வேலைச் சந்தை மேம்பட்டாலும் வேகம் மெதுவடையலாம்

வேலைச் சந்தை மேம்பட்டாலும் வேகம் மெதுவடையலாம்

3 mins read

ஆட்­கு­றைப்­பும் வேலை­யின்மை விகி­த­மும் அதி­க­ரித்­து­வ­ரும் நிலை­யில் சிங்­கப்­பூ­ரின் வேலைச் சந்தை, மூன்­றாம் காலாண்­டில் தொடர்ந்து மேம்­பட்­டி­ருந்­தா­லும் அந்த மேம்­பாட்­டின் வேகம் மெது­வ­டை­வ­தற்­கான அறி­கு­றி­கள் தெரி­வ­தாக மனி­த­வள அமைச்சு நேற்று வெளி­யிட்ட தர­வு­களில் தெரி­ய­வந்­துள்­ளது. முந்­தைய காலாண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் மொத்த வேலை­வாய்ப்­பில் 75,600 அதி­க­ரிப்பு பதி­வா­னது.

இதற்­கி­டையே, வேலை­யின்மை விகி­தத்­தி­லும் ஆட்­கு­றைப்­பி­லும் சிறி­த­ளவு அதி­க­ரிப்பு பதி­வா­னது.

"வேலைச் சந்தை மீண்­டு­வரு­வ­தன் வேகம் குறை­வ­தற்­கான அறி­கு­றி­கள் தென்­பட்­டா­லும் கொவிட்-19 உடன் வாழ்­வதை நோக்கி நாடு செல்­வ­தும் பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­களும் எல்­லைக் கட்­டுப்­பா­டு­களும் படிப்­படி­யாக அகற்­றப்­ப­டு­வ­தும் கடந்த சில காலாண்­டு­க­ளாக வேலைச் சந்­தை­யின் மீட்­சிக்கு ஆத­ர­வாக உள்­ளன," என்­றது அமைச்சு.

நலி­வ­டைந்து வரும் அனைத்­து­லக பொரு­ளி­யல் சூழல், அதி­க­மான உல­க­ளா­விய பண­வீக்­கம், நாடு­க­ளுக்­கி­டையே பதற்­ற­நிலை போன்­றவை வேலைச் சந்­தையை வரும் மாதங்­களில் பாதிக்­கும் என்­றும் அமைச்சு சுட்­டி­யது.

மூன்­றாம் காலாண்­டில் ஆட்­கு­றைப்பு எண்­ணிக்கை 1,600க்கு அதி­க­ரித்­தது. இது முந்­தைய காலாண்­டின் 830ஐக் காட்­டி­லும் இரு­ம­டங்­கா­கும். ஆட்­கு­றைப்­புக்கு ஆளான 1,100 பேர், சேவை­கள் பிரி­வி­லும் 500 பேர் உற்­பத்­தித் துறை­யி­லும் இருந்­த­வர்­கள் ஆவர்.

நிறு­வன மறு­சீ­ர­மைப்­பின் கார­ண­மா­கச் சேவைத் துறை­யிலும் அனைத்­து­லக அள­வில் பொருள்­க­ளின் உற்­பத்தி நிறுத்­தப்­பட்­ட­தால் உற்­பத்­தித் துறை­யிலும் ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்­ட­தாக அமைச்சு விளக்­கி­யது.

"அதி­கப்­ப­டி­யான பண­வீக்­கம், கடு­மை­யான மத்­திய வங்­கி­யின் நிதிக் கொள்­கை­கள், அர­சி­யல் நிலை­யற்­ற தன்மை என்ற சூழ­லில் அனைத்­து­லக பொரு­ளி­யல், வீழ்ச்சி காணும் என்று எதிர்­பார்த்து நிறு­வ­னங்­கள் தங்­க­ளின் வர்த்­த­கச் செயல்­பா­டு­களை மாற்றி அமைக்­க­லாம் மற்றும் ஆட்­குறைப்பு செய்­ய­லாம்," என்­றது அமைச்சு. கட்­டு­மா­னத் துறை­யில் மிகச் சிறிய எண்­ணிக்கை அல்­லது அறவே ஆட்­கு­றைப்பு இல்லை.

இருப்­பி­னும் கொள்­ளை­நோய்க்கு முந்­தைய கால­கட்­டத்­தில் பதி­வான விகிதத்­து­டன் நிக­ராக இவ்­வாண்­டின் மூன்­றாம் காலாண்­டின் வேலை­யின்மை விகி­தம் இருந்­த­தென அமைச்சு சுட்­டி­யது.

அத்­து­டன் 2018, 2019 ஆண்டு­களின் சரா­சரி காலாண்டு விகித அடிப்­ப­டை­யில், கொள்­ளை­நோய்க்கு முன் பதி­வான அள­வைக் காட்­டி­லும் ஆட்­கு­றைப்பு விகி­தம் இவ்­வாண்டு மூன்­றாம் காலாண்­டில் ஒரு படி குறை­வாக இருந்­த­தென்­றும் கூறப்­பட்­டது.

இவ்­வாண்­டின் இரண்­டாம் காலாண்­டில் 66,500 வேலை­வாய்ப்­பு­கள் பதி­வா­ன­தைக் காட்­டி­லும் மூன்­றாம் காலாண்­டில் அதி­க­மான வேலை­வாய்ப்­பு­கள் பதி­வா­கின. 1991ஆம் ஆண்­டுக்­குப் பிறகு இதுவே ஆக அதி­க­மான எண்­ணிக்கை என்று அமைச்­சின் தரவு­கள் கூறு­கின்­றன.

இருப்­பி­னும், பொரு­ளி­யல் வளர்ச்சி குறைந்து வரு­வ­தற்கு இடையே வேலை­வாய்ப்­பு­க­ளின் வளர்ச்­சி­யும் குறை­வ­தற்­கான ஒரு­சில முன்­கட்ட அறி­கு­றி­கள் உள்­ள­தென அமைச்சு தெரி­வித்­தது. குறிப்­பாக, கட்­டு­மா­னத் துறை­யிலும் உற்­பத்­தித் துறை­யி­லும் உள்ள ஊழி­யர்­களில், வெளி­நாட்­ட­வர் பெரும்­பான்­மை­யி­னர் என்ற நிலை­யில் குடி­யி­ருப்­பா­ளர் அல்­லா­த­வர்­க­ளால் வேலை­வாய்ப்­பு­கள் அதி­க­ரித்­துள்­ளன.

மேலும் அதி­க­மான சிங்­கப்­பூரர்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் அடங்­கிய குடி­யி­ருப்­பா­ளர்­கள், வேலை­வாய்ப்­பைப் பெற்­ற­போ­தும் முந்­தைய காலாண்­டு­டன் ஒப்­பிடு­கை­யில் வேலை­வாய்ப்பு அதி­கரிப்பு சற்று மெது­வ­டைந்­துள்­ள­தாக அமைச்சு குறிப்­பிட்­டது.

தக­வல்­தொ­டர்பு, நிபு­ணத்­து­வச் சேவை­கள், நிதிச் சேவை­கள் ஆகி­ய­வற்­றில் குடி­யி­ருப்­பா­ளர் வேலை­வாய்ப்­பு­கள் அதி­க­ரித்­திருந்­தன. செப்­டம்­ப­ரில் குடி­யி­ருப்­பா­ளர் வேலை­யின்மை விகி­தம் 2.9 விழுக்­கா­டும் சிங்­கப்­பூ­ர­ரின் வேலை­யின்மை விகி­தம் 3.1 விழுக்­கா­டும் அதி­க­ரித்­தன. ஜூனில் வேலை­யில்லா குடி­யி­ருப்­பா­ளர்­களின் எண்­ணிக்கை 69,300ஆக இருந்­தது. அது செப்­டம்­ப­ரில் 70,900 ஆக அதி­க­ரித்­தது.