இந்தியாவுடனான தனது தொடர்பு குறித்து பிரிட்டிஷ் பிரதமர் சுனக்

இந்தியாவுடனான தனது தொடர்பு குறித்து பிரிட்டிஷ் பிரதமர் சுனக்

1 mins read
5c5b3e0a-6163-4ffe-8347-9bb405c8ee90
(இடம்) இந்தியப் பிரதமர் மோடி, பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக். படங்கள்: ராய்ட்டர்ஸ் -
multi-img1 of 2

பிரிட்­ட­னின் புதிய பிர­த­ம­ராக பதவி­ ஏற்­றுள்ள இந்­திய வம்­சா­வ­ளி­யைச் சேர்ந்த ரிஷி சுனக், இந்­திய பிர­த­மர் நரேந்­திர மோடி­யி­டம் பேசு­கை­யில், 'பிரிட்­ட­னுக்­கும் இந்­தி­யா­வுக்­கும் இடை­யி­லான வர­லாற்­றுத் தொடர்­பு­க­ளுக்­குத் தாம் ஒரு பிர­தி­நிதி உரு­வம்' என்று குறிப்­பிட்­டி­ருந்­தார். தீபா­வளி அன்று முடி­வாக வேண்­டிய வர்த்­தக ஒப்­பந்­தம் ஒன்று கூடிய விரை­வில் கைகூ­டு­வ­தைத் தாம் எதிர்­பார்ப்­ப­தா­க­வும் திரு சுனக் கூறி­யி­ருந்­தார்.

இரண்டு மாதங்­களில் பிரிட்­ட­னின் மூன்­றா­வது பிர­த­ம­ராக திரு ரிஷி சுனக் கடந்த செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று பத­வி­யேற்­றார். அதை­ய­டுத்து திரு மோடிக்­கும் அவ­ருக்­கும் நிகழ்ந்த முதல் உரை­யா­டல் இது. இரு நாடு­களும் மேலும் அணுக்­க­மான ஓர் உறவை வளர்த்­துக்­கொள்­வதே தமது திட்­டம் என்­றும் திரு சுனக் கூறி­யி­ருந்­த­தாக அவ­ரின் அலு­வ­ல­கம் தெரி­வித்­தது. முழு­மை­யான ஒரு திறந்த வர்த்­தக ஒப்­பந்­தத்தை முடி­வு­செய்­வ­தன் தொடர்­பாக பிரிட்­ட­னும் இந்­தி­யா­வும் தங்­களின் பேச்­சு­வார்த்­தை­யில் நல்ல முன்­னேற்­றம் காண்­பதே பிர­த­ம­ரின் விருப்­பம் என்­றது அலு­வ­ல­கம்.

உல­கின் வளர்ந்­து­வ­ரும் நாடு­களை வலு­வாக்க, இரு பெரும் ஜன­நா­யக நாடு­க­ளாக இந்­தி­யா­வும் பிரிட்­ட­னும் இணைந்து செயல்­பட இணக்­கம் தெரி­வித்­துள்­ள­தா­க­வும் கூறப்­பட்­டது. பாது­காப்பு, தற்­காப்பு, பொரு­ளி­யல் பங்­கா­ளித்­து­வம் ஆகிய அம்­சங்­களில் இரு நாடு­களும் ஒத்­து­ழைப்பு வழங்க உள்­ள­தா­க­வும் தெரிவிக்கப்பட்டது.