துணைப் பிரதமர் வோங்: வருமான இடைவெளியை குறைக்க வேண்டும்

துணைப் பிரதமர் வோங்: வருமான இடைவெளியை குறைக்க வேண்டும்

2 mins read

பொன்மணி உதயகுமார்

அறி­வாற்­ற­லுக்கு அதி­க­மாக முக்­கி­யத்­து­வம் அளிப்­ப­தால், தொழில்­நுட்­பம் அல்­லது சமூக சேவை சார்ந்த வேலை­க­ளுக்­கான மதிப்பு குறை­வாக இருக்­கிறது என்­றும் பல்­க­லைக்­க­ழ­கப் பட்­ட­தா­ரி­க­ளுக்­கும் தொழில்­நுட்­பக் கல்­விக் கழக (ஐடிஇ) பட்­ட­தா­ரி­க­ளுக்­கும் உள்ள வரு­மான இடை­வெளி அதி­க­ரிப்­பது வருத்­தம் அளிக்­கும் போக்கு என்­றும் துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் தெரி­வித்­தி­ருக்­கி­றார்.

பல்­க­லைக்­க­ழ­கப் பட்­ட­தா­ரி­களின் சரா­சரி வரு­மா­னம், 'ஐடிஇ' பட்­ட­தா­ரி­க­ளைக் காட்­டி­லும் ஏறக்­கு­றைய இரண்டு மடங்­காக இருப்­ப­தாக நிதி­ய­மைச்­ச­ரு­மான திரு வோங் குறிப்­பிட்­டார்.

இந்த வரு­மான இடை­வெளி, அவர்­க­ளின் வாழ்­நா­ளில் அதி­க­ரித்­துக்­கொண்டே போவ­தா­க­வும் அவர் சொன்­னார்.

சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் சங்­கம், 'ரீஜன்ட் சிங்­கப்­பூர்' ஹோட்­ட­லில் நேற்று ஏற்­பாடு செய்­தி­ருந்த 'பொரு­ளி­யல் கொள்கை கருத்­த­ரங்கு 2022' நிகழ்­வில் பங்­கேற்­றுப் பேசி­ய­போது, அவர் இவ்­வாறு சொன்­னார்.

தொழில்­நுட்­பம் அல்­லது சமூக சேவை சார்ந்த வேலை­கள் அதி­கம் உள்­ளூர்த் துறை­க­ளில்­தான் இருக்­கின்­றன என்ற திரு வோங், அத்­து­றை­களில் உள்ள வேலை­களை மறு­சீ­ர­மைப்­பது, பணி­பு­ரி­யும் ஊழி­யர்­க­ளின் திறனை மேம்­படுத்­து­வது, வாழ்க்கை தொழில் வளர்ச்­சியை உறு­தி­செய்­வது போன்­ற­வற்­றில் கூடு­தல் கவ­னம் செலுத்­த­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­னார்.

இந்த முயற்­சி­கள் ஏற்­கெ­னவே அர­சாங்க ஆத­ர­வு­டன் செயல்­படும் பாலர் பள்­ளி­களில் தொடங்கி விட்­ட­தை­யும் அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

ஆசி­ரி­யர்­க­ளுக்­குக் கூடு­தல் சம்­ப­ளம் வழங்­கு­வ­தை­யும் தாண்டி, அவர்­கள் தொடர்ந்து தங்­கள் திறன்­களை வளர்த்­துக்­கொள்­ள­வும் வழி­வ­குக்­கப்­பட்­டுள்­ளது.

எடுத்­துக்­காட்­டாக, சிறப்­புத் தேர்ச்­சி­க­ளைக் கொண்ட மாண­வர்­க­ளுக்­குக் கற்­பிக்­கும் ஆற்­றலை வளர்த்­துக்­கொள்­வ­தில் அல்­லது தலை­மைத்­து­வப் பொறுப்பு­களை ஏற்க பயிற்­சி­பெ­று­வ­தில் ஆசி­ரி­யர்­க­ளுக்கு அர­சாங்­கம் ஆத­ர­வ­ளித்து வரு­வதை துணைப் பிர­த­மர் வோங் பகிர்ந்­து­கொண்­டார்.

இம்­மா­தி­ரி­யான முயற்­சி­களை கல்­வித்­து­றை­யில் மட்­டு­மல்­லா­மல், அனைத்­துத் துறை­க­ளி­லும் செயல்­ப­டுத்த வேண்­டும் என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

ஒரு நிறு­வ­னத்­தில் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் எத்­தனை பேர் இருக்­க­லாம் என்­ப­தற்­கான வரம்பு, தகு­தி­பெ­றும் உள்­ளூர் சம்­ப­ளத்தை அதி­க­ரிப்­பது, சம்­பள உயர்­வுத் திட்­டம் போன்­றவை வரு­மான இடை­வெ­ளி­யைக் குறைக்க அல்­லது தடுக்க அர­சாங்­கம் ஏற்­கெனவே எடுத்­து­வ­ரும் முயற்­சி­களில் சில.

அவற்றை மேற்­கோள்­காட்­டிப் பேசிய திரு வோங், சிங்­கப்­பூ­ரர்­கள் அனை­வ­ரும் இந்த முயற்­சிக்குப் பங்­க­ளிக்க வேண்­டும் என்று கூறி­னார்.

தொழில்­நுட்­பம் அல்­லது சமூக சேவை வழங்­கும் துறை­க­ளி­ல் இ­ருந்து பெறப்­படும் பொருள்­களுக்­கும் சேவை­க­ளுக்­கும் கூடு­தல் கட்­ட­ணம் செலுத்த தயா­ராக இருப்­ப­தன்­மூ­லம் அனைத்­துத் துறை­க­ளையும் சேர்ந்த ஊழி­யர்­களுக்­கும் சம்­பள உயர்வு வழங்­க­லாம் என்­றார் துணைப் பிர­த­மர்.

அத்­து­டன், கல்­வி­யில் சாதிப்­ப­வர்­களை மட்­டும் உயர்­வா­கக் கரு­தா­மல், திறன்­கள் மூலம் சிறந்து விளங்­கு­ப­வர்­க­ளுக்­கும் தகுந்த மரி­யாதை அளிக்­கப்­பட வேண்­டும் என்று அவர் கேட்­டுக்­கொண்­டார்.

எந்­தத் துறை­யா­னா­லும், எந்­தப் பாதையை ஒரு­வர் தேர்ந்­து எ­டுத்­தா­லும், உரிய வெகு­மதி­யும் அங்­கீ­கா­ர­மும் அவ­ருக்­குக் கிடைக்க வேண்­டும் என்­றும் திரு வோங் வலி­யு­றுத்­தி­னார்.