கோழி இறைச்சி ஏற்றுமதி விவகாரத்திலிருந்து மீண்டுள்ள மலேசியா, தற்போது 'முட்டை' தலை வலியை எதிர்நோக்குகிறது.
உள்ளூர் தட்டுப்பாட்டை போக்கு வதற்காக சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு 'பிராய்லர்' கோழி இறைச்சி ஏற்றுமதி செய்வதை அந்நாடு நிறுத்தி வைத்திருந்தது.
இம்மாதம் 11ஆம் தேதி அந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் முட்டைக்கும் அங்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் முட்டை விரும்பிகள் சோக மடைந்துள்ளனர். சந்தைக்கு எவ்வளவு முட்டைகள் விற்பனைக்கு வந்தாலும் உடனே தீர்ந்துவிடுகிறது என்றுசந்தையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். இதே நிலைமை தொடரும் என்பதால் அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
"கடைகளுக்கு முட்டைகள் வந்ததும் ஒரு சில மணி நேரங்களில் தீர்ந்துவிடுவதாக எங்களுடைய உறுப்பினர்கள் மூலம் அறிகிறோம்," என்று மலேசிய சில்லறை பொருள் வியாபாரிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் ஹொங் சீ மெங் கூறினார்.
கோழித் தீவனங்களின் விலை அதிகரித்துள்ளதால் கோழிப் பண்ணையாளர்கள் உற்பத்தியை குறைத்துவிட்டனர் என்றார் அவர்.
சோளம், சோயா ஆகிய இரண்டு பொருள்களை அடிப்படையாகக் கொண்ட கோழித் தீவனங்கள் அண்மையக் காலமாக அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதனால் கோழிப் பண்ணையாளர்கள் உற்பத்தியை குறைத்து வரு கின்றனர்.
இதற்கிடையே, தாங்கள் வசிக்கும் பகுதிகளில் முட்டை எப்போது விற்பனைக்கு வரும் என்ற எதிபார்ப்புடன் குடியிருப்பாளர்கள் சமூக ஊடகங்களைக் கண்காணித்து வருகின்றனர்.
"ஃபேஸ்புக் சமூகக் குழுக்களை கண்காணித்து முட்டை வந்து விட்டதா என்பதை தெரிந்துகொள் கிறோம். ஏதாவது கடைகளில் முட்டைகள் வந்தால் உடனே ஓடிச் சென்று வரிசைப்பிடித்து வாங்கி விடுகிறோம்," என்று ஜோகூர் பத்து பகாட் இல்லத்தரசியான லிம் அய் ஸ்வாம், 45 தெரிவித்தார்.
திருமதி லிம்மின் குடும்பத்துக்கு வாரம் 20 முட்டைகளாவது தேவை. தற்போதைய தட்டுப்பாட்டால் முன்னெப்போதும் இல்லாத திண்டாட்டத்தை அந்த குடும்பம் சந்திக்கிறது.