வீவக பற்றாக்குறை இரு மடங்காக அதிகரித்தது மார்ச் 31ஆம் தேதியுடன் முடிந்த நிதியாண்டில் $4.367 பில்லியனாக உயர்ந்தது

வீவக பற்றாக்குறை இரு மடங்காக அதிகரித்தது மார்ச் 31ஆம் தேதியுடன் முடிந்த நிதியாண்டில் $4.367 பில்லியனாக உயர்ந்தது

2 mins read

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கத்­தின் நிதிப் பற்­றாக்­குறை மார்ச் மாதம் 31ஆம் தேதியுடன் முடி­வ­டைந்த நிதி ஆண்­டில் சாதனை அள­வாக $4.367 பில்­லி­ய­னா­கி­யது. இது, அதற்கு முந்­திய ஆண்டு பற்­றாக்­கு­றை­யான $2.346 பில்­லி­யன் தொகை­யு­டன் ஒப்­பி­டு­கை­யில் ஏறத்­தாழ 86 விழுக்­காடு அதி­கம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

கட்­டப்­பட்டு வரு­கின்ற அடுக்­கு­மாடி வீடு­கள் தொடர்­பில் எதிர்­பார்க்­கப்­படும் இழப்­பு­கள், மத்­திய சேம­நிதி வீட்டு மானியம் வழங்­கீடு, வீட்டு உடை­மைத் திட்­டத்­தின்­கீழ் வீடு­களை மானி­யத்­துடன் விற்­ப­தால் ஏற்­ப­டக்­கூ­டிய இழப்பு ஆகி­ய­வையே வீவக பற்­றாக்­கு­றை­யில் பெரும் பங்கு ($3.85 பில்­லி­யன்) வகிக்­கின்­றன.

வீவக நேற்று இந்த விவ­ரங்­க­ளைத் தெரி­வித்­தது.

வீட்டு உடைமைச் செயல்­திட்­டத்­தின்­கீழ் ஏற்­பட்டு உள்ள இழப்பு, முந்­திய ஆண்டு இழப்­பை­விட கிட்­டத்­தட்ட இரண்டு மடங்­காக இருக்­கிறது.

சென்ற ஆண்­டில் 66 விழுக்­காடு அதி­க­மான பிடிஓ திட்­டங்­கள் செயல்படத் தொடங்­கின. முன்­னி­லும் அதி­க­மான வீடு­கள் விற்­கப்­பட்­டன. இவையே இந்த இழப்­பிற்குக் கார­ணம் என்று கழ­கம் விளக்­கி­யது.

கழ­கம் நேற்று தனது ஆண்­ட­றிக்­கையை வெளி­யிட்­டது. அதற்கு முன்­பாக வெள்­ளிக்­கி­ழமை அது செய்­தி­யாளர்­க­ளுக்கு விளக்­கம் அளித்­தது.

முன்­பெல்­லாம் கழ­கம் தனது அறிக்­கையை சாதாரணமாக வெளி­யிட்­டு­விடும். கடந்த இரண்­டாண்­டு­களில் வீட்டு விலை­கள் அதி­க­ரித்து வந்­துள்­ளன. இத­னால் வீடு­க­ளின் விலை­கள் வாங்க முடி­யாத அள­வுக்குக் கைமீறிப் போய்­விடுமோ என்ற கவலை அதி­க­ரித்து இருக்­கிறது.

இந்­தச் சூழ்­நி­லை­யில், கழ­கம் செய்தி­யா­ளர் சந்திப்பை நடத்தி பிறகு அறிக்­கையை நேற்று வெளி­யிட்­டது.

இத­னி­டையே, வீவக பற்­றாக்­குறை பற்றி கருத்துக் கூறிய தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ, வீட்­டு­டைமைத் திட்­டத்­தின்­கீழ் கழ­கத்­திற்கு ஏற்­பட்­டுள்ள கணி­ச­மான இழப்பு, பொது வீடு­கள் மக்­க­ளுக்குத் தாக்­குப்­பி­டிக்­கக்­கூ­டிய வகை­யில், அவர்­க­ளுக்கு எட்­டக்­கூ­டிய வகை­யில், எல்­லா­ரை­யும் உள்­ள­டக்­கும் வகை­யில் இருப்­பதை உறு­திப்­ப­டுத்த அர­சாங்­கம் கொண்­டுள்ள கடப்­பாட்டை வெளிப்­ப­டுத்­து­வ­தா­கத் தெரி­வித்­தார்.

செய்­தி­யா­ளர் விளக்கக் கூட்­டத்­தில் பேசிய வீவக தலைமை நிர்­வாகி டான் மெங் டுய், புதிய அடுக்­கு­மாடி வீடு­களுக்குக் கொடுக்­கப்­பட்ட மானி­யமே சாதனை அள­வி­லான பற்­றாக்­கு­றைக்­குப் பெரி­தும் கார­ணம் என்று விளக்­கி­னார்.

அதோடு, வீவக வீட்டு மானிய விநி­யோ­க­மும் மேலும் அதிக வீடு­க­ளின் கட்­டு­மா­னத் தொடக்­க­மும் கொவிட்-19 கார­ண­மாக ஏற்­பட்ட கட்­டு­மா­னச் செலவு அதி­க­ரிப்­பும் இதர கார­ணங்­கள் என்று அவர் மேலும் குறிப்­பிட்­டார்.

பிடிஓ வீடு­க­ளின் விலை­கள் கழ­கத்­திற்கு ஏற்­ப­டக்­கூ­டிய மொத்தக் கட்­டு­மானச் செல­வு­க­ளின் அடிப்­ப­டை­யில் நிர்­ண­யிக்­கப்­ப­டு­வ­தில்லை என்­றாரவர்.

மொத்தக் கட்­டு­மானச் செல­வில் நிலத்­தின் விலை­யும் வீடு­களைக் கட்­டு­வ­தற்­கான செல­வு­களும் உள்­ள­டங்­கும்.

அப்­படி நிர்­ண­யிப்­ப­தற்­குப் பதி­லாக புதிய வீடு­க­ளின் சந்தை மதிப்பை கழ­கம் தீர்­மா­னிக்­கிறது. அதற்கு அரு­கில் இருக்­கும் ஒப்­பி­டத்­தக்க மறு­விற்­பனை வீடு­களை அது கருத்­தில் கொள்­கிறது.

குடும்ப வரு­மா­னம், மக்­க­ளுக்குக் கிடைக்­கக்­கூ­டிய வீடு­களின் வகைகள் ஆகி­ய­வற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்டு வீடு­கள் மக்­க­ளுக்கு கட்­டுப்­படி­யா­கக்­கூ­டிய நிலை­யில் இருப்­பதை உறு­திப்­படுத்தி, அதற்­காக கணி­ச­மான மானி­யத்தை கழ­கம் வழங்­கு­கிறது என்று அவர் மேலும் விளக்­கி­னார்.