.

அதன்­வி­ளை­வாக இந்­தப் பிரம்­மாண்ட மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.