பிரிட்டிஷ் பிரதமராக பதவியேற்று 45 நாட்களே ஆன நிலையில் லிஸ் டிரஸ் (படம்) பதவி விலகி விட்டார். பிரதமர் பதவியில் இருந்தும் பழமைவாதக் (கன்சர்வேட்டிவ்) கட்சியின் தலைமைப் பதவியிலிருந்தும் விலகுவதாக நேற்று டவுனிங் ஸ்திரீட் அலுவலகத்தின் வெளியே செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
தம் பதவி விலகலை அரசரிடம் தெரிவித்துவிட்டதாக கூறிய அவர், பழைமைவாதக் கட்சி அதன் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் என்றார் அவர்.
பிரிட்டினை ஆகக் குறுகிய காலம் ஆட்சி செய்த பிரதமராக இவர் விளங்குகிறார். போரிஸ் ஜான்சனுக்கு அடுத்து பதவியேற்ற டிரஸ், கொண்டு வந்த பொருளியல் வளர்ச்சித் திட்டத்தால் பிரிட்டிஷ் பங்குச் சந்தை பெரும் சரிவைக் கண்டது. அது முதல் அவர் பதவி விலக வேண்டும் என்று அவரது கட்சியும் எதிர்க்கட்சி யும் நெருக்குதல் அளித்து வந்தன.

