10 லட்சம் பேர் பயணம் செய்யக்கூடும்

2 mins read
8bc85eeb-e082-4fe9-b192-c7d7818556e7
தீபாவளியை முன்னிட்டு இயக்கப்படும் அரசின் சிறப்புப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்குச் செல்ல 94 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்திருப்பதாகக் கூறப்பட்டது. படம்: புதிய தலைமுறை இணையத்தளம் -

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்து, ரயில் சேவைகள்

தீபா­வ­ளிப் பண்­டி­கையை சொந்த ஊரில் கொண்­டா­டச் செல்­லும் பொது­மக்­கள் வச­திக்­காக தமி­ழ­கம் முழு­வ­தும் நேற்று முன்­தி­னத்­தில் இருந்து சிறப்­புப் பேருந்­து­கள் இயக்­கப்­ப­டு­கின்­றன.

சென்­னை­யில் ஆறு பேருந்து நிலை­யங்­களில் இருந்து இத்­த­கைய 4,128 சிறப்­புப் பேருந்­து­கள் சேவை வழங்­கு­கின்­றன. நேற்று முன்­தி­னம் காலை­யில் இருந்தே கோயம்­பேடு பேருந்து நிலை­யம் மக்­கள் வெள்­ளத்­தால் நிரம்­பி­யது.

பொது­மக்­க­ளின் பய­ணத்தை எளி­தாக்க, போக்­கு­வ­ரத்­துக் கழ­கங்­கள் விரி­வான ஏற்­பா­டு­க­ளைச் செய்­துள்­ளன. நடை­மே­டை­களில் உதவி மையம் அமைக்­கப்­பட்டு உள்­ளது. ஒலி­பெ­ருக்கி மூலம் பய­ணி­க­ளுக்­குத் தக­வல்­கள் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன.

அவ­ர­வர் செல்­லும் பகு­திக்­கான பேருந்­தில் இடம் இருக்­கி­றதா என்­ப­தைப் பார்த்­துச் சொல்ல கணி­னித் தக­வல் மையம் நிறு­வப்­பட்­டுள்­ளது.

சென்னை, விழுப்­பு­ரம், சேலம், மதுரை, கோவை, கும்­ப­கோ­ணம் ஆகிய பகு­தி­க­ளின் போக்­கு­வ­ரத்­துக் கழக அதி­கா­ரி­கள் கோயம்­பேட்­டில் பணி­யில் ஈடு­பட்டு, சிறப்­புப் பேருந்­துப் பய­ணி­க­ளுக்கு வழி­காட்டி உத­வி­னர்.

நேற்று முன்­தி­னம் மட்­டும் அர­சுப் பேருந்­து­களில் ஒரு லட்­சத்து 66 ஆயி­ரம் பேர் சொந்த ஊர்­க­ளுக்­குப் புறப்­பட்­டுச் சென்று உள்­ள­னர். மேலும் 500க்கும் மேற்­பட்ட சிறிய ரகப் பேருந்­து­களில் 30,000 பேர் வெளி­யூர் சென்­ற­னர்.

தமி­ழ­கத்­தின் பல்­வேறு நக­ரங்­களை இணைக்­கும் விதத்­தில் இம்­மா­தம் 21, 22, 23 ஆகிய தேதி­களில் கிட்­டத்­தட்ட 16,000 சிறப்­புப் பேருந்­து­கள் இயக்­கப்­ப­டு­கின்­றன.

தீபா­வ­ளியை முன்­னிட்டு தென்­னக ரயில்­வே­யின் சிறப்பு ரயில் சேவை­களும் பய­ணி­களுக்கு சேவை வழங்­கு­கின்­றன.

இவ்­வே­ளை­யில், சிறப்­புப் பேருந்து, ரயில் சேவை­களில் இடம் கிடைக்­காத பல­ரும் உள்­நாட்டு விமா­னச் சேவை­களை நாடி­யி­ருப்­ப­தா­கத் தக­வல்­கள் கூறு­கின்­றன. இத­னால் உள்­நாட்டு விமா­னக் கட்­ட­ணம் உயர்ந்­தி­ருப்­ப­தா­கத் தெரி­யவந்துள்ளது.

சென்­னை­யில் உள்ள வட­மாநிலத்­த­வா்­கள், பெரும்­பா­லும் விமா­னங்­களில் செல்­வ­தால் வட மாநிலங்­க­ளுக்­குச் செல்­லும் விமா­னக் கட்­ட­ணங்­கள் மூன்று மடங்கு வரை உயர்ந்­துள்­ளன. மற்ற மாநி­லங்­க­ளுக்­கும் தமி­ழ­கத்­தின் மற்ற ஊர்­க­ளுக்­கும் செல்­வ­தற்­கான விமா­னக் கட்­ட­ணங்­களும் அதி­க­ரித்­துள்­ளன. ஆனால் தீபா­வ­ளியை சொந்த ஊரில் கொண்­டா­டும் ஆர்­வத்­தில் மக்­கள் கட்­டண உயர்­வைப் பொருட்­ப­டுத்­த­வில்லை என்று ஊட­கங்கள் கூறு­கின்­றன.