மின்னிலக்க நாணய வர்த்தகத்தில் உள்ள ஆபத்துகளிலிருந்து சில்லறை முதலீட்டாளர்களைப் பாதுகாக்க அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. சில்லறை முதலீட்டாளர்களின் மின்னிலக்க நாணய ஊகங்களுக்கு கடிவாளம் போடுவது அதன் நோக்கமாகும்.
இதனால் மின்னிலக்கச் சொத்து வர்த்தகத்தைத் தொடங்குவது அவ்வளவு எளிதாக இருக்காது. கடன் வாங்கி முதலீடு செய்வதற்கும் தடை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
'ஸ்டேபிள்காய்ன் டெர்ராயுஎஸ்டி' மற்றும் அதன் துணை நிறுவனமான 'டோக்கன் லுனா' நிதி நெருக்கடியில் சிக்கியதால் முக்கிய நிறுவனங்களான செல்சியஸ் த்ரி ஏரோஸ் போன்றவை திவால் நிலைக்குத் தள்ளப்பட்டன.
இதன் காரணமாக உத்தேச கட்டுப்பாடு களின் பட்டியலை அரசாங்கம் தயாரித்துள்ளது.
இதன்படி மின்னிலக்க நாணய வர்த்தகத்தில் உள்ள சாத்தியமான ஆபத்துகளைப் புரிந்துகொள்ள, அத்தகைய வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு சில சோதனைகளை முத லீட்டாளர்கள் எதிர்கொள்ள வேண்டும். அதன் பிறகு வர்த்தகத்தில் ஈடுபட அனுமதி வழங்கப்படும். மேலும் டிபிடி (Digital payment token) எனும் மின்னிலக்க வழி செலுத்துதல் அல்லது மின்னிலக்க நாணய சேவைகளையும் சிங்கப்பூர் நாணய ஆணையம் அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ளது.
இது, சில்லறை முதலீட்டாளர்கள், மின்னிலக்க நாணயத்தை கடன் வாங்குவதையோ அல்லது கடன் பற்று அட்டைகளைப் பயன் படுத்துவதையோ தடுக்கும்.
மின்னிலக்க நாணய வர்த்தக சேவை வழங்கும் நிறுவனங்களும் இனி சலுகைகளை வழங்கி ஊக்கமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது.
ஊகங்களின் மூலம் அதிகப் பணம் ஈட்டிய சில்லறை முதலீட்டாளர்களை பலதரப்பட்ட முதலீடுகளை கொண்டவர்களிடமிருந்து வேறுபடுத்துவதற்காக, ஆணையம், தனிநபர்களின் குறைந்தபட்சம் $1.8 மில்லியன் மதிப்புள்ள சொத்து அல்லது பங்குப் பத்திரங்களை வைத்திருப்பது அவசியமாகிறது.
தற்போது குறைந்தபட்சம் $2 மில்லியன் நிகர தனிப்பட்ட சொத்துகளைக் கொண்டவர் களே அங்கீகாரம் பெற்ற முதலீட்டாளர்களாக கருதப்படுகின்றனர்.
இதனால் அங்கீகாரம் பெற்ற முதலீட்டாளரின் நிகர தனிப்பட்ட சொத்துகளில் 10 விழுக்காடு அல்லது $200,000 வரை மட்டுமே அங்கீ கரிக்கப்படுகிறது.
கட்டணச் சேவைகள் சட்டத்தின்கீழ் உரிமம் பெற்ற நிறுவனங்கள், சில்லறை முதலீட்டாளர்களுக்கு கடன் வழங்கக்கூடாது என்ற உத்தேச திட்டத்தையும் ஆணையம் முன்வைத்துள்ளது.

