பிரிட்டிஷ் பிரதமர் லிஸ் டிரஸ் பதவி விலகல்

பிரிட்டிஷ் பிரதமர் லிஸ் டிரஸ் பதவி விலகல்

1 mins read
d20daea9-aacc-4ffc-92b7-0d0c0acfdcc7
படம்: ராய்ட்டர்ஸ் -

பிரிட்டிஷ் பிரதமர் லிஸ் டிரஸ் பதவி விலகியுள்ளார். பதவி ஏற்ற 45 நாட்களில் அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகியுள்ளார். தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தான் தவறியதால் பதவி விலகுவதாக அவர் கூறினார். பிரிட்டிஷ் மன்னரிடம் தன் முடிவைக் கூறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். புதிய பிரதமரை கன்­சர்­வேட்­டிவ் கட்சி இன்னும் ஒரு வாரத்தில் தேர்ந்தெடுக்கும் என்று கூறப்பட்டது.

பிரிட்டிஷ் பிரதமராக ஆகக் குறைந்த காலம் பணியாற்றியவர் லிஸ் டிரஸ். 45 நாட்கள் மட்டமே அவர் அந்தப் பதவியில் நீடித்தார். 1827ல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்ஜ் கென்னிங் 119 நாட்கள் அப்பதவியில் இருந்தார். பதவிக் காலத்தின்போது அவர் மாண்டார்.