உக்ரேனிய தலைநகரை நிலைகுலையச் செய்த தாக்குதல்; ஐரோப்பாவில் 15,000 வீரர்களுக்கு பயிற்சி

உக்ரேனிய தலைநகரை நிலைகுலையச் செய்த தாக்குதல்; ஐரோப்பாவில் 15,000 வீரர்களுக்கு பயிற்சி

2 mins read
0bfd42e7-46b3-4b6f-9de8-923b7accdc9a
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரேனிய நகரான டொனெட்ஸில் நேற்று முன்தினம் தகர்க்கப்பட்ட நகர நிர்வாகக் கட்டடம். படம்: ராய்ட்டர்ஸ் -

உக்­ரேன் மீதான தாக்­கு­தலை கடந்த வாரம் ரஷ்யா தீவி­ரப்­ப­டுத்­தி­ய­தைத் தொடர்ந்து நேற்று அது தலை­ந­கர் கியவ் மீது கவ­னம் செலுத்­தி­யது.

ஆளில்லா வானூர்­தித் தாக்­கு­தல் நேற்­றுக் காலை முதல் கியவ் மீது தொடுக்­கப்­பட்­ட­தாக உக்­ரே­னிய அதி­கா­ரி­கள் கூறி­னர்.

நக­ரின் மத்­தி­ய பகு­தி­யில் பலத்த சத்­தத்­து­டன் இரு வெடிப்­பு­கள் நிகழ்ந்­த­தா­க­வும் அவர்­கள் கூறி­னர். காலை 8.15 மணி­ய­ளவில் முதல் வெடிப்பு நிகழ்ந்த ஒன்­றரை மணி நேரத்­தில் மற்­றொரு வெடிப்பு நிகழ்ந்­தது.

இவற்­றைத் தொடர்ந்து பல்­வேறு ஆகா­ய­வ­ழித் தாக்­கு­த­லுக்­கான ஓசை­யும் கேட்­டது. தலை­ந­கர் கியவ்­வின் மத்­திய வட்­டா­ரம் வெண்­ணிற புகை­யால் மறைக்­கப்­பட்­டி­ருந்­தது என்­ற­னர் அதி­கா­ரி­கள்.

கிரை­மியா தீப­கற்­பத்­திற்கு இட­டுச் செல்­லும் ரஷ்­யா­வின் முக்கிய பாலம் தகர்க்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து சின­ம­டைந்த ரஷ்யா, அக்­டோ­பர் 10 முதல் தனது தாக்­கு­த­லைத் தீவி­ரப்­ப­டுத்­தி வரு­கிறது.

ஆளில்லா வானூர்­தித் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டதை உக்­ரே­னிய அதி

­ப­ரின் தலைமை அதி­காரி ஆண்ட்ரி யெர்­மாக் சமூக வலைத்­த­ளத்­தில் தெரி­வித்­தார்.

"எங்­க­ளுக்கு இன்­னும் அதி­க­மான தற்­காப்பு ஆயு­தங்­கள் தேவைப்­ப­டு­கின்­றன. எங்­க­ளி­டம் இருந்த பெரும்­பா­லான ஆயு­தங்­கள் எதி­ரி­களை அழிக்­க­வும் வான்­வெ­ளி­யைத் தற்­காக்­க­வும் பயன்­ப­டுத்­தப்­பட்­டு விட்டன," என்­றார் அவர்.

முன்னதாக, கிழக்கு உக்ரேனிலும் பெரும் தாக்குதல் நடத்தப்பட்டது. கிழக்கு வட்டாரத்தில் டொனெட்ஸின் இரண்டு நகரங்களிலும் உக்ரேனிய, ரஷ்யப் படையினர் தீவிரமாகச் சண்டையிட்டனர்.

பாக்மட், செலேடார் என்னும் அந்த இரு நகரங்களில் போர் நடைபெற்றதை உக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில், 15,000 உக்ரேனிய வீரர்களுக்கு அடுத்த மாதம் முதல் பயிற்சி அளிக்கும் திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள் ஒப்புதல் அளிக்க உள்ளனர்.

இது தவிர, ஆயுதங்களை கூடு தலாக 500 மில்லியன் யூரோ நிதியை உதவியாக அளிக்கவும் அவர்கள் முன்வந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரி வித்துள்ளது.உக்ரேனிய வீரர் களுக்கான பயிற்சி நவம்பர் மாத நடுப்பகுதியில் போலந்திலும் ஜெர்மனியிலும் நடத்தப்படலாம் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டு மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

பல்வேறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஏற்கெனவே உக்ரேனிய வீரர்களுக்கு தாக்குதல் உத்திகளை அளித்து வந்தனர். குறிப்பிட்ட சில ஆயுதங்களை திறம்படப் பயன்படுத்து வது தொடர்பாக அந்நாடுகள் அவற்றைத் தொடர முடிவுசெய்து உள்ளன.

ராஷ்யா போர்தொடுக்கத் தொடங் கியதிலிருந்து உக்ரேனுக்கு ஐரோப்பிய ஒன்றியம் உதவிக்கரம் நீட்டி வருகிறது. நிதி உதவியோடு ராணுவ உதவியையும் ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் அளித்து வருகின்றன. புதிய உதவியோடு சேர்த்து 3 பில்லியன் யூரோவை அவை அளித்து உதவி உள்ளன.