தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோழி இறைச்சிக்குப் பிறகு மலேசியாவுக்கு 'கோழி முட்டை' தலைவலி

2 mins read
1639e985-d4c4-4a38-8f13-54c35a613f67
கூச்சிங்கில் உள்ள கோழிப் பண்ணையில் ஊழியர் ஒருவர் அளவுக்கு ஏற்ப முட்டைகளை பிரிக்கிறார். மலேசியாவில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோப்புப் படம்: பெர்னாமா -

கோழி இறைச்சி ஏற்­று­மதி விவ­காரத்தி­லி­ருந்து மீண்­டுள்ள மலே­சியா, தற்­போது 'முட்டை' தலை­ வ­லியை எதிர்­நோக்­கு­கிறது.

உள்­ளூர் தட்­டுப்­பாட்டை போக்கு­ வ­தற்­காக சிங்­கப்­பூர் உள்­ளிட்ட நாடு­க­ளுக்கு 'பிராய்­லர்' கோழி இறைச்சி ஏற்­று­மதி செய்­வதை அந்­நாடு நிறுத்தி வைத்­தி­ருந்­தது.

இம்­மா­தம் 11ஆம் தேதி அந்த தடை விலக்­கிக் கொள்­ளப்­பட்­டது.

இந்த நிலை­யில் முட்­டைக்­கும் அங்கு தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ள­தால் முட்டை விரும்­பி­கள் சோக­ ம­டைந்­துள்­ள­னர். சந்­தைக்கு எவ்­வ­ளவு முட்­டை­கள் விற்­ப­னைக்கு வந்­தா­லும் உடனே தீர்ந்­து­வி­டு­கிறது என்று­சந்­தை­யைச் சேர்ந்­த­வர்­கள் கூறு­கின்­ற­னர். இதே நிலைமை தொட­ரும் என்­ப­தால் அவர்­கள் கவ­லை­ அ­டைந்­துள்­ள­னர்.

"கடை­க­ளுக்கு முட்­டை­கள் வந்த­­தும் ஒரு சில மணி நேரங்­களில் தீர்ந்­து­வி­டு­வ­தாக எங்­க­ளு­டைய உறுப்­பி­னர்­கள் மூலம் அறி­கி­றோம்," என்று மலே­சிய சில்­லறை பொருள் வியா­பா­ரி­கள் சங்­க கூட்­ட­மைப்பின் தலை­வர் ஹொங் சீ மெங் கூறி­னார்.

கோழித் தீவ­னங்­க­ளின் விலை அதி­க­ரித்­துள்­ள­தால் கோழிப் பண்­ணை­யா­ளர்­கள் உற்­பத்­தியை குறைத்­து­விட்­ட­னர் என்றார் அவர்.

சோளம், சோயா ஆகிய இரண்டு பொருள்­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட கோழித் தீவ­னங்­கள் அண்­மையக் கால­மாக அதிக விலைக்கு விற்­கப்­ப­டு­கின்­றன. இதனால் கோழிப் பண்ணையாளர்கள் உற்பத்தியை குறைத்து வரு கின்றனர்.

இதற்­கி­டையே, தாங்­கள் வசிக்­கும் பகு­தி­களில் முட்டை எப்­போது விற்­ப­னைக்கு வரும் என்ற எதி­பார்ப்­பு­டன் குடியிருப்பாளர்கள் சமூக ஊட­கங்­களைக் கண்­கா­ணித்து வரு­கின்­ற­னர்.

"ஃபேஸ்புக் சமூ­கக் குழுக்­களை கண்­கா­ணித்து முட்டை வந்து விட்­டதா என்­பதை தெரிந்­து­கொள்­ கிறோம். ஏதா­வது கடை­களில் முட்­டை­கள் வந்­தால் உடனே ஓடிச் சென்று வரி­சைப்­பி­டித்து வாங்கி விடு­கி­றோம்," என்று ஜோகூர் பத்து பகாட் இல்­லத்­த­ர­சி­யான லிம் அய் ஸ்வாம், 45 தெரி­வித்­தார்.

திரு­மதி லிம்­மின் குடும்­பத்­துக்கு வாரம் 20 முட்­டை­க­ளா­வது தேவை. தற்­போ­தைய தட்­டுப்­பாட்­டால் முன்­னெப்­போ­தும் இல்­லாத திண்­டாட்­டத்தை அந்த குடும்­பம் சந்­திக்­கிறது.