பசுமைப் பொருளியல் உடன்பாடு

பசுமைப் பொருளியல் உடன்பாடு

2 mins read
95a37824-0715-4be5-8ba1-c8c108385d84
பிரதமர் லீ சியன் லூங்கும் ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனிசும் செயதியாளர்களைச் சந்திக்குமுன் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர்-ஆஸ்திரேலியா இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த இருதரப்புப் பணிக்குழு உருவாக்கம்

பசு­மைப் பொரு­ளி­ய­லில் ஒத்­துழைப்­பைத் தீவி­ரப்­ப­டுத்­தும் வகை­யில், சிங்­கப்­பூ­ரும் ஆஸ்­தி­ரே­லி­யா­வும் முக்­கிய உடன்­பாட்­டைச் செய்­து­கொண்­டுள்­ளன.

சிங்­கப்­பூர்-ஆஸ்­தி­ரே­லியா பசு­மைப் பொரு­ளி­யல் உடன்­பாட்­டின்­கீழ், சுங்­க­வ­ரி­யை­யும் வணி­கத் தடை­க­ளை­யும் குறைக்­கும் நோக்­கில் சுற்­றுச்­சூ­ழல் சார்ந்த பொருள்­கள் மற்­றும் சேவை­க­ளின் பட்­டி­யலை உரு­வாக்­கு­வது போன்ற 17 கூட்­டு­மு­யற்­சி­களை இரு­நா­டு­களும் தொடங்­கும்.

பசுமை சார்ந்த துறை­களில் வணிக, முத­லீ­டு­களை ஊக்­கு­விக்­கும் பங்­கா­ளித்­து­வம், மாற்­றுப் புர­தங்­கள், லித்­தி­யம் மின்­கல மறு­சு­ழற்சி போன்ற துறை­களில் ஆய்வு ஒத்­து­ழைப்பு உள்­ளிட்­ட­வை­யும் அந்­தக் கூட்­டு­மு­யற்­சி­களில் அடங்­கும்.

ஆஸ்­தி­ரே­லி­யத் தலை­ந­கர் கேன்­ப­ரா­வில் நேற்று இடம்­பெற்ற ஏழா­வது சிங்­கப்­பூர் - ஆஸ்­தி­ரே­லியா தலை­வர்­கள் சந்­திப்­பில், பிர­த­மர் லீ சியன் லூங் மற்­றும் ஆஸ்­தி­ரே­லி­யப் பிர­த­மர் ஆண்டனி அல்­ப­னிஸ் முன்­னி­லை­யில் இந்த உடன்­பாடு கையெ­ழுத்­தா­னது.

பின்­னர் நடந்த செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் பேசிய பிர­த­மர் லீ, இரு­நா­டு­களும் கரிம வெளி­யீ­டற்ற நாடு­க­ளாக மாற இந்த உடன்­பாடு துணை­பு­ரி­யும் என்­றும் பசுமை சார்ந்த துறை­களில் வளர்ச்­சியை ஊக்­கு­வித்து, வேலை­களை உரு­வாக்­கும் என்­றும் சொன்­னார்.

"நாடு­க­ளுக்கு இடையே இத்­த­கைய உடன்­பாடு எட்­டப்­பட்­டி­ருப்­பது இதுவே முதன்­முறை. பரு­வ­நிலை மாற்­ற­மா­னது உல­க­ளா­விய பிரச்­சினை என்­ப­தால் இது­போன்று ஒத்­து­ழைப்­ப­தில் பிற நாடு­க­ளுக்கு இந்த உடன்­பாடு ஒரு முன்­னோடி­யாக அமை­யும் என நம்­பு­கி­றோம்," என்­றார் திரு லீ.

கேன்­ப­ரா­வில் உள்ள நாடா­ளு­மன்ற இல்­லத்­தில் வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங்­கும் ஆஸ்­தி­ரே­லிய வர்த்­தக, சுற்­றுலாத்துறை அமைச்­சர் டான் ஃபேரலும் இந்த உடன்­பாட்­டில் கையெ­ழுத்­திட்­ட­னர்.

இந்த உடன்­பாட்­டின்­கீழ், வணி­கம் மற்­றும் முத­லீடு, தர­நி­லை­கள் மற்­றும் இணக்­கம், பசுமை மற்­றும் நிலை­மாற்ற நிதி, கரி­மச் சந்­தை­கள், தூய எரி­சக்தி, கரி­ம­நீக்­கம் மற்­றும் தொழில்­நுட்­பம், தேர்ச்­சி­கள் மற்­றும் செயல்­தி­றன்­கள், தொழில் ஈடு­பா­டு­கள் மற்­றும் பங்­கா­ளித்­து­வங்­கள் ஆகிய ஏழு துறை­களில் ஒத்­து­ழைக்­கத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

உல­க­ளா­விய பிரச்­சி­னை­யான பரு­வ­நிலை மாற்­றத்­திற்கு உல­களா­விய தீர்­வு­கள் காணப்­பட வேண்­டி­யது அவ­சி­யம் என்­றார் திரு அல்­ப­னிஸ். சிறந்த நட்பு நாடு­க­ளா­கத் திக­ழும் சிங்­கப்­பூருக்கும் ஆஸ்­தி­ரே­லி­யா­விற்­கும் இடையே கையெ­ழுத்­தா­னது போன்ற உடன்­பா­டு­கள், உல­கிற்கு எடுத்­துக்­காட்­டா­கத் திக­ழும் என்­பதால் முக்­கி­ய­மா­னவை என்­றும் அவர் சொன்­னார்.

நம்­ப­க­மான பங்­கா­ளி­க­ளாக விளங்­கும் சிங்­கப்­பூ­ரும் ஆஸ்­தி­ரே­லி­யா­வும் விநி­யோ­கத் தொடரை வலுப்­ப­டுத்­து­வது போன்ற புதிய உத்­தி­பூர்வ துறை­களில் ஒத்­துழைப்­பது குறித்­தும் ஆராய்ந்து வரு­கின்­றன.

இதற்­காக கடந்த மாதம் இரு­தரப்­புப் பணிக்­குழு ஒன்று ஏற்­படுத்­தப்­பட்­டது என்­றும் அக்­குழு இரு­நா­டு­க­ளுக்­கும் இடையே அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­கள் விநி­யோ­கத்தை உறு­தி­செய்­வ­தற்­கான வழி­வ­கை­களை ஆரா­யும் என்­றும் பிர­த­மர் லீ குறிப்­பிட்­டார்.

'வெள்ள நிவா­ர­ணப் பணி­களில் சிங்­கப்­பூர் ஆயு­தப்­படை'

ஆஸ்­தி­ரே­லி­யா­வின் நியூ சவுத் வேல்ஸ், விக்­டோ­ரியா மாநி­லங்­களில் வெள்ள நிவா­ர­ணப் பணி­களுக்­குக் கைகொ­டுக்க சிங்­கப்­பூர் ஆயுதப்படை தயா­ராகவுள்ளது என்று திரு லீ தெரி­வித்­துள்­ளார்.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் சிங்­கப்­பூர் ஆயு­தப்­ப­டை­யி­னர் பயிற்­சி­பெற அந்­நாடு தொடர்ந்து, தாராள ஆத­ரவை வழங்கி வரு­வதை அவர் மெச்­சி­னார். கொவிட்-19 பெருந்­தொற்­றுக்­குப் பிறகு ஆஸ்­தி­ரே­லி­யா­வில் சிங்­கப்­பூர் ஆயு­தப்­ப­டை­யின் பயிற்சி மீண்­டும் முழு­வ­து­மா­கத் தொடங்­கி­யுள்­ளது.