'எக்ஸ்பிபி' கிருமி எளிதில் பரவக்கூடியது என்றாலும் இதுவரை கடும் பாதிப்பு இல்லை

'எக்ஸ்பிபி' கிருமி எளிதில் பரவக்கூடியது என்றாலும் இதுவரை கடும் பாதிப்பு இல்லை

2 mins read

'உருமாறிய கிருமியின் வீரியம் இதுவரை குறைவாகவே உள்ளது'

சிங்­கப்­பூ­ரில் 'எக்ஸ்­பிபி' வகை ஓமிக்­ரான் கிரு­மி­யு­டன் தொடர்­பு­டைய மர­ணங்­களோ கடு­மை­யான நோய் பாதிப்போ இது­வரை ஏற்­ப­ட­வில்லை. ஆனால் இந்த உரு­மா­றிய கிரு­மி­யால் அண்­மைக் கால­மாக சிங்­கப்­பூ­ரி­லும் மற்ற நாடு­க­ளி­லும் கொவிட்-19 தொற்று எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது.

இருப்­பி­னும் கடந்த மாதத்­தில் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள நோயா­ளி­க­ளி­டம் இருந்­தும் உயிர்­வாயு தேவைப்­ப­டு­வோ­ரி­டம் இருந்­தும் எடுக்­கப்­பட்ட பரி­சோ­தனை மாதி­ரி­யில் இந்­தப் புதிய வகைக் கிருமி கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை.

எனி­னும், இத்­த­கை­யோ­ரி­டம் புதி­ய­வகை கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளதா என்­பது பற்றி பிற­கு­தான் தெரி­ய­வ­ரும். கடு­மை­யான தொற்று அறி­கு­றி­கள் தென்­பட்­ட­தற்­கும் 'எக்ஸ்­பிபி' வகை கிருமி தொற்­றி­யது உறு­திப்­ப­டுத்­தப்­ப­டு­வதற்­கும் இடையே நேர இடை­வெளி இருப்­பதே இதற்­குக் கார­ணம்.

'எக்ஸ்­பிபி' துணைத் திரிபு எளி­தில் பர­வக்­கூ­டி­யது என்­றா­லும், முந்­தைய வகை கிரு­மி­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் இதன் வீரி­யம் குறை­வாக இருப்­ப­தா­கவே தெரி­கிறது என்று சிங்­கப்­பூ­ரின் மருத்­து­வச் சேவை பிரிவு இயக்­கு­நர் கென்­னத் மாக் கூறி­னார்.

சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங்­கும் இணைப் பேரா­சி­ரி­யர் மாக்­கும் நேற்று காலை செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்து தற்­போ­தைய கொவிட்-19 கிரு­மித்­தொற்று நில­வ­ரம் குறித்து விளக்­கம் தந்­த­னர்.

எக்ஸ்­பிபி வகை உரு­மா­றிய கிருமி முந்­தைய கிருமி வகை­கள் போல் இல்­லா­மல் மோச­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்­தா­மல் இருந்­தால் மருத்­து­வ­மனை வளங்­கள் மீதான சுமை குறை­வாக இருக்­கும் என்று பேரா­சி­ரி­யர் மாக் தெரி­வித்­தார். இருப்­பி­னும், தற்­போது எக்ஸ்­பிபி குறித்த முழு பரி­சோ­தனை முடி­வு­கள் இல்லை என்­றும் அவர் சொன்­னார்.

சிங்­கப்­பூ­ரில் புதி­ய­தொரு கொவிட்-19 தொற்று அலை வீசி வரு­கிறது. புதி­தாக 9,000க்கும் அதி­க­மா­னோ­ரி­டம் தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்­சுக்கு நேற்று முன்­தி­னம் தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டது.

அக்­டோ­பர் 3 முதல் 9ஆம் தேதி வரை உள்­ளூ­ரில் பதி­வான தொற்று பாதிப்­பு­களில் 'எக்ஸ்­பிபி' துணைத் திரிபு 54 விழுக்­காடு பங்கு வகித்­தது.

அதற்கு முந்­தைய வாரத்­தில் உள்­ளூர் தொற்று பாதிப்­பு­களில் 'எக்ஸ்­பிபி' 22 விழுக்­காடு பங்கு வகித்­தது.

'எக்ஸ்­பிபி' வகைக் கிருமி இந்­தியா, ஆஸ்­தி­ரே­லியா, பங்­ளா­தேஷ், டென்­மார்க், ஜப்­பான், அமெ­ரிக்கா உள்ளிட்ட பல நாடு­களில் ஆகஸ்ட் மாதம் முதல் பதி­வா­கி­யுள்­ளது.

நேற்று முன்­தி­ன நில­வ­ரப்­படி 562 பேர் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர். அவர்­களில் 44 பேருக்கு உயிர்வாயு தேவைப்­ப­டு­கிறது; தீவிர சிகிச்­சைப் பிரி­வில் ஒன்­பது பேர் உள்­ள­னர்.

மோச­மான உடல்­நி­லைக்கு உள்­ளா­கி­யோ­ரின் எண்­ணிக்கை குறை­வாக இருந்­தா­லும் நிலை­மை­யைத் தொடர்ந்து கண்­கா­ணித்து வரு­வ­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது. நோயா­ளி­களில் பெரும்­பா­லா­னோர், குறிப்­பாக முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர், தொண்டை வலி, காய்ச்­சல் போன்ற அறி­கு­றி­க­ளையே கொண்­டுள்­ள­னர்.

இதற்­கி­டையே, தடுப்­பூசி போட்டுக்­கொண்­டோ­ரும் எக்ஸ்­பிபி வகைக் கிரு­மி­யால் பாதிக்­கப்­ப­ட­லாம் என்­றும் மொத்த கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­களில் 17% மறு­முறை தொற்று ஏற்­பட்­டு உள்ள சம்­ப­வங்­கள் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. அத­னால் தகு­தி­பெ­று­வோர் தங்­க­ளின் கூடு­தல் (பூஸ்­டர்) தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ளு­மா­றும் அறி­வு­றுத்­தப்­ப­டு­கிறது.

மேலும் செய்திகள் - பக்கம் 2, 3