தீபாவளியை முன்னிட்டு லிட்டில் இந்தியாவில் கூடுதல் பாதுகாப்பு; மது, பட்டாசு எச்சரிக்கை

தீபா­வளி வார­யி­று­தி­யில் லிட்­டில் இந்­தி­யா­வில் போக்­கு­வ­ரத்­தும் மக்­கள் நட­மாட்­ட­மும் அதி­க­மாக இருக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தால் அதி­க­மான காவல்துறை அதி­கா­ரி­கள் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­வர். போக்­கு­வரத்தைக் கடுப்­ப­டுத்தவும் வாக­ன­மோட்­டி­க­ளுக்கு உதவவும் குறிப்­பிட்ட சாலை­க­ளி­லும் சாலைச் சந்­திப்­பு­க­ளி­லும் துணைக் காவல் அதி­கா­ரி­கள் நிறுத்­தப்­ப­டு­வர்.

வாக­ன­மோட்­டி­கள் மாற்று வழி­களில் பய­ணம் செய்ய அறிவுறுத்தப் படுகின்றனர். சட்­ட­வி­ரோ­த­மாக வாக­னங்­களை நிறுத்­து­வோ­ருக்கு எதி­ரான கடு­மை­யான நட­வ­டிக்­கை­எடுப்­படும் என்று காவல்­துறை நேற்று வெளி­யிட்ட அறிக்கை சுட்டியது.

மது அருந்தக் கட்டுப்பாடு

லிட்­டில் இந்­தி­யா­வில் இன்று இரவு 10.30 மணி முதல் செவ்­வாய்க்­கி­ழமை 25ஆம் தேதி காலை 7 மணி வரை­யில் பொது இடங்­களில் மது அருந்த அனு­ம­திக்­கப்­படாது என்­றும் அறிக்கை கூறி­யது. அனு­ம­திக்­கப்­பட்ட நேரத்­துக்கு பிறகு மது விற்­கும் கடை­க­ளின் மது விற்­பனை உரி­மம் ரத்­தா­க­லாம். முன்­னைய மதுக் கட்­டுப்­பாடு (விநி­யோ­கம் மற்றும் நுகர்வு) சட்­டம் 2015ன் கீழ், லிட்­டில் இந்­தியா மதுக் கட்­டுப்­பாட்டு வட்­டா­ர­மாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இச்­சட்­டத்­தின் கீழ், மது அருந்­தக்­கூ­டாத நேரத்­தில் பொது இடத்­தில் மது­பா­னம் அருந்­து­வோ­ருக்கு கூடு­தல் தண்­ட­னை­கள் விதிக்­கப்­படும். குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் $1,500 வரை அப­ரா­தம் விதிக்­கப்­படும். மீண்­டும் குற்­றம் புரி­வோ­ருக்கு நான்­கரை மாதங்­கள் வரை சிறை, $3,000 வரை அப­ரா­தம் அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம்.வாண­வே­டிக்கை, பட்டாசு

தீப்­பொ­றி­களை வெளி­யி­டும் பட்டாசு போன்ற வெடி­பொ­ருள்­களுக்கு எதி­ரா­க­வும் பொது­மக்­கள் எச்­ச­ரிக்­கப்­ப­டு­கின்­ற­னர். குற்­றம் புரி­வோ­ருக்கு ஓராண்டு வரை சிறை, $5,000 வரை அப­ரா­தம் அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம்.

மற்­ற­வர்­க­ளுக்கு காயம் ஏற்­பட்­டால், ஏழு ஆண்­டு­கள் வரை சிறை, அல்­லது அப­ரா­தம், அல்­லது பிரம்­ப­டி­கள் அல்­லது இவை கலந்து விதிக்­கப்­ப­ட­லாம்.

சட்­ட­வி­ரோ­த­மாக வாண­வேடிக்கை வைத்­தி­ருப்போர், வெடிப்­போர் மீதும் கடு­மை­யான சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். குற்ற வாளிக்கு ஈராண்­டு­கள் வரை சிறை, $5,000 வரை அப­ரா­தம் அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம். வாண­வே­டிக்கை இறக்­கு­மதி செய்­வ­தும் கடு­மை­யான குற்­ற­மா­கும்.

தீபா­வ­ளிக்கு கடைசி நேரத்­தில் பொருள் வாங்­கு­வோ­ரும் வெளி நாட்டு ஊழி­யர்­களும் ஞாயிறு அன்று பெருந்திரளாகக் கூடுவர் என்று கடைக்­கா­ரர்­கள் எதிர்­பார்க்­கி­றார்­கள். மக்­கள் இரவு வரை காத்­தி­ருக்­கா­மல், காலை­, பிற்பக­லில் வந்­தால் கூட்­டத்­தைத் தவிர்க்­க­லாம் என்று சிங்­கப்­பூர் இந்­திய உண­வ­கங்­கள் சங்­கத்­தின் தலை­வ­ரான திரு குர்­ச­ரண் சிங் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!