கார், லாரி, பேருந்து சம்பந்தப்பட்ட விபத்தில் கிராப் ஓட்டுநர் பலி; 40வது வேலையிட மரணம்

கார், லாரி, பேருந்து சம்பந்தப்பட்ட விபத்தில் கிராப் ஓட்டுநர் பலி; 40வது வேலையிட மரணம்

1 mins read
0c89d3c9-caca-4039-9ce6-bc99167c84fa
அங் மோ கியோ வட்டாரத்தில் காரும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் பேருந்து எவ்வாறு சம்பந்தப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை. படம்: சாவ்பாவ் -

பயணி ஒரு­வரை ஏற்­றிச் சென்­று­கொண்டிருந்த 68 வயது கிராப் ஓட்­டு­நர் ஒரு­வர் விபத்­தில் உயி­ரி­ழந்­தார்.

அவ­ரது காரு­டன் லாரி­யும் பேருந்­தும் சம்­பந்­தப்­பட்ட விபத்து ஞாயிறு பிற்­ப­கல் அங் மோ கியோ அவென்யூ 5ம் அங் மோ கியோ இண்­டஸ்ட்­ரி­யல் பார்க் 2ம் சந்­திக்­கும் சாலை­யில் விபத்து நடந்­த­தா­க­த் தெரி­விக்­கப்­பட்­டது.

மாண்டவர் கிராப் நிறு­வ­னத்­து­டன் தம்மை தனி­யார் வாடகை ஓட்­டு­நர் என்று பதிவு செய்­தி­ருந்­த­தாக மனி­த­வள அமைச்சு தெரி­வித்­தது.

அவர் தமது காரை வல­ப்பக்­கம் திருப்­பி­ய­போது எதிர்த்திசை­யில் வந்த லாரி, கார்­மீது மோதி­ய­தா­க­வும் அது கூறி­யது.

இருப்­பி­னும் இந்த விபத்­தில் பேருந்து எவ்­வாறு சம்­பந்­தப்­பட்­டது என்­பது குறித்த தக­வல் எது­வும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

விபத்­தில் காய­ம­டைந்த ஓட்­டு­நர் நினை­வு இழந்த நிலை­யில் டான் டோக் செங் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­தா­க­வும் அங்கு அவர் மாண்­ட­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

விபத்து குறித்து பிற்­ப­கல் 1 மணிக்­குத் தங்­க­ளுக்­குத் தக­வல் கிடைத்­த­தா­க­வும் கிராப் காரில் பய­ணம் செய்த 33 வய­துப் பெண்­ணும் 55 வயது லாரி ஒட்­டு­ந­ரும் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­ட­தா­க­வும் காவல்­துறை தெரி­வித்­தது.

லாரி ஓட்­டு­ந­ரும் 65 வயது பேருந்து ஓட்­டு­ந­ரும் விசா­ர­ணை­யில் உத­வி­வ­ரு­வ­தா­க­வும் அது கூறி­யது.

கிராப் ஓட்­டு­ந­ரின் மர­ணம் இந்த அக்­டோ­ப­ரில் நிகழ்ந்­தி­ருக்­கும் 3வது வேலை­யிட மர­ணம்; இந்த ஆண்­டில் நிகழ்ந்­தி­ருக்­கும் 40வது வேலை­யிட மர­ணம். கடந்த ஆண்டு முழுவதும் 37 வேலையிட மரணங்களே பதிவாகியிருந்தன.