நவம்பர் 19ஆம் தேதி மலேசியப் பொதுத் தேர்தல்

நவம்பர் 19ஆம் தேதி மலேசியப் பொதுத் தேர்தல்

3 mins read

மலே­சி­யா­வில் பொதுத் தேர்­தல் நவம்­பர் 19ஆம் தேதி நடை­பெ­றும் என்று அந்­நாட்­டுத் தேர்­தல் ஆணை­யம் நேற்று அறி­வித்­தது.

வேட்­பு­ம­னுத் தாக்­கல் நவம்­பர் 5ஆம் தேதி நடை­பெ­றும். அத­னைத் தொடர்ந்து 14 நாள் தேர்­தல் பிர­சா­ரம் இடம்­பெ­றும்.

மாமன்­னர் அப்­துல்லா அக­மது ஷாவின் ஒப்­பு­த­லைப் பெற்ற பிறகு பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்கோப் நாடா­ளு­மன்­றத்­தைக் கலைப்­ப­தாக அக்­டோ­பர் 10ஆம் தேதி அறி­வித்­தார். நாடா­ளு­மன்­றம் கலைக்கப் பட்ட 60 நாள்­க­ளுக்­குள், பொதுத் தேர்­தல் நடத்­தப்­பட வேண்டும்.

இரண்டு ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக நீடித்த அர­சி­யல் கொந்­த­ளிப்பு திடீர் தேர்­த­லுக்கு இட்­டுச் சென்­றுள்­ளது. இந்­தத் தேர்­த­லில் 20 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான மலே­சி­யர்­கள் ஒரு புதிய அர­சாங்­கத்­திற்கு வாக்­க­ளிப்­பார்­கள் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பரு­வ­ம­ழைக் காலத்­தில் தேர்­தல் நடத்­து­வது குறித்து எதிர்க்­கட்­சி­கள் எதிர்ப்­புத் தெரி­வித்து வந்­தன. வழக்­க­மாக நவம்­பர் நடுப்­ப­கு­தி­யி­லி­ருந்து கடும் மழை­யும் வெள்­ள­மும் அங்கு ஏற்­படும்.

222 நாடா­ளு­மன்ற இடங்­க­ளு­டன் பகாங், பெர்­லிஸ், பேராக் மாநில சட்­ட­மன்ற இடங்­க­ளுக்­கும் மக்­கள் வாக்­க­ளிப்­ப­ர். கொவிட்-19 கார­ண­மாக இடைத்­தேர்­தல் ஒத்­தி­ வைக்­கப்­பட்ட சாபா­வின் புகாயா தொகு­திக்­கும் அன்று இடைத்­தேர்­தல் நடை­பெ­றும்.

இந்­தத் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான செலவு, கடந்த பொதுத் தேர்­தல் செல­வை­விட இரு மடங்­காக இருக்­கும் என்­றும் தேர்­தல் ஆணை­யம் தெரி­வித்­தது.

சாபா, சர­வாக், மலாக்கா, ஜோகூர் ஆகிய மாநி­லங்­கள் அனைத்­தும் கடந்த ஈராண்­டு­களில் மாநி­லத் தேர்­தல்­களை நடத்­தி­யுள்­ளன. எதிர்க்­கட்­சி­யான பக்­கத்­தான் ஹரப்­பான், பாஸ் தலை­மை­யி­லான மேலும் ஆறு மாநி­லங்­கள் பருவ மழைக் காலத்­துக்கு முன்­ன­தாக சட்­ட­மன்­றத்­தைக் கலைக்­கப் போவ­தில்லை எனக்­கூ­றி­யுள்­ளன.

"இந்­தத் தேர்­த­லுக்கு 1.01 பில்­லி­யன் ரிங்­கிட் ($304 மி. சிங்­கப்­பூர் வெள்ளி) தேவைப்­ப­டு­கிறது," என்று தேர்­தல் ஆணை­யத்­தின் தலை­வர் கனி அப்­துல் சாலே தெரி­வித்­தார். 2018ஆம் ஆண்டு தேர்­தல் செலவு 500 மில்­லி­யன் ரிங்­கிட்­டாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

ராணு­வம், காவல்­துறை போன்ற பாது­காப்பு வீரர்­கள் முன்­கூட்­டியே நவம்­பர் 15 அன்று வாக்­க­ளிப்­பர்.

கடந்த 2018 பொதுத் தேர்­தலைத் தொடர்ந்து ஏற்­பட்ட அர­சி­யல் உறு­தி­யற்ற தன்­மையை அடிக்­கோ­டிட்­டுக்காட்­டும் வகை­யில், நான்கு ஆண்­டு­களில் மலே­சி­யா­வின் மூன்­றா­வது பிர­த­ம­ராக இஸ்­மா­யில் பதவி ஏற்­றார்.

கடந்த தேர்­த­லில் 60 ஆண்­டு­களுக்­கும் மேலாக நாட்டை ஆண்ட அம்னோ கட்சி, அர­சு நிதி­யான 1எம்­டி­பி­யு­டன் தொடர்­பு­டைய பெரும் ஊழல் குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு மத்தி­யில் அதிர்ச்சித் தோல்­வியைச் சந்தித்தது.

அப்­போ­தைய பிர­த­மர் நஜிப் ரசாக், பதவி இழந்த நிலையில் இந்­நி­தி­ தொடர்பான பில்லியன் கணக்கான ரிங்கிட் ஊழ­லில் சிக்கி, நீதிமன்ற விசாரணையில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு 12 ஆண்டு­ சிறைத்­தண்­ட­னையை அனு­பவித்து வருகிறார்.

கொரோனா கொள்­ளை­நோ­யா­லும் அர­சி­யல் கொந்­த­ளிப்­பு­க­ளா­லும் பல சவால்­களை எதிர்­கொண்­டி­ருக்­கும் மலே­சி­யா­வின் எதிர்­காலத்தை நிர்­ண­யிக்­கும் முக்­கிய தேர்­த­லா­க எதிர்வரும் பொதுத் தேர்தல் கரு­தப்­ப­டு­கிறது.

இத்தேர்தலில் 97 வய­தான முன்­னாள் பிர­த­மர் மகா­திர் முக­மது உள்­ளிட்­டோர் கள­மி­றங்­கு­வார்­கள் என எதிர்­பார்க்­கப்­படு­கிறது.

பாஸ், அம்னோ கட்சிகள் தனித்தனிக் கூட்டணிகளாகப் போட்டியிடுவதால் மலாய் இன வாக்குகள் பிரியும் என அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

இதற்­கி­டையே, அக்­டோ­பர் 10 அன்று நாடா­ளு­மன்­றம் கலைக்­கப்­பட்டது செல்­லாது என்று கிள்ளான் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சார்ல்ஸ் சான்டியாகோ வழக்­குத் தொடுத்­துள்­ளார்.

மேலும் செய்தி பக்கம் 9