புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை சிங்கப்பூர் கூடியவிரைவில் வியட்னாமிடம் இருந்து வாங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் ஒன்றில் நேற்று வியட்னாம் தலைநகர் ஹனோயில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. கையெழுத்திடும் சடங்கை சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பும் வியட்னாமிய அதிபர் நுவென் ஸுவான் ஃபுக்கும் பார்வையிட்டனர்.
இரு நாடுகளுக்கும் இடையில் நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங் கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இவற்றில் இரண்டு, எரிசக்தி ஒத்துழைப்பு மற்றும் கரிமக் குறைப்புக்கான நிதிஉதவியில் ஒத்துழைப்பு தொடர்பானவை என்று ஹனோயிலுள்ள அதிபர் மாளிகை தெரிவித்தது.
அதிபர் ஹலிமா ஐந்து நாள் அதிகாரத்துவப் பயணமாக வியட்னாம் சென்றுள்ளார்.
இருநாடுகள் சம்பந்தப்பட்ட, வளர்ந்துவரும் அம்சங்கள் தொடர்பிலான பணிகளை புதிய ஒப்பந்தங்கள் விரிவுபடுத்தும் என்று திருவாட்டி ஹலிமா தெரிவித்தார்.
புதுப்பிக்கவல்ல எரிசக்தி, கரிம உதவிநிதி, இணையப் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைத்தொழில் பயிற்சி ஆகியன அந்த அம்சங்கள்.
"பசுமையான, தூய்மையான அதிகம் தாக்குப்பிடிக்கக்கூடிய எதிர்காலத்தை நோக்கி நாம் பயணம் செய்வதற்கு ஏற்ப இரு
தரப்புத் திட்டங்கள் சீரமைக்கப்
படுகின்றன. புதிய ஒப்பந்தங்கள் இத்திட்டங்களின் அடித்தளம் ஆகும்.
"நாம் வெவ்வேறு நாட்டினராக இருக்கலாம்; வெவ்வேறு பின்னணி மற்றும் கலாசாரம், சமயம் ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம். ஆனால், அன்பு, கருணை, இரக்கம் என்று வரும்போது நாம் அனைவரும் ஒரேமாதிரியான அடிப்படைப் பண்புகளைப் பகிர்ந்து கொள்கிறோம்.
"சிக்கல் மிகுந்துவரும் உலகை நாம் எதிர்நோக்கும் வேளையில், இதுவே நமது நாடுகளின் பொதுவான உத்திபூர்வ வளத்திற்கான அடிப்படை," என்றார் அதிபர் ஹலிமா.
எரிசக்தி ஒத்துழைப்புக்கான இரு ஒப்பந்தங்களிலும் சிங்கப்பூர் சார்பில் மனிதவள அமைச்சரும் வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சருமான டாக்டர் டான் சீ லெங் கையெழுத்திட்டார்.
வியட்னாம் சார்பாக அந்நாட் டின் தொழில், வர்த்தக அமைச்சர் நுவென் ஹோங் டியென்னும் தேசிய வளங்கள் மற்றும் சுற்றுப்புற அமைச்சர் டிரான் ஹோங் ஹாவும் கையெழுத்திட்டனர்.
இதர இரு ஒப்பந்தங்கள் இணையப் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைத் தொழில் பயிற்சி தொடர்பானவை.
புதுப்பிக்கவல்ல எரிசக்திக்கான மேம்பாடு மற்றும் நிதி
யளிப்பை உள்ளடக்கியது எரிசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம்.
அத்துடன், எல்லைதாண்டிய மின்சார வர்த்தகம், மேம்படுத்தப்பட்ட நிலைத்தன்மை மற்றும் மீள்திறன் ஆகியவற்றுக்கான இருநாட்டுத் தொடர்புகளை ஏற்
படுத்தும் அம்சமும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கி உள்ளது.
கரிமம் தொடர்பான ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தானது. கரிம வாயு வெளியேற்றத்தைக் குறைப்
பதன் மூலம் கிடைப்பனவற்றை நாடுகள் பகிர்ந்துகொள்ள கரிம உதவித்திட்டத்தை பாரிஸ் ஒப்பந்தம் பிரிவு 6 ஏற்படுத்தியது.
உலக நாடுகள் தங்களது பருவநிலை மாற்ற இலக்குகளை எட்ட இது உதவியாக இருக்கும். பாரிஸ் ஒப்பந்தத்திற்கு இணங்க சிங்கப்பூர்-வியட்னாம் ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு உள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள் கரிம வெளியேற்றத்தைப் பாதியாகக் குறைக்கவும் 2050ஆம் ஆண்டுக்குள் அதில் உச்சநிலையைத் தொட வும் இலக்கு நிர்ணயித்திருக்கும் சிங்கப்பூர், இந்த நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் கரிம வெளியேற்றம் இல்லாத நிலையை உருவாக்க நோக்கம் கொண்டுள்ளது.
ஆனால், வியட்னாமோ 2050 ஆம் ஆண்டுக்குள் கரிம வெளியேற்றத்தை நிறுத்துவதற்கான இலக்கை அறிவித்துள்ளது.
முன்னதாக, நேற்றுக் காலை இருநாட்டு அதிபர்களும் வியட்னாம் அதிபர் மாளிகையில் சந்தித்தனர்.
இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவம் குறித்து அதிபர் ஹலிமா அப்போது விளக்கினார். அடுத்த ஆண்டு இரு நாடுகளின் அரசதந்திர உறவுகளின் 50ஆம் ஆண்டு நிறைவு ஆகும்.
கரிமக் குறைப்பு, இணையப் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் சிங்கப்பூர் உடன்பாடு

