பிரிட்டிஷ் நிதியமைச்சர் நீக்கம்

பிரிட்­டிஷ் நிதி­ய­மைச்­சர் பத­வி­யில் இருந்து குவாசி குவார்ட்­டெங் (படம்) நீக்­கப்­பட்­டு­விட்­ட­தாக பிபிசி நிறு­வ­னம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

இத­னை­ய­டுத்து, பிரிட்­டிஷ் நிதி அமைச்சராகக் குறுகிய காலம் பதவி வகித்தோர் பட்டியலில் திரு குவார்ட்­டெங் இரண்டாமிடத்தைப் பிடிக்கலாம் என்­றும் அச்­செய்தி தெரி­விக்­கிறது.

கடந்த 2019ஆம் ஆண்டிற்குப் பிறகு, பிரிட்டன் நான்கு நிதி அமைச்சர்களைக் கண்டுவிட்டது.

இதனிடையே, பிரிட்டனின் அடுத்த நிதியமைச்சராக இப்போது வெளியுறவு அமைச்சராக இருக்கும் திரு ஜெரமி ஹன்ட் நியமிக்கப்படலாம் எனப் பேச்சு அடிபடுகிறது.

திரு குவார்ட்­டெங் தாக்­கல் செய்த கடன்­கள் நிரம்­பிய வரவு செல­வுத் திட்­ட­மா­னது சந்­தை­யில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்தி, அமெ­ரிக்க டால­ருக்கு நிக­ரான பிரிட்­டிஷ் பவுண்­டின் மதிப்­பில் பெரும் சரி­விற்கு வித்­திட்­ட­தா­கக் கூறப்­படு­கிறது. இதுவே, இவ­ரது பதவி பறி­போ­கக் கார­ண­மா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

இத­னி­டையே, பிரிட்­டிஷ் பிர­தமர் லிஸ் டிரஸ், வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் பல தலை­கீழ் மாற்­றங்­களை நேற்று அறி­விக்­கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!