ஆக உயரத்தில் இருக்கும் சிங்கப்பூரின் வீடு

ஆக உயரத்தில் இருக்கும் சிங்கப்பூரின் வீடு

2 mins read
393ca14a-a859-4b98-94f8-99dd8c4f9a2a
ஓவியரின் கைவண்ணத்தில் 8, ஷென்டன்வே கட்டடம். படம்: எஸ்­ஓ­எம் -

ஆக உய­ரத்­தில் இருக்­கும் சிங்­கப்­பூ­ரின் வீடு ஷென்­டன் வே பகு­தி­யில் கட்­டப்­பட்டு வரு­கிறது. 63 மாடி­க­ளைக் கொண்ட கட்ட­டத்­தின் உச்சி மாடி­யில், 305 மீட்­டர் உய­ரத்­தில் இந்த வீடு அமைந்­தி­ருக்­கும். இந்த பிரம்­மாண்ட வீட்­டி­லி­ருந்து தென் சீனக் கடலை தெளி­வா­கப் பார்க்­க­லாம்.

சிறப்பு மின்­தூக்­கி­யில் 305 மீட்­டர் உய­ரத்தை ஒரு நிமி­டத்­திற்­கும் குறை­வான நேரத்­தில் சென்­ற­டைய முடி­யும். இந்த வீட்­டின் மற்ற அம்­சங்­கள் குறித்து மேல் தக­வல்­கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

எண் 8, ஷென்­டன் வேயில் கட்­டப்­படும் இந்த அடுக்­கு­மாடி, சிங்­கப்­பூ­ரின் ஆக உய­ர­மான கட்­ட­ட­மா­க­வும் திக­ழும். 148,000 சதுர மீட்­ட­ருக்­கும் அதி­க­மான தள பரப்பைக் ­கொண்ட இந்­தக் கட்­ட­டத்­தில் அலு­­வல­கங்­கள், சொகுசு வீடு­கள், கடை­கள், பொது இடங்­கள் ஆகி­ய­வற்­றோடு ஹோட்­ட­லும் அமை­கிறது.

கட்டு­மா­னப் பணி­கள் 2028ல் நிறை­வடை­யும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

64 மாடி­கள் கொண்­ட 'குவாகோ டவுர்' அடுக்­கு­மா­டி­யின் மேல்­ த­ளத்­தில் உள்ள வீடே, தற்­போது சிங்கப்­பூ­ரின் ஆக உய­ரத்­தில் இருக்­கும் வீடா­கும். 283.7 மீட்­டர் உய­ரத்­தில் உள்­ள அந்த வீட்டை, பிரிட்­டிஷ் தொழில்­மு­னை­வ­ரான ஜேம்ஸ் டைசன் 2019ல் $73.8 மில்­லி­ய­னுக்கு வாங்­கி­னார்.

அந்­தக் கட்­ட­டத்தை வடி­வ­மைத்த ஸ்கிட்­மோர், ஓவிங்ஸ் & மெரில் (எஸ்­ஓ­எம்) எனும் அமெ­ரிக்க வடி­வ­மைப்பு நிறு­வ­னத்­தின் வடி­வ­மைப்­பா­ளர்­களே ஷென்­டன் வே கட்­ட­டத்­தை­யும் வடி­வ­மைக்­கி­றார்­கள்.

இந்­தக் கட்­ட­டம் சுரங்க நடை­பாதை வழி­யாக தஞ்­சோங் பகார் எம்­ஆர்டி நிலை­யத்­து­டன் இணைக்­கப்­படும். சில்­லறை விற்­பனை இடங்­கள் மூன்று மாடி­க­ளைக் கொண்­டி­ருக்­கும்.

அலு­வ­லக இடங்­கள் மூன்­றா­வது மாடி­யில் இருந்து 22வது மாடி வரை அமை­யும். 24 முதல் 26வது மாடி வரை ஹோட்­டல் அமை­கிறது. 27வது மாடி முதல் 63வது மாடி வரை­யில் குடி­யி­ருப்பு இடம்­பெ­று­கிறது. 10,000 சதுர மீட்­ட­ருக்­கும் அதி­க­மான பொது பசுமை இடத்­தை­யும் இக்­கட்­ட­டம் கொண்­டி­ருக்­கும்.

கட்­ட­டத்­தில் உள்ள அனை­வ­ரும் வெளிச்­சூ­ழலை எளி­தாக அணு­கும் வகை­யில், பல தளங்­களை ஆகா­யத் தோட்­டத்­து­டன் இணைக்­கும் வகை­யில் கட்­ட­டம் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ள­தாக வடி­வ­மைப்­பா­ளர் திரு முஸ்­தபா அபா­டன் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் தெரி­வித்­தார்.